ஒரு பெண்ணின் ஆரோக்கியம் பெரும்பாலும் அவரது மாதவிடாய் சீராக நடக்கிறதா இல்லையா என்பதைப் பொருத்து அமைகிறது. பல பெண்களுக்கு மாதவிடாய் என்றாலே வலி மிகுந்த அனுபவமாகிறது. வலியில்லாத, தொல்லையில்லாத மாதவிடாய் அழற்சி நடைபெற நாளமில்லா சுரப்பிகளிலிருந்து ஹார்மோன்கள் சரிவர சுரக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு, இவற்றால் மாதவிடாய் அழற்சி சீராக வைத்துக் கொள்ளலாம். இருந்தாலும், மாதவிடாய் சுழற்சி சீராக வைத்துக் கொள்ளலாம். ஆயுர்வேதத்தின் எளிய சிகிச்சை முறைகள்!
பெருங்காயம்
இஞ்சி – குளிர்காலங்களில் வலியுடன் கூடிய ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படலாம். இஞ்சி சாறு சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்க நல்ல பலன் தெரியும்.
கற்றாழை – கருப்பைக்கு இதமான தூண்டுதலை அளிக்கும். எனவே வலியுள்ள மாதவிடாய் தொல்லைக்கு நல்லது.
தகரா – Valeriana Wallichi – பல நோய்களுக்கு மருந்தாகும் இந்த மூலிகை மாதவிடாய் தடைபெற்றால் அதை தூண்டி விடும் மருந்தாக பயன்படுகிறது.
விளக்கெண்ணெய் – மாதவிடாயின் போது இறுக்கமான வலி இருந்தால், அது ஆரம்பமாகும் முன்பு விளக்கெண்ணெய் எடுத்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
அஸ்வகந்தா – அதிக உதிரப்போக்கினால் அவதிப்படும் பெண்மணிகள் அஸ்வகந்தா டானிக் எடுத்துக் கொள்வது நல்லது.
அதிமதுரம் – அஸ்வகந்தாவைப் போல் அதிக உதிரப்போக்கை நிறுத்த அதிமதுரம் பயன்படும்.
ஆயுர்வேத சுகப்பிரசவம்
ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் விரும்புவது நார்மலான சுகப்பிரசவம் தான். வலி இருந்தாலும், நார்மல் பிரசவம் நேர்ந்தால், பிரசவத்தின் பின்பு சிக்கல்கள் நேராது. ஆனால் இன்றைய வேகமான, ஸ்ட்ரெஸ் நிறைந்த வாழ்க்கையில் சிசேரியன் பிரசவங்கள் சகஜமாகிவிட்டன. நார்மல் பிரசவத்திற்காக ஆயுர்வேதம் சத்து நிறைந்த சமச்சீர் உணவை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறது.