1. காலை உணவை தவிர்க்காதீர்கள். அதே சமயம் காலை உணவில் சர்க்கரையை சேர்க்காதீர்கள். காலை உணவில், பரங்கி / பூசணி விதைகள், பாதாம் பருப்பு, தயிர் – இதர புரதம், கார்போ – ஹைடிரேட் உணவுகளை உட்கொள்ளலாம். ஆப்பிள் துண்டுகளில் இலவங்க பட்டை பொடியை தூவி, எடுத்துக் கொள்ளலாம்.
2. வயிற்றில் நல்ல பேக்டீரியாக்களை உருவாக்கி தேவையான ப்ரோபயாடிக்ஸ் மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும். தயிர் சாப்பிடுவது நல்லது.
3. உங்கள் “இனிப்பு வெறி” நீங்க தயிரில் பாதாம் பருப்பு துண்டுகள், சிறிதளவு துருவிய தேங்காய் கலந்து உண்ணவும். ஆப்பிளை வேக வைத்து, குழி செய்து சிறிதளவு பாதாம் பருப்பு. இலவங்கப் பட்டை, இஞ்சி ஜாதிக்காய் இவற்றை குழியில் அடைத்து, தயிருடன் சாப்பிடுங்கள்.
ரத்த சர்க்கரை அளவை சமனாக்க உதவும் உணவுகள்
விட்டமின் ‘சி’ – சாத்துக்குடி, ஆரஞ்ச், முளைகட்டிய தானியங்கள், தக்காளி, குடமிளகாய் போன்றவை. சாத்துக்குடி போன்ற பழங்களை, டாக்டரிடம் கேட்டு வாரத்திற்கு ஒரு முறை சேர்த்துக் கொள்ளவும்.
‘பி’ காம்ப்ளெக்ஸ் – முட்டை, பரங்கி விதைகள்.
குரோமியம் – முட்டை, முழு தானியங்கள், பருப்புகள் (பாதாம் போன்றவை)
மக்னீசியம் – மீன், பருப்புகள், விதைகள், உலர்ந்த பழங்கள், கீரை
ஜிங்க் – முத்துச்சிப்பி, ஈரல் மாமிசம், முட்டை, முழுத்தானியங்கள் காளான்.
மனம் தளராமல், சர்க்கரை உணவிலிருந்து விலக முயற்சி செய்வது நீரிழிவு நோயாளிக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே நல்லது.