கொலெஸ்ட்ரால் என்பது ஒரு விதமான கொழுப்புப் பொருளாகும். இது கல்லீரலாலும் உற்பத்தி செய்யப்படுகிறது நாம் உண்ணும் உணவுகளான மாமிசம் (இறைச்சி) முட்டையின் மஞ்சள், ஓட்டுடன் கூடிய மீன் வகை மற்றும் பால்/ பால் சார்ந்த பொருட்களிலும் இது அதிகமாகக் காணப்படுகின்றது. இந்த கொலெஸ்ட்ரால் எனும் கொழுப்பு வகை லிப்பிட் எனவும் அழைக்கப்படுகின்றது. இது உடலின் சீரான இயக்கத்திற்கும் உருவத்திற்கும் அத்தியா வசியமானதாகும். இதுவே ஹார்மோன்களின் சீரான சுரப்பிற்கும் அத்தியாவசியப் பொருளாக அமைகின்றது.
கொலெஸ்ட்ரால் லிபோபுரோட்டீன் தரும் ஒரு விதமான புரதத்துடன் சேர்ந்து இரத்தத்தில் கலந்து உடலைச் சுற்றி வருகின்றது. கொலெஸ்ட்ரால் இணைந்துள்ள புரதத்தின் தன்மையைக் கொண்டு அடர்த்தி குறைவான லிபோபுரோடீன் (LDL) எடையும் அடர்த்தி கூடுதலான லிபோபுரோடீன் (HDL) என இரு வகையாகத் தரம்பிரிக்கப்படுகின்றது. அடர்த்தி குறைவான கொலெஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது பல உடல் நலக்கேடுகளை உண்டாக்குவதால் இதனை கெடுதலான (BAD) கொலெஸ்ட்ரால் என அதிகமாக இருப்பதால் எந்த ஒரு உடல் நலக்கேடும் ஏற்படுவதில்லை. மாறாக இவ்வகை கொலெஸ்ட்ரால் கல்லீரலை சென்றடைந்து அங்கிருந்து உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றது, எனவே இவ்வகையை நல்ல (Good)கொலெஸ்ட்ரால் என சொல்கின்றோம்.
கொலெஸ்ட்ரால் அளவுகள் இந்தியாவில் நகர் புறங்களில் வாழ்பவர்கள் ஐவரில் ஒருவருக்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொலெஸ்ட்ரால் அளவுகள் பெரும்பாலும் குடும்ப – வாரிசு ரீதியான சில குடும்பங்களில் அதிகமாக இருப்பதும் கண்டறியப்படுகின்றது. இதனை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம். கொலெஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் கவனமாக அதனைக் கையாண்டு கட்டுக்குள் விரைவாகக் கொண்டு வர வேண்டும். இதற்கு சரியான சமச்சீரான உணவுகளும் உடற்பயிற்சி மட்டுமே உதவிட முடியும்.
கொலெஸ்ட்ரால் யாருக்கு அதிகமாக இருக்கலாம்
புகைப்பழக்கம் உடையவர்கள்
45 ஐக் கடந்த ஆண்கள்
55 ஐக் கடந்த பெண்கள்
நீரிழிவு நோய் உடையவர்கள்
உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள்
இதய நோய் உடையவர்கள்
குடும்ப – வாரிசு ரீதியாக இதய நோய் உடையவர்கள்
இவை ஏதேனும் உங்களுக்கு இருப்பின் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது அவசியம்.
கொலெஸ்ட்ரால் அளவு அதிகமாக உடையவர்களுக்கு பல உடல் நலச்சீர் கேடுகளை ஏற்படுத்திடும். அது வித விதமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள், உணர்குறிகள், சிக்கல்கள் உண்டாக்கும். எனவே ஒவ்வொரு வரும் அவரவர் உடல் நலத்திற்கும் குடும்ப வாரிசு ரீதியாகவும் மருத்துவரைக் கலந்து ஆலோசித்து மருத்துவம் செய்து கொண்டு கொலெஸ்ட்ரால் அளவுகளை கட்டுக்குள் வைப்பது அவசியம்.