வெளியிலிருந்து பெறப்படும் காற்று, நீர், உணவுகளை நமது உடலில் உயிர் வாழ்வதற்கு உட்கொள்கிறோம். இவை மூன்றும் நாம் உயிர் வாழ்வதற்கு அவசியமானது என்றாலும் மிகச்சரியான அளவில் எடுத்துக் கொண்டால் தான் நாம் ஆரோக்கியமாக இருக்க இயலும். காற்றும் உணவும் மட்டும் இருந்தால் போதாது. நாம் தண்ணீர் அருந்தாமல் தவிக்க இயலாது.
தண்ணீர் அருந்துவதால் நமது உடலில் விளைவுகள் பற்றி வைத்திய முறைகள் என்ன கூறுகின்றன என்று தெரிந்து கொள்வது நல்லது. இதன்மூலம் ஏற்படும் தண்ணீர் அருந்துவதின் அவசியம், முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவம் கூறும் தண்ணீர் பற்றிய கருத்துகளை வாசகர்களுக்காக இங்கு எடுத்துக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
காலையில் எழுந்தவுடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும். இதன்முலம் நமது உடலில் இயக்கங்கள் சுறுசுறுப்பும் சுத்தமும் பெறும். இதன் காரணமாக சிறுநீரகத்தின் இயக்கமும் சீராகின்றது.
தினசரி ஒரு நாள் முழுவதும் எவ்வளவு முடியுமோ அந்த அளவு தண்ணீர் அருந்தி வர தோல் சுத்தமாகும். உடலில் உள்ள நச்சுக்களை அது நீக்கி விடும். எனபது தவறான கருத்து, நமது உடலுக்கு தண்ணீர் எவ்வளவு தேவையோ அந்த அளவு அருந்தினால் போதும் தண்ணீர் குறைந்த அளவில், வேளை தவறாமல் அருந்தினால் போதும்.
அளவிற்கு அதிகமாக தண்ணீர் அருந்துவதால் ஜீரண இயக்கம் சரிவர இயங்காது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மக்கள் இந்த உண்மையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் தண்ணீரை அதிக அளவு அருந்தி நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
தண்ணீர் என்பது ஜீரணம் ஆக வேண்டிய அவசியமில்லை. அது நேரிடையாகவே குடலுக்குள் சென்று விடுகிறது.
கொதிக்க வைத்து அதனை குளிரவைத்த பின்பு அருந்தும் தண்ணீர் ஜீரணமாக 3 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. கொதிக்க வைத்து ஆறிய வெது வெதுப்பான தண்ணீர் சுமார் 1 1/2 மணிநேரம் ஜீரணமாக எடுத்துக் கொள்கிறது.
எப்போதும், எந்த அளவு வேண்டுமானாலும் தண்ணீர் அருந்தலாம் என்று எண்ணுபவர்கள் மேற்கூறிய விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு தேவையான நேரத்தில் மட்டும் தேவையான அளவு தண்ணீர் அருந்த முயற்சிக்க வேண்டும்.
வயிற்றுப் போக்கு போன்ற நேரங்களில் உடலில் ஏற்படும் நீர் இழப்பை ஈடுகட்ட, குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து தண்ணீர் அருந்திவர வேண்டும்.
மேற்கூறிய சமயங்களில் அருந்தும் தண்ணீரானது கொதிக்க வைத்து, அதன்பின்னர் குளிர வைத்த பின்னர் தான் அருந்த வேண்டும். அதிலும் முடிந்த அளவு குறைந்த அளவே அருந்த வேண்டும்.
ஒரு சில குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் தண்ணீர் அருந்துவதில் சற்றே குறைத்துக் கொள்ள வேண்டும். நாக்கு ருசி இன்மை, மூக்கில் நீர் ஒழுகுதல், சைனஸ்பிரச்சனை உள்ளவர்கள், செரிமானக் கோளாறு உள்ளவர்கள், உடல் வீக்கம், காய்ச்சல் கண்நோய், அல்சர், சர்க்கரைவியாதி உள்ளவர்கள் மேற்கூறிய பட்டியலில் குறிப்பிடப் பட்டுள்ளனர். இவர்கள் தேவைக்கு மேல் தண்ணீர் அருந்துவது, நோய்களை அதிகப்படுத்தி விடும்.
முருகன்
மேலும் தெரிந்து கொள்ள…