ஆறு மாதத்திற்கு ஆறு நாட்கள் போதுமானது, எளிமையானது, எடையைக் குறைத்து தோற்றப் பொலிவையும், தசை வடிவையும் உடலுக்கு ஏற்ற எடையையும் பெறலாம்.
புரதமோ, கொழுப்போ அதிகமில்லாத, இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகள் சேர்க்காத, பச்சை காய்கறிகள் நிறைந்த சாத்விக உணவு மட்டும் உண்டு வந்தால் ஓரளவு உடல் எடையைக் குறைக்கவும். தசை வடிவை நிலை நிறுத்தவும் முடியும் என்றாலும் இவை எவையுமே இல்லாத வெறும் நீர் சத்து உணவை மட்டும் ஆறு மாதத்திற்கு ஆறு நாட்கள் உட்கொள்ளும் பழக்கத்தைக் கடைபிடித்தால் உங்களது தோற்றப் பொலிவையும், தசை வலிமையையும், இயல்பான எடையையும் பெறலாம்.
ஐந்து நாட்களுக்கு முற்றிலுமாக நீர்ச்சத்து உணவில் (லிவீஹீuவீபீ ஞிவீமீt) இருக்க முடியுமா என்று சிலர் எண்ணலாம். இது அவ்வளவு ஒன்றும் கடுமையான செயலல்ல. எளிமையானது. வயிற்றுப் புண்ணோ, சர்க்கரை நோயோ இல்லாத எவரும் பின்பற்றலாம்.
நீர்ச்சத்து உணவு வகைகள்
நீர்ச்சத்து உணவு என்பது 5 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. சர்க்கரை சேர்க்காத பால், பழச்சாறுகள், சூப் வகைகள், சத்துணவுக் குடிநீர் வகைகள் (ணிஸீமீக்ஷீரீஹ் ஞிக்ஷீவீஸீளீs) கஞ்சி வடி தண்ணீர்.
சர்க்கரை சேர்க்காத பால்
பால் ஒரு முழுமையான உணவு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயற்கையில் கிடைக்கும் புரதம், மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் தாதுப்பொருள்கள் அனைத்தும் கொண்டது.
பழச்சாறுகள்
புளிப்பு அதிகமில்லாத பழச்சாறுகள் ஒரு நல்ல உணவு. ஆனால் சர்க்கரை சேர்க்கக் கூடாது.
காய்கறி சூப்புகள்
அதிக கொழுப்பும் புரதமும் இல்லாத எளிய வகை காய்கறி சூப்புகள் சிறந்த நீர்ச்சத்து உணவாகும்.
சத்துணவு பானங்கள்
ரெடிமேடாக கிடைக்கின்ற சத்துணவு பானங்கள் போன்றவற்றையும் நீர்ச்சத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சோடியம், பொட்டாஷியம் போன்ற தாது பொருட்கள், குளுக்கோஸ், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் போன்றவைகள் இதில் சேர்க்கப்படுவதால் இவை உடல் சோர்வடையாமல் இருக்க உதவுகிறது.
கஞ்சி வடித்த நீர்
நீர்ச்சத்து உணவுகளில் சிறந்தது இந்த கஞ்சி வடித்த நீர் ஆகும். இதில் சிறிதளவு மாவுச்சத்து மற்றும் இன்ன பிற வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் இருக்கின்றன. இதில் சிறிதளவு உப்பும், மிளகும் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் உடலுக்குத் தேவையான சோடியம் கிடைத்து விடுகிறது. மேலும் இதை பயமின்றித் தேவையான அளவு பருகலாம். இதனால் தண்ணீர் – உப்பு சமச்சீர் நிலை கீணீtமீக்ஷீ – sணீறீt தீணீறீணீஸீநீமீ பாதுகாக்கப்படுகிறது.
நீர்ச்சத்து உணவு முறையைச் செயல்படுத்தக் குறிப்பிட்ட காலம் எதுவுமில்லை என்றாலும் இதை செயல்படுத்த அதிக மழை இல்லாத காலங்கள் ஏற்றவை. கோடை காலத்தில் இயல்பாகவே உடலின் நீர் இழப்பை ஈடு செய்ய நிறையவே தண்ணீர் குடிக்கிறோம். இதனால் வயிற்றுப் பசி ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தச் சமயத்தை நமது பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இருந்த போதிலும் கடுமையான குளிர் காலங்களைத் தவிர்த்து மற்ற காலங்களிலும் இதை மேற்கொள்ளலாம்.
பொதுவாகப் பெண்கள் சுமார் பத்து நாட்கள் வரை இந்த உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்று உணவு நிபுணர்கள் (ஞிவீமீtவீநீவீணீஸீs) பலரும் சொல்கிறார்கள். என்றும் சிறப்பான முறையில் இதைப் பின்பற்றினால் ஆறு மாதங்களுக்கு ஓரு முறை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் போதும் என்பது பெரும்பாலானோரின் கருத்து.
இந்த உணவுக் கட்டுப்பாடு ஆபத்து இல்லாதது எவரும் பின்பற்றக் கூடியது. இதை எந்த மருத்துவரும் வேண்டாம் என்று கூறமாட்டார். இந்த உணவுக் கட்டுப்பாட்டினால் சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் போன்றவற்றிற்கு வேலைப்பளு குறைகிறது. அதனால் இன்னும் திறமையாக அவை செயல்பட வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு வேளை தேவை என்று கருதினால் இம்முயற்சியில் ஈடுபடும் முன் உங்கள் மருத்துவரை அணுகி உங்கள் எடை என்ன, இரத்த சர்க்கரை அளவென்ன, உங்களது ஙிவிமி எனப்படும் அடிப்படை உணவு வளர்சிதை அளவு என்ன என்பன போன்ற சில விஷயங்களைத் தெரிந்து கொள்வது நல்லது.
இந்த உணவு பயிற்சியினால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைகிறது. இரத்த அழுத்தம் சீராகிறது. இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருள்கள் வெளியேறுகின்றன. உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அழகான வடிவான உடலைப் பெறுவீர்கள். ஆண்டிற்கு இரண்டு முறை இதைப் பின்பற்றினால் போதுமானது.
தங்கள் நலன் கருதி
ஆயுர்வேதம் எஸ். செந்தில் குமார்.