பீ.பி., டயாபடீஸ் தடுக்க

Spread the love

நூற்றுக்கு 95% பேருக்கு இந்த பாதிப்பு உண்டு. பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் தெரியும். அறிகுறிகள் இல்லாமலும் சிலர் அவஸ்தைப்படுவது உண்டு. ரத்த அழுத்தக் கருவியில் 80 : 120 என்கிற அளவு தெரிந்தால் நீங்கள் ‘நார்மல்’ என்று அர்த்தம். இந்த அளவு எகிறினால் பீ.பி., ஆபத்து உங்களை வந்தடையும்.

உடல் பருமன், மன அழுத்தம் தான் பீ.பி.க்கு முக்கிய காரணங்கள். குழந்தைப் பருவத்தில் குண்டாக இருப்பவர்கள் வளர வளர உடல் எடையைக் குறைப்பது அவசியம். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அலட்டக் கூடாது. பரம்பரையில் யாருக்கேனும் பீ.பி., இருந்திருந்தால், சந்ததியினருக்கு வரும் ஆபத்து அதிகம்.

உணவு முறை?

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், குறிப்பாக சௌசௌ, பூசணிக்காய், தயிர் பச்சடி, கத்தரிக்காய், ‘பெப்பர்’ சேர்த்த வெள்ளரிக்காய் நல்லது. சமைத்த பின்னர் உணவில் மீண்டும் உப்பின் அளவு அதிகரிக்கும்.

அன்றாடம் 20% வரை உணவின் அளவை குறைத்துக் கொள்ளலாம். உப்பு நிறைந்த சிப்ஸ், ஊறுகாய், அப்பளம், தவிர்ப்பது அவசியம். ரத்தக் குழாய்களை அடைக்கும் ஆபத்து இருப்பதால் ஒருமுறை சமையலுக்கும் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

டயாபடீஸ்

உணவுக்கு முன்னர் 90 : பின்னர் 110, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் இயல்பான அளவு இது. இதில் ஏற்ற இறக்கம் இருந்தால் ‘டயாபடீஸ்’ டெஸ்ட் செய்வது அவசியம்.

சர்க்கரை நோயைக் கண்டுகொள்ளாமல் விட்டால் கிட்னி உள்ளிட்ட பிரச்சினைகள் வருகிறது.

உணவு முறை

ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல், அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுக்கலாம். எதற்காகவும் பட்டினி கிடக்கக் கூடாது. பாகற்காய்,  நார்ச்சத்து நிறைந்த வெந்தயக் கீரை, நாவல் பழம் நல்லது.

கைக்குத்தல் அரிசி சாதம், முழு கோதுமையில் தயாரிக்கப்பட்ட உணவுகள், ஓட்ஸ் உப்புமா எடுத்துக் கொள்ளலாம். வெந்தயம் நிறைந்த உணவு வகைகள் அவசியம். கொய்யா, கிரேப்ஸ், பைன் ஆப்பிள், ஆப்பிள் பழங்கள் நல்லது.

மில்க் ஷேக், ரெடிமேட் ஜுஸ், முளைகட்டிய சுண்டலை தவிர்த்து விடுவது நல்லது.

ஆஸ்துமா?

மூச்சுப் பாதையில் ஏற்படும் குறுக்கம்தான் ஆஸ்துமாவுக்குப் பிள்ளையார் சுழி. குளிர்காலம் வந்தால் நோய் தீவிரம் அடையும். உணவு அலர்ஜி இருந்தாலும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இதனால் ஆஸ்துமா வரும் ஆபத்து அதிகம்.

உணவுமுறை

‘சிட்ரிக் அமிலம்‘ நிறைந்த ஆரஞ்சு, கொய்யா, கிரேப்ஸ் பழங்கள் வேண்டாம். புளித்த தயிருக்கு ‘குட்பை’ சொல்லுங்கள், வெங்காயம், பூண்டு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 1 1/2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, 2 துளி எலுமிச்சை, 2 துளசி இலை போட்டு தயாரிக்கப்பட்ட மூலிகை டீ அருந்தலாம். பிரிட்ஜில் வைத்த உணவுகள் வேண்டவே வேண்டாம்.


Spread the love