எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும்

Spread the love

தண்ணீர் பூலோகத்தின் அமுதம். தண்ணீர் இல்லாமல் உலகில் வாழ்வில்லை. சுத்தமான நீர் தாகத்தை தணிப்பது போல், வேறு எந்த திரவமும் தாகத்தை தணிக்காது. அதனால் தான் ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே’ என்பர். நமது உடலின் எடையில் 70 சதவிகிதம், அளவில் உடலில் தண்ணீர் இருக்கிறது. இதில் 10% குறைந்தாலே பாதிப்புகள் ஏற்படும். அதற்கு மேல் குறைந்தால் அபாயம் தான். வாய் உமிழ்நீரில் 99.5% நீர் உள்ளது.

உடலின் வெப்ப நிலையை சரியான அளவில் வைக்க தண்ணீர் உதவுகிறது. உடலின் வெப்பம் அதிகரிக்கும் போது, சருமம், நுரையீரல், சிறுநீர், மலம் என்று தண்ணீரை பல விதங்களில் சரீரம் வெளிபடுத்தி விடுகிறது. வெளிப்பட்ட நீரை ஈடுகட்ட, நாம் தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். இரண்டு விதங்களில் தண்ணீர் நமக்கு கிடைக்கிறது – நேரடியாக குடிப்பது மற்றும் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து நாம் குடிக்கும் பானங்களிலிருந்து நமக்கு தண்ணீர் சேர்கிறது. காய்கறிகளிலும், பழங்களிலும் 80 லிருந்து 90%, பாலில் 80%, மாவுப்பொருட்களில் 5 லிருந்து 35% மற்றும் மாமிச உணவுகளில் 40 லிருந்து 75% ம் தண்ணீர் உள்ளது.

நம் உடலிலிருந்து வெளியேறும் தண்ணீர் அளவு

சிறுநீர் – 1200 லிருந்து 1500 மி.லிட்டர்

வியர்வை – 700 லிருந்து 900 மி.லி

சுவாசம் – 400 மி.லி

மலம் – 100 லிருந்து 200 மி.லி

தண்ணீர் செறிந்த நீர்மச்சத்துக்கள் குறைந்தால் ஞிமீலீஹ்பீக்ஷீணீtவீஷீஸீ எனும் நீர்மச்சத்து வற்றிப்போகும் நிலை ஏற்படும். குழந்தைகளுக்கு ஏற்பட்டால், உயிருக்கே ஆபத்து நேரிடலாம். எனவே வாந்தி, வயிற்றுப்போக்கு, வியர்வை அபரிமிதமாக இருந்தால் உப்பு நீர் கரைசலை முதலுதவியாக கொடுக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 40 கிராம் சர்க்கரை, அரைதேக்கரண்டி உப்பு, அரைத்தேக்கரண்டி சோடா உப்பு (ஷிஷீபீவீuனீ தீவீ நீணீக்ஷீதீஷீஸீணீtமீ) கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்.

கண்டூஷம்

•           காலையில் எழுந்தவுடன், பல் துலக்கும் முன் வாய் நிறைய நீர் நிரப்பி கொப்பளித்து துப்புவதை, ஆயுர்வேதம் கண்டூஷம் என்கிறது. இதனால் வாய்துர்நாற்றம் விலகுகிறது. வாயில் அமிலமிருந்தால் அது வெளியேறுகிறது.

•           தண்ணீரால் கொப்பளித்தால் நாவரட்சி அடங்கும். வெந்நீரால் கண்டூஷம் செய்தால் பல் வலி, ஈறு வலி விலகும்.

உஷப்பானம்

•           சூரியன் உதிக்கும் முன் நீர் குடிப்பது உஷப்பானம் எனப்படுகிறது. இரவு படுக்கும் முன், ஒரு டம்ளர் தூய நீரை எடுத்து மூடி வைத்திருந்து, காலையில் எழுந்தவுடன் அதை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். வாய்நாற்றம் உடையவர்கள், கண்டூஷம் செய்து விட்டு குடிக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக குடிக்க வேண்டும். பழகப் பழக குடிக்கும் தண்ணீர் அளவை அதிகரித்துக் கொண்டே போகலாம்.

•           இந்த பழக்கத்தால் உடலில் உள்ள விஷச் சத்துக்கள் வெளியாகும். மூலம், ரத்தக் கொதிப்பு, காங்கை உள்ளவர்களுக்கு நல்லது. வயிறு நிறையுமளவிற்கு குடிக்கக் கூடாது. குளிர்ந்த நீரை குடிப்பதே நல்லது.

•           இந்த நீரில் ரோஜாப் பூ இதழ், சீரகப்பொடி, மல்லிப்பொடி அல்லது நன்னாரி வேர்ப்பட்டைப் பொடி (இந்த மூன்றில் ஏதாவது ஒரு பொடி) சேர்த்து ஊறவைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம். பித்த நோய்கள் குறையும். உஷப்பானம் படுக்கையில் அருந்துவதை ஆயுர்வேதம் சிபாரிசு செய்கிறது.

நாஸிகாபானம்

தூய நீரை உள்ளங்கைகளில் எடுத்து மூக்கால் உறிஞ்சிப்பருகுவது இந்த முறை, பிராணாயமம் செய்து மூக்கின் அழுக்கை அகற்றி, நாஸிகாபானம் செய்ய வேண்டும். சைனுசைடீஸ் குறையும். ஆனால் இதன் செய்முறையை யோகாசன குருவிடம் பயில வேண்டும்.

நீர் பருகும் முறைகள்

1.         எந்த நீரானாலும் சரி, அதைக்காய்ச்சி சூட்டுடனோ அல்லது ஆறவைத்து குடிக்க வேண்டும். காய்ச்சி குளிர வைத்த தண்ணீரை எந்த உடல் நிலையிலும் குடிக்கவும்.

2.         மார்பில் கபம், சளி, வயிற்றில் வாய்வு, அஜீரணம் இவற்றுக்கு சூடான நீரைக்குடிப்பது நல்லது. ஒரு பங்கு ஜலத்தை கால்பங்காக காய்ச்சி, குறுக்கி குடித்தால் வாயுநோய்கள் தணியும். அரைப் பங்காக காய்ச்சி குடிப்பது பித்த நோய்களுக்கு நல்லது.

3.         நீரைக்காய்ச்சும் போது நுரையோ அழுக்கோ மிதந்தால் அந்த நீரை உபயோகிக்க கூடாது.

4.         பகலில் காய்ச்சிய நீரை இரவில் உபயோகிக்க கூடாது. அதே போல இரவில் காய்ச்சிய நீரை பகலில் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சிய நீரை அதிக நேரம் வைத்தால் அது ‘கனமாகி’ ஜீரணமாகாது. ஆறிய வெந்நீரை மறுபடியும் காய்ச்சி உபயோகப்படுத்தக் கூடாது. தேவைக்கேற்ப அவ்வப்போது காய்ச்சி குடிக்கலாம்.

5.         காய்ச்சிய நீரை டம்ளர்களில் போட்டு ‘டீ’ யை ஆற்றுவது போல் ஆற்றக்கூடாது. தானாக ஆற விட வேண்டும்.

6.         மூர்ச்சை, மயக்கம், தலைசுற்றல், களைப்பு, வாந்தி, படபடப்பு இவற்றுக்கு குளிர்ந்த நீர் நல்லது. சளி, கபம், அஜீரணம், விக்கல், ஜுரம் இவைகளில் வெந்நீர் உசிதம்.

7.         நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். பசி எடுக்கும் போது நீரைக் குடிக்கக் கூடாது.

8.         சாப்பிடும் முன் நீர் குடித்தால் உடல் இளைக்கும். உணவின் நடுவே நீர் குடித்தால் நல்ல ஜீரணமாகும். சாப்பாட்டின் முடிவில் நீர் குடிக்க உடல் பெருக்கும், ஜீரணம் தாமதமாகும்.

9.         இரவு படுக்கு முன் வெந்நீர் உட்கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் பருகலாம். மலபந்தம் உண்டாகாது.

10.       சரகர் களைப்பை நீக்கும் பொருட்களில் சிறந்ததாக “நல்ல குடிநீரை” சொல்கிறார்.


Spread the love