எதிர்ப்பாற்றலை எப்படி வளர்க்கலாம்

Spread the love

அண்மைக்காலமாக இம்யூனிட்டி (Immunity) எனப்படும் எதிர்ப்பாற்றல் அல்லது தடுப்பாற்றல் பற்றிய வல அரிய செய்திகளை அறிவியல் ஆய்வர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். தடுப்பாற்றல் வலுவாக உள்ளவர்களைப் பல நோய்கள் தாக்குவதில்லை என்பதுடன் அது அவர்களை நல்ல உடல் நலத்துடனும், உற்சாகத்துடனும் செயல் திறத்தோடும் திகழச் செய்கிறது என்பதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திறன்மிக்க போர்ப்படைத் தலைவன் ஒருவன் தனது போர் வீரர்களை எவ்வாறு இனமறிந்து, இடம் அறிந்து, தேவையறிந்து நிறுத்துவானோ அதேபோல தடுப்பாற்றல் என்னும் சக்தி நம் இரத்தவெண் செல்களை இடமறிந்து நிறுத்தி பாக்டீரியாக்களினாலும், பூஞ்சாளம், வைரஸ் மற்றும் பிற ஒட்டுண்ணிகளாலும் ஏற்படுகின்ற நோய்களை எதிர்க்கச் செய்கிறது. பிறவியிலேயே சிலருக்கு வலுவான தடுப்பாற்றல் வாரிசு வழியாக வருகிறது. அதனால் மற்றவர்கள் மிகுதியானக முறையில் செயல்பட்டால் எவரும் வலுவான தடுப்பாற்றலை அடைய முடியும் என்பது உடல் நல அறிவியலார் அனைவரது ஒருமித்த கருத்தபகும்.

வலுவான தடுப்பாற்றலை மூன்று வழிகளில் பெற முடியும் என்கின்றனர் ஆய்வர்கள். 1, ஷிtக்ஷீமீss எனப்படும் நெருக்கடியான சூழல்களைத் தவிருங்கள். 2. ஊட்டம்மிக்க உணவுகளை உண்ணுங்கள். 3. உடலுழைப்பை, உடற்பயிற்சியை ஊக்குவியுங்கள்.

1. நெருக்கடி சூழல் தவிர்க்க

தடுப்பாற்றலைக் குறைப்பதில் தலையாயது நெருக்கடிச் சூழல் எனப்படும் Stress ஆகும். ஒத்த மனதுடைய தம்பதியரைவிட முரண்பாடான தம்பதியர்களிடையே அதிகளவு தடுமனும் மறுறும் பிறநோய்களும் காணப்பட்டதிலிருந்து தான் இந்த உண்மையை மருத்துவர்கள் உணர்ந்தனர். அதே பொல, பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் இடைநிலை மேலாளர்கள் பலர் ஏக்கம், இழப்பு, உதாசீனம், தவிப்பு போன்ற உணர்வுகளால் பாதிக்கப்பட்டபோது உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளானதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை போள்ற எதிர்மறை உணர்வுகளுடன் நெருக்கடிச் சூழலும் சேருகின்ற கோது அச்சம், சினம், ஆத்திரம், மனத்தொய்வு போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். அதனால் தடுப்பாற்றல் தானே குறையத் தொடங்குகிறது. வேலையிழந்த அல்லது வேலை கிடைக்காத தொழிலாளர்கள், அண்மையில் மணவிக்குப் பெற்றவர்கள், நிறுவன மேலாண்மை இயக்குநர்கள் போன்றவர்கள் நெருக்கடிச் சூழலால் தமது தடுப்பாற்றலை இழந்து சிறு சிறு நோய்களுக்கு எளிதாக ஆட்படுகின்றனர்.

அடர்ப்பு மிகுந்த அல்லது நெருக்கடி மிகுந்த சூழலின் போது உடலில் சுரக்கின்ற ஒருவகை ஹார்மோனானது தடுப்பாற்றல் செல்களின் சக்தியைக் குறைக்கிறது என்பது அறிவியலாரின் கணிப்பாகும், சிறிதளவு ஓய்வு, சற்று ஆழ்ந்த மூச்சு, நண்பர்களுடன் இதமான பேச்சு போன்றவைகள் உடலின் வெண் செல்கள் மற்றும் ஆன்ட்டிபாடீஸ் போன்றவற்றின் செயல்திறத்தை உயர்த்துவதைச் சிலவகை ஆய்வுகளின் மூலம் உறுதி செய்துள்ளனர்.

எதிலும் நம்பிக்¬கையற்றவர்கள் தீயதையே நோக்குபவர் (Pessimists) களைவிட நிறைநோக்கினரிடையே (Optimists) தடுப்பாற்றல் சக்தி மிகுந்திருந்ததும் அறியப்பட்டது. அதேபோல் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கின்றபோது தடுப்பாற்றல் அளவு உயர்ந்திருக்கிறது என்பதும் உணரப்பட்டுள்ளது. சான்றாக, தொ¬லைக்காட்சிப் பொட்டியில் தொடர்ந்து 60 நிமிட நேரம் நகைச்சுவைப்  படம் ஒன்றினைப் பார்த்தவர்களது வெண் செல் உற்பத்தி 39 விழுக்காடு உயர்ந்திருந்ததும், ஸ்ட்ரேஸ் ஹார்மோன் அளவு 46 விழுக்காடு தாழ்ந்திருந்ததுவும் அறியப்பட்டது. “வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்னும் வழக்காறும் உண்மை என மருத்துவர்கள் ஒப்புகின்றனர்.

தடுப்பாற்றலைக் குறைப்பதில் உறக்கமின்மையும் முக்கிய இடம் பெறுகிறது. உறக்கமின்மை உடலின் தற்காப்புச் சக்திகளைத் தாழ்ச்சியடையச் செய்கிறது. உறங்கும்போதும் உடல் வருடப் படும் போதும் மன  இறுக்கம் குறைந்து உடலின் தடுப்பாற்றல் சக்தி திடம் பெறுகிறது.

2. ஊட்டமிகு உணவு

“தடுப்பாற்றலை வளர்ப்பதில் உணவு முன்னிலை வகிக்கிறது” என்கிறார் ஜெப்ரே ப்ளம்பர்க் என்னும் அமெரிக்க ஊட்டச்சத்து அறிஞர். இந்தத் தொடர்பு 40 ஆண்டுகளுக்கு முன்னர் வளர்முக நாடுகளில் கண்டறியப்பட்டது. ஊட்டச்சத்துக் குறைவினால் அங்குள்ள குழந்தைகளை அளவிற்கு அதிகமான நோய்கள் தாக்கின. வயிறு நிரம்ப உணவு உண்டால் மட்டும் போதாது. அவ்வுணவு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டுமென்பது அண்மையில் அறியப்பட்டது.

சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துகள் உடலில் தடுப்பாற்றலை உயர்த்துவதில் பொரும்பங்கு வகிக்கின்றன என்கிறார் போராசிரியர் ப்ளம்பர்க். இவ்வகை ஊட்டச்சத்துக்களை உண்ணுகின்றபோது உடலின் தடுப்பாற்றல் சக்தி மிக உள்ளதமான நிலைக்கு உயர்த்தப்படுகிறது.

விட்டமின் A

உடலின் தடுப்பாற்றலை உயர்த்தி சருமத்தின் பராமரிப்புக்கு உதவுகிறது. இரத்த வெண்செல்களை ஊக்குவித்து புற்றுநோய் போன்றவைகள் தோன்றாவண்ணம் காக்கிறது. எனினும் இது அளவில் மிகுகின்ற போது கேடு விளைவிக்கக்கூடும். ஏறத்தாழ இரண்டு சர்க்கரை வள்ளிக்கிழங்கிலுள்ள வைட்டமின் கி நமது ஒரு நாள் தேவையை ஈடு செய்யும். ஈர்ல் / கேரட் / லெட்டூஸ் / கீரை / முளைக்கீரை போன்றவற்றில் இது காணப்படுகிறது.

விட்டமின் கின் முன்னோடியான கரோட்டின் என்னும் உயிர்ச்சத்து நம்முடலில் விட்டமின் A யாக மாற்றம் பெறுகிறது. இது உடலின் தடுப்பாற்றலைப் பெரிதும் உயர்த்துகிறது. செம்மஞ்சள் நிறமுடைய பழங்களிலும், காய்கறிகளிலும் கரோட்டின் மிறுந்து காணப்படுகிறது.

விட்டமின் B

எந்த அளவு விட்டமின் (B) உட்கொள்ளப்படுகிறதோ அந்த அளவு உடலின் தடுப்பாற்றல் உயரக் கூடும். வயது முதிர்ந்த சிலரது உணவில் இவ்விட்டமின் குறைக்கப்பட்டபோது அவர்களது தடுப்பாற்றலும் குறைந்தது. திரும்பவும் படிப்படியாக விட்டமின் (B) உணவோடு சேர்க்கப்பட்ட போது குறைந்திருந்த தடுப்பாற்றல் மெல்ல மெல்லப் பழைய நிலைக்கு உயர்ந்ததும் அறியப்பட்டது. நாளொன்றுக்கு இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும். அது உங்களது ஒரு நாளைய விட்டமின் B6 தேவையை ஈடுசெய்து விடும். கோழி, மீன், இறைச்சி, அரிசிச் சோறு பிற பயறு வகைகள் போன்றவற்றில் விட்டமின் (B) பெரிதும் உள்ளது.

விட்டமின் C

உடலில் ஏற்படும் வைரஸ் தாக்குதலை எதிர்த்து நிறுத்தவும், புற்றுநோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் வல்ல திறன்மிக்க வேதியின் சுரப்பை உடனடியாக உடலில் உயர்த்தக் கூடியது இந்த உயிர்ச்சத்து. சூரு குவளை ஆரஞ்சுச்சாறு அல்லது ஒரு கொய்யாப்பழம் உங்களுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய விட்டமின் C   யை தரக் கூடியவை. தவிர எலுமிச்சை, நார்த்தை வகைப்பழங்கள், தக்காளி, உருளை, காலிபிளவர், முளைக்கீரை போன்றவைகளும் விட்டமின் சி யைத் தரக்கூடும்.

விட்டமின் D

வலுவான எலும்புகளைத் தருவது மட்டும் விட்டமின் D யின் பணி என்று இதுவரை எண்ணி வந்த நமக்கு இப்போது ஒரு புதிய செய்தி. தடுப்பாற்றலை உயர்த்துவதில் விட்டமின் D  பெரும் பங்குவகிக்கிறது என்று தற்போது அறிவியலார் நடுவில் பேசப்படுகிறது. உடலில் விட்டமின் D குறைவு பாக்டீரியாக்களை அழித்துண்ணும் செல்களின் செயல்பாட்டை மந்தப் படுத்துகிறது. அதனால்நோய்த் தொற்று எளிதாக ஏற்படுகிறது என்று அண்மைய ஆய்வுகள் குறிப்படுகின்றன. சூரிய ஒளியில் இருந்து விட்டமின் D கிடைக்கிறதெனறாலும் மீன் எண்ணெயிலும் செறிவூட்டப்பட்ட பாலிலும் விட்டமின் D மிகுந்துள்ளது.

விட்டமின் E

விட்டமின் E தொடர்பான பல ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. தடுப்பாற்றலை உயர்த்துவதில் விட்டமின் E பெரும் பங்கு வகிக்கிறது என்று பல ஆய்வர்கள் கூறுகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்ட 120 பேருக்கு கணிசமான அளவில் விட்டமின் ணி தரப்பட்டுக் கண்காணிக்கப்பட்டபோது அவர்களது தடுப்பாற்றல் சக்தி ஏறக்குறைய 35 அல்லது 40 வயதுடையவர்களின் தடுப்பாற்றல் சக்தியை ஈடு செய்ய வல்லதாக இருந்தது என்கிறார் டாக்டர் விண்டா எட்வர்டு. இளம் வயதுடையோரும் இதனால் பலன் பெறலாம் என்று கூறப்படுகிறது.

பாதாம், பிஸ்தா, அக்ரூட், நிலக்கடலை போன்ற பருப்புகளிலும் கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய் போன்ற எண்ணெய்களிலும், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், பச்சைப் பட்டாணி, கீரை வகைகளிலும் விட்டமின் E விரவிக் காணப்படுகிறது.

அயச்சத்து (Iron)

மனிதர் ஒவ்வொருவருக்கும் தினமும் 10 மி,கி. அயம் அல்லது இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இது உடலின் தடுப்பாற்றல் குறைவுறாதிருக்கும்படி செய்கிறது, இது இறைச்சி, ஈரல், பேரிச்சம்பழம் போன்றவற்றிலுள்ளது. பெரும்பாலும் இரும்புச்சத்துக் குறைவு பெண் மக்களிடையே தான் காணப்படுகிறது.

மக்னீஷியம் / செலினியம் / துத்தநாகம்

மினரல்கள் எனப்படும் இந்த மணிச்சத்துக்கள் மூன்றும் மனிதர்களின் தடுப்பாற்றலை மேம்படுத்தி நீடிக்கச் செய்ய வல்லவை. பலவகைப்பட்ட கீரைகள் / கோசுகள், உருளைக்கிழங்கு, தவிடு நீக்காத பல்வகைத் தானியங்கள் கடலுணவுகள் போன்றவற்றில் இம்மணிச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன.

உடற்பயிற்சி

தடுப்பாற்றலுக்கும், உடற்பயிற்சிக்கும் என்ன சம்பந்தமென்று பலர் கேட்கக்கூடும். அளவான உடற்பயிற்சிகளினால் உடலின் தடுப்பாற்றல் திறன் ஊக்குவிக்கப்படுகிறதென்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  நடைப்பயிற்சி, மெல்லோட்டம், சைக்கிள் விடுதல் போன்ற பயிற்சிகள் தடுப்பாற்றலை உயர்த்துவதோடன்றி, நெடுநாட்களுக்கு அது நிலைக்கும் படியும் செய்கின்றன எடனபதும் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 45 நிமிடமும் வாரத்திற்கு 5 நாட்களும் சிலரை நடைப்பயிற்சியில் ஈடுபடச் செய்து பார்த்தபோது ஓடியாடி வேலை செய்யாதவர்களை விடப் பாதி நாட்களே இவர்கள் உடல் நலம் குன்றியிருந்தார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் போட்டிகள் எதுவுமில்லாத இயல்பான எளிய பயிற்சிகளினால் மட்டுமே ஒருவரது தடுப்பாற்றல் திறன் உயர முடியும் என்கிறார் டாக்டர்.டேவிட் நூமன்.

சிறப்பான தடுப்பாற்றலைப் பெற்றிருக்க நாம் ஒவ்வொருவரும் சூப்பர் மேன்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஓரளவு ஆர்வத்துடன் முயன்றால் எவரும் எளிதாகத் தம்முடைய தடுப்பாற்றலை உயர்த்திக் கொள்ள முடியும். நாம் நமது உடலை எவ்வளவு கருத்தோடு பேணிக் காக்கின்றோமோ அதே அளவு நம் உடலும் நம்மைக் காக்கும்.


Spread the love