ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்! இதைத் தவிர்த்து என்றும் இளமையாக இருக்க முடியுமா? நமது புராணங்களில் முதுமையை அடைந்தவன் அதை “பண்டமாற்றுதல்” போல் இளைஞனிடம் கொடுத்து அவனின் இளமையை பெற்று களிப்பதாக கதைகளை படித்திருக்கிறோம்.
முதுமை எனும் வயது ஏறும் நிகழ்வு படிப்படியாக ஏற்படுகிறது. உடல் செல்கள் குறிப்பிட்ட ஆயுளை உடையவை. செல்கள் பெருகுவது அவை இரண்டாக பிரிந்து கொண்டே போவதால் தான். பல தடவை இரண்டாக பிரிந்த பின் அவை மெத்தனமாகி விடுகின்றன. அவற்றின் உருவங்கள் மாறும். பிரிவது குறையும். கடைசியில் நின்று விடும்! இது செல்களின் முதிர்வு (Cellular Senescence) எனப்படும். உயிரியல் நிபுணர்களுக்கு, செல்கள் எவ்வளவு தடவை உடைந்து பெருகுகின்றன என்பதை குரோமோசான் அமைப்பின் Telomere என்றும் பொருள் பதிவு செய்கிறது என்பது தெரியும்.
இந்த விஷயங்களைப் பற்றி மேற்கொண்ட ஒரு சமீபத்திய ஒரு உயிரியல் ஆய்வின் படி, செல்கள் முதிர்ச்சி அடைந்தாலும், Telomere கள் தேய்ந்து போனாலும் அவற்றின் DNA, பெரிதும் மாற்றமடைகின்றன. இந்த மாற்றங்கள் தான் நமது வயது ஏறுவதின் காரணம்.
இந்த ஆய்வின் தலைவர் Dr. கார்ல் செடர் (Dr. Karlseder) கூறுகிறார் – இந்த ஆய்வுக்கு முன்பு, நமக்கு தெரிந்த விஷயம் செல்கள் இரண்டாக பிரியும் போது Telomere கள் குட்டையாகி நீளம் குறைந்து கொண்டே போகின்றன. Telomere கள் ஒரு குறிப்பிட்ட நீளத்தை அடைந்ததும் செல்கள் பிரிவது நின்று விடுகிறது அல்லது செல்கள் இறந்து விடுகின்றன. இந்த அறிகுறிகள் செல்லின் உட்கரு (Nucleus) பலமாக தென்பட வேண்டும்.
இதை இன்னும் விவரமாக ஆராயவே இந்த சமீபத்திய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செல்களி ‘ஹிஸ்டோன்’ (Histone) எனும் புரதம் உள்ளது. இளவயதினரின், 30 தடவை “பிரிந்த” செல்களின் ஹிஸ்டோன் அளவுகளும், நடுத்தர வயதை தாண்டியவர்களின் 75 தடவை பிரிந்த முக்கால் முதிர்ச்சி அடைந்த செல்களின் (8 தடவை பிரிந்தால் செல் முழு முதிர்ச்சி அடையும்)
ஹிஸ்டோன் அளவுகளும் ஒப்பிடப்பட்டன. ஹிஸ்டோன் புரதங்கள் DNA வின் கோடு போன்ற இழைகளை பல பகுதி கூடிய உட்கருவாக (Nuclear Complex) அழுத்தி வைக்கின்றன. இந்த பல பகுதிகள் கூடிய நியூக்லியர் காம்ப்லெக்ஸ் ‘குரோமாடின்’ (Chromatin) எனப்படுகிறது. இளம் செல்களை விட முதிர்ந்த செல்கள் குறைவான ஹிஸ்டோனை உண்டாக்குகிறது. செல்கள் முதிர முதிர, ஹிஸ்டோன் அளவுகள் குறைந்தன. இந்தப் புரதங்கள் (ஹிஸ்டோன்) ஒரு செட் (வரிசை) ஜெனோம்களுக்கு (Genomeதேவை. ஜெனோம் என்றால் ஒரு உயிருள்ள பொருளின் அடிப்படை குரோமசான் செட். உதாரணமாக மனிதனுக்கு 23 குரோமாசன்கள் உள்ள ஒரு ஜெனோம் உள்ளது. எனவே ஹிஸ்டோன் அளவுகள் குறைந்தால் ஜெனோமின் நிலைமை ஏறுமாறாகும்.
மேலும், ஆய்வுக்குழு இளம்செல்களுக்கு முதிர்ந்த செல்களுக்கும் இடையே உள்ள காலப்போக்கு முதலியவற்றை ஆராய்ந்தது. செல்கள் பிரிவடையும் போது ஒவ்வொரு நிலையிலும் செல்களின் அபரிமிதத்திலும், ரகங்களிலும் வித்தியாசங்கள் தெரிந்தன. இளம்செல்கள் ‘மகிழ்ச்சியான’ ஆரோக்கிய குரோமடின்களை உடையவாக இருந்தன. வயதான செல்கள் பெருகுவதற்காக பிரியும் போதும் செல் பிரிவது முடிந்தவுடன் ஆரோக்கிய குரோமாடின்னாக இருக்க அவதிப்பட்டு Stress ) க்கு உள்ளதும் தெரியவந்துள்ளது.
ஒரு ஒன்பது வயதுடையவரின் செல்களும், 92 வயதுடையவரின் செல்களும் ஒப்பிடப்பட்ட போது தத்ரூபமாக ஹிஸ்டோன் மாறுதல்கள் தெரிந்தன.
வயதான பின் வரும் புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கு DNA தான் பொறுப்பு என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வு வயதாவதே ஒரு சிக்கலான சமாச்சாரம்; Telomere கள் மாற்றுவதால் ஏற்படுகிறது. DNA வும், ஹிஸ்டோமான்களும் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பது மரபணுக்களுக்கு கணிசமான விளைவுகளை உண்டாக்கும்.
வயதைக் குறைக்க வயதான செல்களின் Telomere கள் என்சைம்களால் வீரியமாக்கப்பட்ட போது, பலப்படுத்தப்பட்ட முதிர்ந்த செல்கள் இளம் செல்களை போல் ஹிஸ்டோன் அளவுகளை அதிகமாக காட்டின. இனம் செல்களைப் போல் மகிழ்ச்சியான ஆரோக்கியத்தை ஓரளவாவது காட்டின. ஆகா, நாம் நமது செல்களின் Telomere களை நீட்டினால் இளமையாகலாம் என்று நீங்கள் நினைத்தால், பொறுங்கள் என்கிறார்.
Dr. கார்ல் செடர் செல்களின் ஆயுளை நீட்டிக்கும் முயற்சிகளின் மறுபக்கம் – இறவாத செல்களை உருவாக்குவதால் புற்றுநோய் வர வழிவகுக்கும்.
இந்த ஆய்வுகள் மேலும் தொடரப்படும். ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் ஹிஸ்டோன் மாற்றங்கள் கண்காணிக்கப்படும் என்கிறார் Dr. கார்ல் செடர்.