நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது நாம் அறிந்த பழமொழி. இது இன்று வரை இன்னும் பழமொழி அளவிலேயே தான் இருக்கிறது. இப் பழமொழி யைக் கடைபிடிப்போர் மிக மிகக் குறைவு. சிறு பிள்ளையாக நாம் இருக்கும் பொழுது நம் பெற்றோர் நன்கு மென்று சுவைத்து உண்ணச் சொல்லிக் கொடுத்தது இப்பொழுது நமக்கு நினைவு வரும்.
நமது உடல் உறுப்புக்களில் சுவையை உணரக்கூடிய ஒரே உடல் உறுப்பு நாக்கு தான். நாக்கு தவிர வேறு எந்த உடல் உறுப்பாலும் சுவையை உணர முடியாது. இந்த நாக்கைக் கடந்து உணவு தொண்டையை கடந்து பின் வயிற்றை அடைந்து அங்கு செரிமானமாகிறது. உணவு எவ்வளவு நேரம் நமது நாக்கில் இருந்து மென்று சுவைக்கப் படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நாம் நம் உணவின் சுவையை உணர முடியம். அதோடு எளிமையாக செரிமானம் நடை பெறும். இதற்காகவே தான் நமது பற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாக்கின் செயல்பாடும் அமைந்து உள்ளது.
நம்மில் எத்தனை பேர் இதனை சரியாகச் செய்கின்றோம் பலரும் பேசிக் கொண்டும் டிவி பார்த்துக் கொண்டும் தானே அவசர அவசரமாக உணவு உண்கிறோம். இதனால் மென்று சுவைத்து உண்ண முடியாமல் போகிறது.
மென்று உண்ணவும், உண்ட பின் சிறிது ஒய்வு எடுத்துக் கொள்ளவும். உண்ண நேரமில்லாத போது உண்ண வேண்டாம். உணவு உண்பதை தள்ளிப்போடுங்கள். அது மட்டுமல்லாது அவசர அவசரமாக உணவு உண்ணும் பொழுது நிகழ்கின்ற மனநிலை மாறுபாடுகளால் வாயிலும் வயிற்றிலும் சுரக்க வேண்டிய பல செரிமான சுரப்புகள் சுரக்காமலேயே உணவு வயிற்றினுள் தள்ளப்படுகிறது. இதனால் செரி மான நிகழ்வுகள் சீராக நடைபெற முடியாமல் போகிறது.
அது மட்டுமல்லாமல் நமது செரிமானம் என்பது வாயில் ஆரம்பித்து மலக்குடல் வரை நிகழக் கூடிய ஒரு செயல்பாடு. இது நம் கட்டுப்பாட்டில் உள்ளது, வாயில் மென்று சுவைப்பது மட்டும் தான். பிற, ஏனைய நிகழ்வுகள் அனைத்தும் தானாகவே நடை பெறக் கூடியவை.
நன்கு சுவைத்து மென்று உணவு உண்ணப்படாத போது அது பசியின்மை, வயிற்று உப்புசம், அஜீரணம், செரிமானக் குறைவு, வயிற்றோட்டம், மலச்சிக்கல் போன்ற பல செரிமான சீர்கேடுகள் ஏற்படுகிறது. நன்கு சுவைத்து மென்று உண்ண சிறிது நேரம் அதிகமாகத் தேவைப் படலாம் ஆனால் அவ்வாறு நாம் மென்று சுவைத்து உண்பதால் பல உடல் நலக்கேடுகளை தவிர்க்கலாம். இன்றே மென்று சுவைக்க ஆரம்பிப்போம்.
உணவு நலம் மே 2011
சுவைத்து உண்போம், உடல் உறுப்பு, உடல்உறுப்பு, நாக்கு, உடல், உணவு, தொண்டை, வயிறு, உணவின் சுவை, செரிமானம், பற்கள், டிவி, மென்று உண்ணவும், ஒய்வு, மனநிலை, வாயிலும், வயிற்றிலும், செரிமான சுரப்புகள்,
செரிமான நிகழ்வுகள், மலக்குடல், பசியின்மை, வயிற்று உப்புசம், அஜீரணம், செரிமானக் குறைவு, வயிற்றோட்டம், மலச்சிக்கல், சீர்கேடுகள், உடல் நலக்கேடுகள், மென்று சுவைக்க ஆரம்பிப்போம்,