சர்க்கரை வியாதி வராமல் தடுக்க, முன்பு நாம் பார்த்தபடி, பாரம்பரிய காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர் இருவரும் சர்க்கரை நோயாளிகளென்றால், பிள்ளைகளுக்கும் கண்டிப்பாக வரும். பெற்றோர் ஒருவருக்கு மட்டும் இருந்தால் பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பு 40 சதவீதம். பெற்றோரில் ஒருவருக்கும் நெருங்கிய உறவினரில் யாருக்காவது இருந்தாலும், பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பு 70 சதவீகிதம்.
நீரிழிவு நோயின் கட்டங்கள்
1. நீரிழிவிற்கு முந்தைய கட்டம் The pre – diabetic stageஇது நீரிழிவு நோய் பாதிக்காத ஆனால் கீழ்க்கண்ட காரணங்களால் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்களைக் குறிக்கும்.
A. தாய் தந்தையர் நீரிழிவு நோயாளிகளாக இருப்பவர்கள்.
B. அதிக எடை மற்றும் பெரிய தலையை உடைய குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள்.
C அடிக்கடி கருக்கலைப்பு செய்யும் பெண்கள்.
2. மறைந்திருக்கும் கட்டம்: The latent stage நீரிழிவு உடலை தாக்கி இருக்கும் ஆனால் வெளியில் சாதாரண பரிசோதனைகள் மூலம் தெரியாத கட்டம். இதற்கு சிறப்பு பரிசோதனை முறைகள் தேவைப்படும்.
3. இரசாயன கட்டம்: Chemical stage
இக்கட்டத்தில் எந்தவித நீரிழிவு அறிகுறிகளும் தென்படாது ஆனால், இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்க்கும் பொழுது சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும்.
4. மருத்துவ கட்டம்: Clinical stage இக்கட்டம் கண்டறியப்பட்ட நீரிழிவை மருத்துவரிடம் சென்று காண்பித்து மருத்துவம் செய்து கொண்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் கட்டம்.
5. சிக்கல் கட்டம்: Stage of complications
இக்கட்டம் எல்லா வகை மருத்துவமும் செய்து எந்த பயனும் இல்லாமல் பிரச்சனை ஆகி சிக்கலில் போய் விடும் கட்டம். உயர் இரத்த அழுத்தத்தைப் போலவே நீரிழிவு நோயும் ஒரு மறைந்திருந்தே கொல்லும் நோய் ஆகும். நீரிழிவு நோய் அனேக சிக்கல்களை விளைவித்து உயிரையே பறிக்கக் கூடியது.
எனவே நீங்கள் 30 வயதிலிருந்தே பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மாதிரி முன் எச்சரிக்கை எடுத்துக் கொண்டால் சர்க்கரை வியாதியிலிருந்து தப்பலாம் – குறைந்த பட்சம் டைப் – 1 நோயிலிருந்து தப்பலாம்.
தவிர பாரம்பரிய காரணங்கள் இருந்தால், நீங்கள் படிப்படியாக, நீரிழிவு நோயாளிகள் கடைபிடிக்கும் உணவு முறைகள், வாழ்க்கை முறை மாறுதல், சர்க்கரையை தவிர்த்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
நீரிழிவு – வாழ்க்கை முறை மாற்றம்
நீரிழிவு நோய், பல வியாதிகளின் நீரூற்று. அது வராமல் தவிர்க்க, வந்தால் சமாளிக்க வாழ்க்கை முறை மாற்றம் தேவை. உலகம் முழுவதும் நீரிழிவு நோய், அதுவும் டைப் – 2 பெருகி வருகிறது. இப்போது நீரிழிவு நோய் சிறுவர்களையும் விடுவதில்லை. வயது வித்யாசமின்றி தாக்குகிறது.
வாழ்க்கை முறை மாற்றங்களால் விளையும் நன்மைகள் முன்பே அறிந்தது தான். ஆனால் சிறிய, எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் கூட பெரும்பயனை அளிக்கும் என்பது சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
டைப் – 2 நீரிழிவு வரும் அபாய கட்டத்தில் உள்ளவர்கள், அந்த ஆபத்தை 58% குறைக்கலாம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் உடல் எடையில் 10 பவுண்டு குறைப்பது, ஆரோக்கிய, கட்டுப்பாடான உணவை உண்பது, உடற்பயிற்சி செய்வது.
நீரிழிவு நோயை தவிர்க்க தீவிரமான, கடினமான வாழ்க்கை முறை மாற்றங்கள் கூட தேவையில்லை. மிதமான மாற்றங்கள் கூட உதவும் என்கின்றனர் இந்த ஆய்வுகளை மேற்கொண்ட நிபுணர்கள். கலோரிகளை குறைத்து, உணவு தரத்தையும், உடற்பயிற்சியையும் மாற்றினால், அதன் பலன் சிறந்தது. இதில் ஏதாவது ஒன்றை மாற்றினாலும் நல்லது.
அதாவது உங்களாலேயே உங்கள் செயல்களால் நீரிழிவு நோயை கன்ட்ரோல் செய்ய முடியும்.
இந்த ஆய்வுகள் ஃபின்லாந்தில் மேற்கொள்ளப் பட்டவை. 522 நபர்கள் (172 ஆண், 350 பெண்கள்) இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். இவர்கள் நான்கு வருடங்கள் கண்காணிக் கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் குளூக்கோஸ் சகிப்புத்தன்மை (Glucose tolerance) குறைவாக இருந்தது. இந்த நிலை நீரிழிவு நோய் வரும் முன் நிலை. இவர்களால் உணவு உண்ட பின் குளூக்கோஸை சரிவர உட்கிரகிக்க முடியாது. இதனால் உடலில் குளூக்கோஸ் அளவுகள் அதிகமாகின்றன. உலகில் 15% மக்கள் இந்த குளூக்கோஸ் சகிப்புத்தன்மை குறைவினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பாதி நபர்கள் நீரிழிவு நோய்க்கு ஆளாவார்கள் என்கின்றனர். இந்த ஆய்வின் தலைவர், ஆய்வில் பங்கேற்றவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டனர்.
முதல் பிரிவினர்கள் ரெகுலராக உணவு நிபுணர்களால் கண்காணிக்கப்பட்டனர். இவர்களுக்கு டயட், உடற்பயிற்சிகள் பற்றி அறிவுரைகள் வழங்கப்பட்டன. உடல் எடையை குறைக்கவும், உண்ணும் கலோரிகளை குறைக்கவும், கொழுப்புகளை உண்பதை தவிர்க்கவும். அதே சமயம் நார்ச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளவும். உடல் உழைப்பை வாரம் 4 மணி நேரம் அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
இரண்டாவது பிரிவினர்கள் ரெகுலராக உணவு நிபுணர்களில் ஆலோசனையை பெறவில்லை. அவர்களுக்கு குறைந்த அளவு, போதும் போதாத அறிவுரைகள் வழங்கப்பட்டன. நோய் வரும் அபாயம் 58% குறைந்திருந்தது. யாருக்கும் நீரிழிவு ஏற்படவில்லை.
வாழ்க்கை முறைகளை மாற்றாத இரண்டாவது பிரிவினரில் 35% நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர்.
ஆரோக்கிய உணவு முறை, ஓய்வு, மனஅழுத்தத்தை (Stress) சமாளிப்பது; சீரான உடற்பயிற்சி, யோகா, தியானம் முதலியவற்றால் டயாபடீஸை கட்டுப்படுத்தலாம். இந்த ஆய்வுகள் நீரிழிவு நோய் வராமல் தடுக்க மேற்கொண்டவை. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் உங்கள் மருந்துகளை நிறுத்தி விடாதீர்கள். மருந்துடன் மேற்சொன்ன வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டால் நீரிழிவை வெற்றிகரமாக கட்டுப்பாட்டில் வைக்கலாம்.