இரட்டைக் குழந்தைகள் வேண்டுமா?

Spread the love

அப்ப இத ட்ரை பண்ணிப் பாருங்க…

இன்றைய காலத்தில் ஒரு குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. அதிலும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பது எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். மேலும் அனைவருக்குமே இந்த பாக்கியம் கிடைத்திடாது.

சில தம்பதியர்கள் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுபவர்கள், அதற்காக என்ன செய்ய வேண்டுமென்று தேடி அலைத்து அவற்றைப் பின்பற்றுவார்கள். உங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறக்க வேண்டுமா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ளதை படித்து அவற்றைப் பின்பற்றி வாருங்கள். இதனால் இரட்டை குழந்தையைப் பெறும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

மகப்பேறு நிபுணரை சந்திக்கவும்

இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமெனில், அதற்கு மகப்பேறு மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் உட்கொண்டு வர வேண்டும்.

அதிகமான எடை

ஆய்வுகளில் எடை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதே போன்று பெண்கள் உயரமாக இருந்தாலும், இரட்டையர்களை பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாம்.

பரம்பரை

பரம்பரையில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாம்.

உணவுகள்

டயட்டில் மாற்றம் வேண்டும். பெண்கள் தாங்கள் உண்ணும் உணவுகளில் ஒருசில மாற்றத்தைக் கொண்டு வந்தால், இரட்டைக் கருவை சுமக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

பால் பொருட்கள்

ஆய்வுகளில், பால் பொருட்களை உட்கொள்ளாத பெண்களை விட பால் பொருட்களை அதிகமாக உட்கொண்டு வந்தால், 5 மடங்கு அதிகமாக இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

கருணைக்கிழங்கு

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் 4 மடங்கு அதிகமாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், ஓவுலேசன் காலத்தில் இரண்டு முட்டைகளை வெளியிடச் செய்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவும் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

ஃபோலிக் ஆசிட்

ஆய்வுகளில் ஃபோலிக் ஆசிட் எடுப்பதற்கும், இரட்டை குழந்தை பிறப்பதற்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய ஃபோலிக் ஆசிட் பீன்ஸ், பசலைக்கீரை மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் அதிகம் உள்ளது. எனவே இவற்றை பெண்கள் உட்கொண்டு வந்தால், 40% இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆஸ்திரேலிய குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், பீன்ஸ் மற்றம் காய்கறிகளை உட்கொண்டு வந்தால், ஓவுலேசன் காலத்தில் இரட்டை முட்டை வெளிவர உதவுவதோடு, இன்சுலின் அளவை சீராக பராமரிக்கவும், கர்ப்ப காலத்தில் நரம்புக் குழாய் குறைபாடுகள் ஏதேனும் ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.

ராஜகோபாலன்


Spread the love