உடல் துர்நாற்றம் விலக

Spread the love

ஒருவரின் தன்னம்பிக்கையை பாதிக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வியர்வை துர்நாற்றம். எடுத்துக்காட்டாக, நாம் பேருந்தில் போகும் போதும், அலுவலகத்தில் பணி செய்யும் போதும் நம் அருகில் இருப்பவர்களின் முகச்சுழிப்பை பார்க்கும் போதே நம் தன்னம்பிக்கை உடைந்து விடுகிறது.

அதற்காக பலர் வாசனை திரவியங்களை பயன்படுத்தி நாற்றத்தை மறைத்து விடலாம் என எண்ணுகிறார்கள். அவ்வாறு செய்வது என்பது தற்காலிகமான தீர்வு தான். இவ்வாறு செய்வதற்கு முன் உடலில் ஏன் துர்நாற்றம் வருகிறது என்பதை யோசிக்க வேண்டும். இதுவரை யோசிக்காவிட்டாலும், இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம்.

உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது?

• அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், உடலில் வியர்வை துர்நாற்றம் வீசும்.

• மன அழுத்தத்தின் போது வெளியேறும் வியர்வையினாலும் துர்நாற்றம் வீசும். அதனால், மன அழுத்தத்தை குறைக்க யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் வியர்வையிலிருந்து வரும் துர்நாற்றத்தை தடுக்க முடியும்.

• சர்க்கரை நோய் உள்ளவர்களின் உடலில் இன்சுலின் குறைவாக இருப்பதன் காரணமாக துர்நாற்றம் வீசும்.

• மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களின் வியர்வையில் துர்நாற்றம் வீசுகிறது. ஏனென்றால் மாட்டிறைச்சி செரிக்க நேரம் அதிகமாகும், அதனால் உடலிலிருந்து வாயு வெளியேறி, அது துர்நாற்றமாக வெளிவருகிறது.

நோய்க்கு அறிகுறியா வியர்வை!

வியர்வை அனைவருக்கும் வரக்கூடியது தான். இருந்தாலும் ஒரு சிலரின் மீது மட்டும் ஏன் துர்நாற்றம் வருகிறது என்பது அனைவருக்கும் இருக்கக் கூடிய சந்தேகம்.

உண்மையில் வியர்வைக்கு நாற்றம் கிடையாது. வியர்வை நம் உடம்பில் உள்ள பாக்டீரியாக்களுடன் கலக்கும் போது தான் வியர்வையில் துர்நாற்றம் வீசுகிறது.

வாசனை திரவியங்கள் வியர்வையை குறைக்குமா?

நம் மேனியில் நல்ல நறுமணம் வரவேண்டும் என்பதற்காக வாசனை திரவியங்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் துர்நாற்றம் தோன்ற வாசனை திரவியங்கள் தான் காரணம். வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் ஏற்ப்படுவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு சேரும் போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்வை வந்த இடத்தை உடனே சுத்தம் செய்யாமல் விடும் போதுதான், வியர்வையில் பாக்டீரியா தொற்றுகளினால், வியர்வையிலிருந்து ஒரு வித கெட்ட வாசனை வெளியேறுகிறது.

வியர்வை உள்ளவர்கள் செய்ய வேண்டியவை

• தினசரி காலை, மாலை இரண்டு வேளையும் குளிக்கலாம்.

• அக்குளில் உள்ள ரோமங்களை நீக்க வேண்டும்

• சூவை பயன்படுத்தும் போது சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

• பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது நல்லது.

• அதிக அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.

• தினமும் உணவில் தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• தினமும் தக்காளியை பழச்சாறாக்கி குடித்து வரலாம்.

வியர்வை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

• புகை மற்றும் மதுபழக்கம் இருந்தால் விட்டுவிட வேண்டும்.

• வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

• கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

• மருத்துவரின் தகுந்த ஆலோசனை இல்லாமல் மருந்துகள், உண்பதை தவிர்க்க வேண்டும்.

உடல் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்

• தினமும் இருமுறை குளிக்க வேண்டும். குளிக்கும் போது கைப்பிடி அளவு கொழுந்து வேப்பிலைகளை தண்ணீரில் இட்டு குளிக்கலாம்.

• நறுமண ஆயில்கள் (எண்ணெய்) அல்லது வினிகரை பஞ்சில் முக்கி வியர்வை அதிகம் வரும் இடங்களில் தேய்த்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் வியர்வை துர்நாற்றம் இல்லாமலும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.

• அன்றாடம் உண்ணும் உணவில் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

• அடிக்கடி தண்ணீர், இளநீர் மற்றும் பழ சாறுகளை எடுத்து கொள்ளாமல்.

• தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சை பழத்தின் சாற்றை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கிவிடும்.

இந்தியாவில் பண்டைய காலத்தில் தக்காளி சாற்றை, வியர்வை துர்நாற்றத்தை போக்க பயன்படுத்தி உள்ளனர் என்பது அரிதான தகவல். நவீன உலகத்திலும் தக்காளி சாற்றை வியர்வை துர்நாற்றத்திற்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்று ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்பதை நாம் பாப்போம்.

தினமும் குளிக்கும் நீருக்கு ஏற்றார் போல், தக்காளி பழங்களை எடுத்து அரைத்து சாறு எடுக்கவும். அந்த சாற்றை குளிக்கும் நீரில் உற்றி குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கும். ஆடைகளை பொறுத்தவரை தளர்ந்த ஆடைகளை உடுப்பது, மிகவும் நல்லது.

மேலே கூறிய அனைத்தையும் செய்த பிறகும், வியர்வை துர்நாற்றம் போகவில்லை என்றால் நிச்சயமாக மருத்துவரை சந்திக்க வேண்டும். அப்போது தான் உண்மையான பிரச்சனை என்ன என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

கீ.பி


Spread the love