மலர் போல் மணம் வீச…

Spread the love

காதலின் மிகப்பெரிய எதிரி உடல் துர்நாற்றம். சமூகத்தில், பொது இடங்களில் கூட உடல் துர்நாற்றம் தர்ம சங்கடத்தை உண்டாக்கும். இதில் துர்ப்பாக்கியம் என்னவென்றால், துர்நாற்றம் உடையவருக்கு, தனது உடலிலிருந்து நாற்றம் வீசுவது தெரியாது. பிறருக்குத்தான் தெரியும்.

                உடல் துர்நாற்றத்தை உண்டாக்குவது பாக்டீரியாக்கள். வியர்வையுடன் சேர்ந்து இவை இரண்டு மடங்காக பெருகுகின்றன. வியர்வையை தவிர வேறு காரணங்களாலும் உடல் நாற்றம் ஏற்படும்.

உடல் துர்நாற்ற காரணங்களின் பட்டியல்

1. வியர்வை, வியர்வை சேர்ந்த பாக்டீரியாக்கள், பூஞ்சன தொற்றுகள்.

2. சிறுநீரகம், கல்லீரல் நோய்கள் / பாதிப்புகள். குறிப்பாக சிறுநீரகம் பழுதடைந்தால் யூரியா உப்பு உடலெங்கும் பரவும். இது உடலில் கெட்ட வாசனையை உண்டாக்கும். வயிற்றுக் கோளாறுகளும் (மலச்சிக்கல்) காரணமாகலாம்.

3. ஸ்ட்ரெஸ் (ஷிtக்ஷீமீss), மனப்பரபரப்பு முதலியன

4. சர்ம நோய்கள்        

5. பரம்பரை

6. உடல் சுத்தக் குறைவு

7. நாட்பட்ட வியாதிகள்

8. பல் கோளாறுகள் – ஜிஞ்ஜிவைட்டீஸ், சொத்தை

9. மது, புகை

10. சில உணவுகள், மருந்துகள்.

உடலில் கழிவுகள் தேங்கி நிற்பதின் அறிகுறிகள் – உடல் கனமானது போன்ற உணர்வு, காலையில் எழுந்திருக்கும் போது கை, கால்கள் “விறைத்திருப்பது”, சாப்பிட்டவுடனேயே தூக்கம் வருவது, மனக்குழப்பம், மலச்சிக்கல், மூட்டுவலிகள், அடிக்கடி ஜலதோஷம், ஜுரம் வருவது முதலியன.

உடலின் துர் வாசனையை போக்க

1. நிறைய தண்ணீர் குடிக்கவும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனுடன் 500 மி.கி. கோதுமை புல்லை அரைத்து கலந்து குடித்தால் இன்னும் நல்லது.

2. அக்குள்களை சுத்தமாக வைக்க அவற்றை வினிகர் (வெள்ளை) கலந்த தண்ணீரால் கழுவலாம். முள்ளங்கி சாற்றுடன், கால் டீஸ்பூன் கிளிசரின் (நிறீஹ்நீமீக்ஷீவீஸீ) கலந்து ‘ஸ்ப்ரே’ (ஷிஜீக்ஷீணீஹ்) செய்து கொள்ளலாம். டியோடிரண்ட்டுகளுக்கு (ஞிமீஷீபீஷீக்ஷீணீஸீts) பதில் குழந்தைகளுக்கான பவுடர்களை உபயோகிக்கலாம்.

3. ஆண்களுக்கு – கடுக்காய் தோல், கோரைக் கிழங்கு, சிறுநாகப் பூ, விளாமிச்சை வேர், லோத்ரா பட்டை, நீல அல்லி, மஞ்சள் – இவற்றை பொடித்து, பவுடருடன் கலந்து உடலில் தடவிக் கொண்டால் துர்நாற்றம் போகும். பெண்கள் சந்தனம், விளாமிச்சை வேர், வெட்டிவேர், இலந்தை விதை, அகில், சிறுநாகப்பூ இவற்றின் தூளை உடலில் தடவிக் கொண்டு குளித்தால் கெட்ட வாசம் மறையும். மாதுளம் பட்டை, லோத்ரா பட்டை, தாமரை இதழ், வேப்பிலை இவற்றையும் பொடித்து, குளியலுக்கு முன் தடவி குளிக்கலாம். பாசிப்பயிறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போக அரிசி, விலாமிச்சை வேர், பூலாங்கிழங்கு இவற்றை சமஅளவு எடுத்துக் கொண்டு பொடித்து கலந்து குளியலுக்கு பூசி கொள்ள உடல் நறுமணம் வீசும்.

வாசனை திரவியங்களை தயாரிக்க உதவும் தாவரங்கள்

                மலர்கள் – ரோஜா, மல்லிகை, லாவண்டர், பழமரபூக்கள் (ஆரஞ்சு)

                பழங்கள் – ஆப்பிள், ஸ்ட்ராபெரி, செர்ரி, எலுமிச்சை, ஆரஞ்சு, வெனிலா

                இலை, பட்டைகள் – இலவங்கம், சேஜ், சிட்ரஸ், ரோஸ்மேரி, மருதோன்றி

                வேர்கள் – வெட்டி வேர், இஞ்சி

                விதைகள் – தனியா, ஜாதிபத்திரி, ஏலக்காய், சோம்பு, ஜாதிக்காய், தனியா

                மரங்கள் – சந்தனம், அகில், பைன், ரோஸ்வுட் முதலியன.

சென்டுகளால் சில பாதிப்புகள் ஏற்படலாம். அவை

1. அலர்ஜி – ஒவ்வாமை – தோலில் அரிப்பு, நமைச்சல் ஏற்படலாம்.

2. தும்மல் உண்டாகலாம்.

3. தோல் பாதிப்புகள் ஏற்படலாம்.

https://www.youtube.com/watch?v=JYZaPKhS_7E


Spread the love