என்னங்க .. நான் சரியா தூங்கவே முடியலே தூங்குறதுக்கே எனக்கு நேரமில்லை. தூங்கவே முடியல அதுக்குள்ள.. நீங்க அதிக நேரம் தூங்கறீங்களான்னு ஒரு கேள்வி கேட்டா எனக்கு கோபம் தான் வருது. வாசகர்களின் கோபம் புரிகிறது. தூக்கம் வராதவங்க தூங்கறதுக்கு நேரம் இல்லாம வேலை பார்க்கின்ற ஜனங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்கதான் இந்த விஷயத்தைச் சொல்றோம். ஒரு மனுசன் குறைந்தது 7 லிருந்து 9 மணிநேரமாவது தூங்கணும்ணு டாக்டர்கள் சொல்றாங்க. நான் சரியான அளவு தூங்கறேன். தானே என்று நீங்கள் உங்களை உறுதி செய்து கொள்வதற்கு முன்பு அவங்க சொல்ற பட்டியல்ல சொன்ன விபரத்தை படிச்சுப் பாருங்க ப்ளிஸ்.
அதிகமான மன அழுத்தத்தை உருவாக்கும்
2014 ஆம் ஆண்டு அதிக நேரம் தூங்கும் நபர்களை இரண்டு, மூன்று பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு சோதனை செய்து பார்த்ததில் அதிக நேரம் தூங்குபவர்கள் அதிக மன அழுத்தம், பிரச்சனையை சந்தித்தனர் என்று தெரியவந்தது. நாள் ஒன்றுக்கு 7முதல் 9 மணி நேரம் மட்டும் தூங்கியவர்கள் 27% மன அழுத்தம் உடையவர்களாகவும். 9 மற்றும் 9 மணி நேரத்திற்கு மேல் தூங்கியவர்கள் 49 சதவீத மன அழுத்தம் உடையவர்களாகவே காணப்பட்டனர்.
மூளை செயல்பாடுகளை பாதிக்கிறது. மிகவும் அதிக நேரம் அல்லது மிகவும் குறைந்த நேரம் என்று தூங்கிய 30 முதல் 40 வயதுக்குரிய பெண்களை கடந்த ஆறு ஆண்டுகாலத்தை அளவீடாக எடுத்து சோதித்து பார்த்ததில் 9 மணிநேரத்திற்கும் அதிகமாக அல்லது 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கியவர்களின் மூளை செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
தாய்மைப்பேறு அடைவது கடினமாக இருக்கும்
ஸ்வீtக்ஷீஷீ யீமீக்ஷீtவீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ சோதனையில் சுமார் 650 பெண்களை தூங்கும் பழக்க வழக்கங்களில் உள்ள மாறுபாட்டின் விளைவுகளை அறிந்து கொள்ள கொரிய மருத்தவ குழு ஒன்று ஆராய்ச்சி மேற்கொண்டது.
தினசரி இரவு 7 முதல் 8 வரை தூங்கும் பெண்கள் கருத்தரிக்கும் எண்ணிக்கை அதிகமாகவும் 9முதல் 11 மணிநேரம் தூங்கும் பெண்கள் கருத்தரிப்பது குறைவாகவும் காணப்பட்டது. இருப்பினும் இதற்கு வலு சேர்க்கும் வண்ணம் மற்ற காரணங்கள் கூறப்படவில்லை. தூக்க நேர வேறுபாடுகள் ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளை, மாதவிலக்குச் சுழற்சிகளினால் பொறுத்து மாறுபடும் என்று கருத்தரிப்பு சிறப்பு மருத்துவர் ஒருவர் கூறினார்.
அதிக அளவு விபரங்கள் அறிந்தபின்பு தான் தூக்கநேர மாறுபாடுகளையும் கருத்தரிக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை விகிதத்தையும் கூற இயலும் என்று மேலும் அவர் கூறினார்.
நீரிழிவு ஏற்பட வாய்ப்புண்டு
8மணி நேரத்திற்கு மேலாக தூங்குபவர்களுக்கு இரண்டு மடங்கு சந்தர்ப்பங்கள் உண்டு அல்லது ஆறு வருடங்களுக்கு மேலாக அவர்கள் உடம்பில் குளுக்கோஸ் அளவில் ஏற்றத்தாழ்வு காணப்படும். ஆனால் 7முதல் 8 மணிநேரம் இரவு தூங்குபவர்களிடம் தாக்கம் பெருமளவு காணப்படாது என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
உடல் எடை அதிகரிக்கும்
வயது வந்தவர்களின் ஆறாண்டு காலத்தில் காணப்பட்ட அவர்களின் உடல் எடை மற்றும் பொழுப்பின் அளவை ஆராய்ச்சி செய்தனர்.
7முதல் 8 மணிநேரம் இரவு தூங்குபவர்களைவிட மிகவும் குறைவாக அல்லது மிகவும் கூடுதலாக தூங்குபவர்கள் அதிக எடையுள்ளவர்களாக காணப்பட்டார்கள் 9 முதல்10 மணிநேரம் தினசரி இரவு மேற்கூறிய காலங்கள் வரை தூங்கியவர்கள் தங்கள் சரியான உணவு அளவு கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியினை எடுத்துக் கொண்டாலும் 25% அளவு உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்கள். உடல் பருமன் மற்றும் எடை அதிகரிப்பிற்கு தூக்கநேரத்தின் அளவும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
இதயத்திற்கு வலி உருவாக்கும்
இதயம் சார்ந்த பிரிவின் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி அறிக்கை ஒன்றின் படி 8 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தூங்குபவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்ச¬கைள் அதிகரிக்க வழி உண்டாகும் என்று தெரிய வருகிறது.
மேற்கூறிய மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சிப்பிரிவானது 3000 த்திற்கும் மேற்பட்டவர்கள் பரிசோதித்துப் பார்த்தனர். நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் 2 மடங்கு ஆஞ்சினா (ணீஸீரீவீஸீணீ) என்ற இதயக்கோளாறும் 1.1 மடங்கு கரோனரி ஆரிட்டரி நோய் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புக்கள் உண்டு என்று மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது.
கூடுதல் தூக்கம் விரைவில் மரணம்
அதிக நேரம் அல்லது மிகவும் குறைவான நேரம் உறங்கும் மனிதர்களுக்கும் விரைவில் மரணம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
முருகன்