இளமையாக இருக்க எளிய மருத்துவம்!

Spread the love

பொதுவாக திரிபலா சூரணம் பலவிதமான பலன்களைக் கொடுக்க வல்லது. அதில் என்னென்ன அடங்கியுள்ளன? கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்து தயாரிக்கப்படும் சூரணம் திரிபலாவாகும் இவற்றின் தோல்களை எடுத்து சமஅளவில் சேர்த்து இடிக்க வேண்டும். இடித்த பொடியை துணிகொண்டு சலித்தால் மிக துண்ணிய பொடி கிடைக்கும் இப்பொடி தான் சேரும் திரவத்தைப் பொருத்து பலனைக் கொடுக்கும்.
திரிபலா பொடியை 150 கிராம் அளவில் எடுத்துக்கொள்ளவும். அதை ஒரு பீங்கான் பாத்திரத்தில் வைக்கவும். அதில் கருங்காலிக் கட்டை கஷாயத்தை ஏழு முறை ஊற்றி வற்றச்செய்ய வேண்டும். பிறகு வேங்கைக் கட்டை கஷாயத்தை ஊற்றி ஏழு முறை வற்ற விட வேண்டும். நன்கு வற்றிய பின் சூரணத்தை துணிகொண்டு சலித்து எடுத்துக்கொள்ளவும் இரண்டு கிராம் பொடியையெடுத்து நெய், தேன் சேர்த்து இளக்கிச் சாப்பிடவும் காலை, மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூப்பு, ரோகம் அண்டா.
ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணத்துட் வெதுவெதுப்பான பாலைக்கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். வயிற்றில் புண்ணைப் போக்கும் மலர்ச்சிக்கலை நீக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் சூடான தண்ணீருடன் இச்சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவில் சாப்பிடவும் மலச்சிக்கல் நீக்கும் சர்க்கரை, கொழுப்பு, கபம் ஆகியவை கட்டுப்பாட்டில் இருக்கும்.


குறிப்பு: கருங்காலி கட்டை கஷாயம் செய்யும்முறை
கருங்காலி கட்டையை 100 கிராம் அளவில் எடுத்து நன்கு இடிக்கவும். தண்ணீர் ஒருலிட்டர்தான் மிஞ்சுமளவு காய்ச்சி வடிக்கட்டவும். திரிபலா சூரணத்தை வாயகன்ற பீங்கான் கிண்ணத்தில் போட்டு இக்கஷாயத்தை சேர்த்துக்கிளறவும் ஏழு நாட்கள் ஊற்ற வேண்டும் பிறகு அதை வெய்யிலில் காயவைத்து துணிகொண்டு சலித்து எடுத்துக் கொள்ளவும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love