வெயில் காலத்தில் ஜூன், ஜூலை ஆகிவிட்டால் சந்தையில் மாங்காயும் மாம்பழமும் குவிந்திருக்கும்.பளபளப்பான மாம்பழ வகைகளில் நம் கண்கள் அகல விரிவதுடன் ஒரு கிலோவாவது வாங்கி சாப்பிடுவோமே என்ற ஆசை, நாக்கில் நீர் ஊறி, வாங்கத் தூண்டும்.சரி… என்று மாம்பழங்கள் வாங்கிச் சென்று, ஆசையாக துண்டுகளாக வெட்டிச் சாப்பிட, அது மறுநாளே தனது பக்க விளைவை காட்டி விடும்.வயிற்றுப் போக்கு, உடல் அசதி, உடல் சில்லிட்டு போதல் என்று காண்பிக்க மிரண்டு போவீர்கள்.
வெறும் மாம்பழத்தில் இவ்வளவு பிரச்சனையா என்று நொந்து போய் யோசிக்க ஆரம்பிப்பீர்கள்.சந்தைகளில் மாம்பழங்கள் தற்போதெல்லாம் செயற்கை முறையில் கார்பைடுகள் வைத்து பழுக்க வைக்கப்படுகின்றன.வருடத்திற்கு ஒரு முறை மாநகராட்சி, நகராட்சி சுகாதாரத் துறையினர் கார்பைடு வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டன என்று படித்திருப்பீர்கள்.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ள முதன்மையான பழம் இதுதான்.இரத்தச் சோகை உள்ளவர்கள் சாப்பிட இரத்த பெருகும்.உடல் வலிமை பெறும்.நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.ஆனால், அதிக அளவு சாப்பிடக் கூடாது. தினசரி 50 முதல் 100 கிராம் அளவு வரை ஏதாவது ஒரு பழ வகையினை மனிதன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினாலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 40 கிராம் மற்றும் அதற்கும் குறைவாகத் தான் பழங்களை சாப்பிடுகிறோம். கார்பைடு கல் வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் இது என நமக்கு தெரியாமல் சாப்பிடுவதாலேயே பிரச்சனைகள் ஏற்படுகிறது.
கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் அதிக அளவு சாப்பிடும் பொழுது என்ன நேரிடும்?
1. நுரையீரல் மற்றும் மூளையில் நீர்க் கோர்வை ஏற்பட்டு நினைவு தவறுதல், புத்தி பேதலித்துப் போகுதல் ஏற்படும்.
2. கை, கால்கள் உணர்ச்சியின்மை, உடல் அசதி, குறைந்த இரத்த அழுத்தம்
3. உடல் சில்லிடுதல் ஏற்படும். இதன் காரணமாக மரணம் ஏற்படும்.
கார்பைடு கல் ஏற்படுத்தும் வேதி வினை மாற்றங்கள்
கால்சியம் கார்பைடு கற்கள் தண்ணீருடன் வினை புரிந்து அதிக அளவு அசிட்டிலின் மற்றும் சிறிதளவு எத்திலின் வாயுக்களை வெளியிடுகிறது. அசிட்டிலின் வாயு எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. வெடிக்கக் கூடியது.எத்திலின் வாயுவானது, அதிக அளவு பழுக்க வைக்கப்பட்ட பழங்களின் மேல் தோலில் காணப்படும்.இதனால் மேற்கூறிய பழங்கள் நாம் சாப்பிடும் பொழுது வாய், கண், மூக்கு, தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் எரிச்சல் ஏற்படும்.குமட்டல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும்.கண் பார்வை இழப்பு மற்றும் சுய நினைவு இழப்பு ஏற்படுமளவுக்கு செல்லும்.கர்ப்பம் தரித்தப் பெண்கள் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சாப்பிட்டால், கருவில் உள்ள குழந்தையும் பாதிக்கக் கூடும்.