பிராஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் பேண சில டிப்ஸ்கள்
உலர் பழங்கள், ஆப்பிள், பேரிக்காய், பீச் பழங்கள், பசுமையான காய்கறிகள், பீன்ஸ், வாதுமை, அக்ரூட் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
பிராக்கோலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், சேர்த்துக கொள்ளுங்கள் இனிப்பான, பழுத்த தக்காளிப்பழங்கள், காரட் சாப்பிடுங்கள். உணவுகளில் முழுத்தான்ய வகைகளை, பூசணி விதை, பிளக்ஸ் விதைகள் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதிக அளவு இனிப்பு வகைகள், பழச்சாறுகள் அருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சிரமம் அற்ற சாறு நீர் பிரிவு பராமரிக்க இயலும்.
நாள் முழுவதும் அதிக அளவு நீர் அருந்துங்கள். குறிப்பாக உணவுகளுக்கு இடையில் அருந்துவது சிறுநீரின் அடர்த்தியை பராமரிக்கும்.
நீங்கள் சிறுநீர் கழிக்கும் பொழுது, சிறுநீர்ப் பையில் உள்ள நீர் முழுவதையும் கழிதது முடிக்கும் வரை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
மது பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். ஏனெனில் இதன் காரணமாக இரத்தத் திசுக்களிடையே சரி சமமற்ற நிலையை உருவாக்குகிறது. அதுபோல காபின் பொருள் கலந்து இருப்பதால் டீ, காபியை தவிர்க்கவும்.