மெல்லப் பேசுங்கள்!

Spread the love

சில நேரங்களில் நமக்கு அருகில் இருக்கிற ஒருவர் பேசுகிற வார்த்தைகளைக் கூட நாம் சரியாக புரிந்து கொள்ள முடியாமல், “கொஞ்சம் சத்தமாகப் பேசுங்களேன்” என்று அன்புக் கட்டளை இடுவதுண்டு. அதே நேரத்தில் ஒரு சிலர் அதிக சத்தமாகப் பேசுவார்கள் “கொஞ்சம் மெதுவாப் பேசுங்க” என்று கண்டிப்புடன் கட்டளை எழும். சத்தமாகப் பேசினாலும், மெதுவாகப் பேசினாலும் சொல்ல வந்த விஷயத்தை, சரியான தொனியில் சரியான ஆளிடம் சொல்லிவிட்டால் முடிந்தது வேலை.

இப்படித்தான் ஒரு குரு சிஷ்யனிடம் கேட்டார்கோபப்படும்போது ஏன் சத்தமாகப் பேசுகிறார்கள் தெரியுமா?சிஷ்யன் என்ன பதில் சொல்வதென்று திணறிநின்றான். குருவே சொல்ல ஆரம்பித்தார். “கோபம் வரும்போதுமனம் தூரமாகப் போகின்றது. அதனால்தான் சத்தமாகப் பேசுகிறோம். மனம் நெருக்கமாக இருந்தால்மெதுவான குரலில் பேசினால் கூட கேட்கும். காதலர்களின் மனம் நெருக்கமாக இருப்பதால்தான்அவர்களால் மெதுவாகப் பேசினாலும் கேட்டுக் கொள்ள முடிகிறது” என்றார்.

கோபம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு தேவையற்ற செயல். கோபத்தை சரியான முறையில் சமன் செய்யவில்லையெனில் அதுவே பல இன்னல்களைத் தந்துவிடும். அவை உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கக்கூடும். கட்டுப்படுத்தாத கோபம் தேவையற்ற வாக்குவாதங்களையும் சண்டை சச்சரவுகளையும் ஏற்படுத்தலாம், அவை மேலும் உங்களை மன ரீதியாகவும் பாதிக்கலாம்.

கோபம், உடலில் தேவையற்ற சுரப்புகளை உண்டாக்கும். அத்தகைய சுரப்புகளை சீர் செய்ய உடல் மேலும் பல சுரப்புகளை சுரக்க நேரிடலாம். இது இயல்பு நிலையை பாதிக்கும். இதனால் உடலுக்கு பல கேடுகள் நேரிடலாம், அவற்றில் முதன்மையானது இரத்த ஓட்டம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் சீர்கேடுகள். இதனால் ஏற்படும் உடல் நலக் கேடுகளில் சில, தலைவலி, வயிற்றுக்கோளாறுகள், து£க்கமின்மை, மனச்சோர்வு, மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், இதயத் தாக்கு, சரும உபாதைகள் மற்றும் மூளைத்தாக்கு.

இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் கோபத்தைகட்டுப்படுத்தத் தானே வேண்டும்,முடியவில்லையெனில் இதோ சில வழிகள். அப்போதைக்கு அந்த சூழ்நிலையிலிருந்துஅகன்று சென்றுவிடுங்கள். அப்போதைக்கு அந்த சூழ்நிலையிலிருந்துஅகன்று சென்றுவிடுங்கள்.

கோபத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்துகுறித்து வைத்துக்கொண்டு,அச்சூழலைத் தவிர்த்திடுங்கள். கோபம் தரும் மன அழுத்தத்தைப் போக்க நடைப்பயிற்சிஅல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். கோபம், மன அழுத்தத்தின்வெளிப்பாடு, எனவே மனதை அமைதியாகவைத்தக்கொள்ள தியானம் அல்லது யோகா பயிலலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love