சர்க்கரை வியாதி வராமல் தடுக்க, முன்பு நாம் பார்த்தபடி, பாரம்பரிய காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர் இருவரும் சர்க்கரை நோயாளிகளென்றால், பிள்ளைகளுக்கும் கண்டிப்பாக வரும். பெற்றோர் ஒருவருக்கு மட்டும் இருந்தால் பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பு 40 சதவீதம். பெற்றோரில் ஒருவருக்கும் நெருங்கிய உறவினரில் யாருக்காவது இருந்தாலும், பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பு 70 சதவீகிதம்.
1.நீரிழிவு நோயின் கட்டங்கள்:
நீரிழிவிற்கு முந்தைய கட்டம் The pre – diabetic stage
இது நீரிழிவு நோய் பாதிக்காத ஆனால் கீழ்க்கண்ட காரணங்களால் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்களைக் குறிக்கும்.
தாய் தந்தையர் நீரிழிவு நோயாளிகளாக இருப்பவர்கள்.
அதிக எடை மற்றும் பெரிய தலையை உடைய குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள்.
அடிக்கடி கருக்கலைப்பு செய்யும் பெண்கள்.
2. மறைந்திருக்கும் கட்டம்: The latent stage
நீரிழிவு உடலை தாக்கி இருக்கும் ஆனால் வெளியில் சாதாரண பரிசோதனைகள் மூலம் தெரியாத கட்டம். இதற்கு சிறப்பு பரிசோதனை முறைகள் தேவைப்படும்.
3. இரசாயன கட்டம்: Chemical stage
இக்கட்டத்தில் எந்தவித நீரிழிவு அறிகுறிகளும் தென்படாது ஆனால், இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்க்கும் பொழுது சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும்.
4. மருத்துவ கட்டம்: Clinical stage
இக்கட்டம் கண்டறியப்பட்ட நீரிழிவை மருத்துவரிடம் சென்று காண்பித்து மருத்துவம் செய்து கொண்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் கட்டம்.
5. சிக்கல் கட்டம்: Stage of complications
இக்கட்டம் எல்லா வகை மருத்துவமும் செய்து எந்த பயனும் இல்லாமல் பிரச்சனை ஆகி சிக்கலில் போய் விடும் கட்டம். உயர் இரத்த அழுத்தத்தைப் போலவே நீரிழிவு நோயும் ஒரு மறைந்திருந்தே கொல்லும் நோய் ஆகும். நீரிழிவு நோய் அனேக சிக்கல்களை விளைவித்து உயிரையே பறிக்கக் கூடியது.
எனவே நீங்கள் 30 வயதிலிருந்தே பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மாதிரி முன் எச்சரிக்கை எடுத்துக் கொண்டால் சர்க்கரை வியாதியிலிருந்து தப்பலாம் – குறைந்த பட்சம் டைப் – 1 நோயிலிருந்து தப்பலாம்.
தவிர பாரம்பரிய காரணங்கள் இருந்தால், நீங்கள் படிப்படியாக, நீரிழிவு நோயாளிகள் கடைபிடிக்கும் உணவு முறைகள், வாழ்க்கை முறை மாறுதல், சர்க்கரையை தவிர்த்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.