மாம்பழ ஜாம் செய்வதற்குப் பழச்சதை அதிகமாக உள்ள பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நன்கு முதிர்ந்த பழுத்த பழங்களையும் நல்ல பழங்களைத் தண்ணீரில் நன்கு கழுவிய பின்பு, துரு ஏறாத கத்தியினால் பழத்தின் தோலை மாத்திரம் சீவிய பின்பு, பழச் சதையை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். துண்டாக்கப்பட்ட பழச்சதையை கூழ் போல செய்து கொண்டு, ஒரு எவர் சில்வர் பாத்திரத்தில் போட்டு 1000 கிராம் கூழுக்கு 650 கிராம் சர்க்கரை வீதம் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். இவற்றை ஜாம் பதம் வரும் வரை (65 சதவீதம் மொத்தக் கரையும் பொருள் வரும் வரை) அடுப்பில் வைத்திருக்க வேண்டும். காய்ச்சிம் பொழுது சிறிது சிட்ரிக் அமிலம் சேர்த்துக் கொள்ளலாம். ஜாம் பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி, முதலிலேயே கழுவி கொதி நீரில் காய்ச்சப்பட்ட பாட்டிலில் ஊற்றி காற்றுப் புகாமல் அடைக்க வேண்டும் இவற்றைக் குளிரச் செய்து, ஈரப்பசை இல்லாத அறைகளில் சேமிக்கவும்.
மாம்பழ ஜாம் தயாரிக்கத்
தேவையானவை
மாம்பழக் கூழ் – 1 கிலோ
சர்க்கரை 650 கிராம்.
சிட்ரிக் அமிலம் – 1.5 கிராம்.
மேங்கோ ஸ்குவாஷ்
(மாம்பழ நசுக்குச் சாறு):
மேங்கோ ஸ்குவாஷ், பானமாகவும், ஐஸ்கிரிமில் வாசனை சேர்க்கவும் உகந்தது. நன்கு முதிர்ந்து, பழுத்தும், நல்ல நிறத்துடன் கூடியதும், அதிக பழரசம் கொண்டதும், சொத்தல், அழுதல் இல்லாததுமான பழங்களைத தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாக நார் அதிகமாக இருக்கும் செருக்கு ரசம் போன்ற மா வகைகள் ஸ்குவாஷ; தயாரிக்க ஏற்றவை. பழங்களைச் சுத்தமான தண்ணீரில் கழுவி, கையினால் பிசைந்து, அவற்றைப் பழரசம் எடுக்க ஏதுவாகச் செய்ய வேண்டும். பழ ரசம் எடுத்த பின்பு, மஸ்லின் துணி போன்ற மெல்லிய துணியினால் வடிகட்டி விட வேண்டும். வேண்டிய அளவு சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து சர்க்கரைப் பாகு செய்ய வேண்டும். (மொத்தக் கரையும் பொருளின் அளவு 45 சதவீதம்) சர்க்கரைப் பாகையும், துணியால் வடிகட்ட வேண்டும். பழரசத்தைச் சர்க்கரைப் பாகில் கலந்த பின்பு, வேண்டிய அளவு சிட்ரிக் அமிலம், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட், சிறிது பழச்சாற்றில் கலந்த பின், மொத்தமாகக் கலக்க வேண்டும். பின்பு, இவற்றை நன்கு கழுவிய, கொதிநீர் போட்டுக் காய்ச்சிய பாட்டில்களில் ஊற்ற வேண்டும். ஊற்றும் பொழுது 2.3 செ.மி. குறைவாக ஊற்றிக் காற்றுப் புகா வண்ணம் அடைக்க வேண்டும். இவைகளாக குளிர்ந்த ஈரம் இல்லாத இடங்களில் வைக்க வேண்டும்.
மேங்கோ ஸ்குவாஷ்
தயாரிக்கத் தேவையானவை
பழரசம் – 1 கிலோ
தண்ணீர் 1 கிலோ
சர்க்கரை 1 கிலோ
சிட்ரிக் அமிலம் – 2 கிராம், மற்றும்
பொட்டாசியம் மெட்டா பை சல்பைட்
மேங்கோ கிரஷ்
எழு சீர் சீனிப்பாகு, மூன்று சீர் பழக் கூழ், 2.5 அவுன்சு சிட்ரிக் அமிலம், ரு அவுன்சு பொட்டாசியம் மெட்டா பை சல்பைட்டும் இட்டு மேலே கூறியது போல கலக்க வேண்டும்.
ஒரு வாரம் வரையில் வெயிலில் வைத்து, குங்குமப் பூ, ஏலப் பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்துத் தூவி பத்திரப்படுத்தி, தினசரி இரவில் சாப்பிட்டுக் காய்ச்சிய பசும்பால் பருகி வர இதயம் பலப்படும். பலம் விந்து பெருக்கத்திற்கும், விந்து விரைவில் வெளிப்படாமல் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
மாம்பழத்தை உண்ண நமைச்சலும், மார்பு எரிச்சலும், கண் நோயும், கருங்கரப்பானும் அதிகப்படும். பசி நீங்கும். இனிப்புள்ள மாம்பழத்தை உண்பதினால் உடல் பெருக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் பலம் தரும். மலம் தள்ளும். மூல நோய்க்கு ஆகாது. இதன் நார் வயிற்றில் சிக்குண்டால், வயிற்றுப் பீசம், வலி ஏற்படும். இந்தப் பழத்தை உண்ணும் போது பசுவின் பாலை அதிகம் குடிக்கச் சிறந்தது.