செரிமானத்திற்கு…

Spread the love

உயிரினத்தின் வளர்சியில் முக்கிய பங்கு வகிப்பது இரைப்பையாகும். அதுதான் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான சக்தியை (கலோரியை) அதன் தேவைக்கு ஏற்ப மாற்றி அளிக்கிறது.

மனித உடலை எடுத்துக் கொண்டால் செரிமானம் நடைபெற பல்வேறு உறுப்புகளின் கூட்டு முயற்சியால்தான் நடைபெறுகிறது. இதில் இரைக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், கணையம் முக்கியப்பங்கு வகிக்கின்றது.

எவ்வாறு உணவு செரிமானம் ஆகின்றது?

நாம் உண்ணும் உணவானது உமழ் நீருடன் கலந்து ஈரமாகின்றது. அப்போழுதுதான் நாவால் உணவை புரட்டிப் பற்களால் இரைக்க முடியும். அரைத்த உணவு தொண்டையின் வழியாக இரைப்பைக்கு செல்கின்றது. இங்கு உணவு குறைந்தது 4மணி நேரமாவது இருக்கும். சிறுகுடல் இதன் கீழற்றத்திலிருந்துதுதான் ஆரம்பமாகிறது. அதற்கு உள்ளே சவ்வு மடிந்து மடிந்து இருக்கும். இரைப்பபையின் சுவரில் தசைகள் குறுக்கும் நெடுக்குமாய்ச் சூழ்ந்து இருக்கும். அந்த தசைகளுடைய    உதவியால் உணவு புரட்டிக்

 கொடுக்கப்படும்.

இரைப்பையிலிருந்து வெளியாகும் உணவு பால் போன்றவை திரவ நிலையை அடையும்.

இதில் கரையாத திடப் பொருள்களும் இருக்கும். அது கொஞ்சங் கொஞ்சமாகச் சிறுகுடலுக்கு தள்ளப்படும். சிறுகுடலில்தான் உணவு சீரணம் ஆகின்றது.

உணவில் முக்கியப் பகுதிகளாகிய புரதம், சர்க்கரைமாவு, நிணம் இங்கே சீரணிக்கப்பெற்று குடல் உருஞ்சிகளால் இரத்தில் செலுத்தப்படுகின்றன். இதற்கென்று கணையம் தக்க அமிலங்களை சுரக்கின்றது. கணையம் சிறு குடலின் தொடக்கத்தில் இடதுழுறம் இருக்கிறது. கல்லீரல் பித்தத்தை சுரக்கிறது. இரத்தம் கணையத்திந்கு செல்லும்போது இச்சுரப்பு கணையத்தைச் சரக்கச் செய்கிறது. இச் சுரப்பிகள் என்சைம் என்னும் பொருளாகும்.

சீரணம் என்சைம்களாலே நடைபெறுகிறது. சிறுகுடல் 25 அடி நீளமிருகும். இதன் சவ்வில் மிகச் சிறு விரல் போன்ற உறுப்புகள் இருப்பதால் குடலுக்கு பல மடங்கு அளவு கிடைக்கிறது. இதில் செல்லும் உணவானது சீரணம் அடைந்து சத்தான அமிலங்கள் முற்றிலும் கல்லீரலில் வந்து சேரும்.

கல்லீரல் உணவுச் சத்துக்களைச் சேமித்துக் கொள்ளும், மிகுதியாக உள்ள இரத்தத்தின் கலவையாய் வேறு உறுப்புகளுக்குச் செல்லும் உணவிலிருந்து சத்துக்கள் நீக்கம் பெற்ற திப்பிகள் பெரிய குடலில் வந்து சேரும். இங்கு சளி சுரக்கும். மலதிற்கு ஈரம் கொடுப்பதற்கு வேண்ய அளவு போக மிகுதி நீர்ப்பகுதி இதிலிருந்து இரத்தத்தில் நீக்கப்படும்.


Spread the love