குளிப்பதற்கு எது பெஸ்ட்! சுட தண்ணியா? ஜில் தண்ணியா?

Spread the love

பொதுவாக இந்த குழப்பம் அனைவருக்கும் இருக்கின்றது. இது நம்மை சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்டிருக்கும் ஒரு குழப்பம். ஏன்டா? வயது பையன் எதற்காக  சுடு தண்ணீரில் குளிக்கின்றாய் என்று, இந்த குளிரிலும் பச்சை தண்ணீரிலா குளிப்பார்கள் இப்படி கூறியே நமக்குள் ஒரு பயத்தை கிளப்பி விடுகிறார்கள். ஆனால் ஆயுர்வேதம் என்ன கூறுகின்றது என தெரிந்து கொள்ளலாம், முதலில் இவை இன்டிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை பார்க்கலாம்.

காலையில் பச்சை தண்ணீரில் குளிக்கும் போது முன்பு நமக்குள் இருந்த சோர்வு, சிந்தனை, அவற்றிற்கெல்லாம் ஒரு முடிவு வந்து அந்த நாள் புதியதாக தொடங்கும் என சொல்லப்படுகிறது. அடுத்து காலையில் எழும்போது குளிர்ந்த நீரில் குளித்தால் மன அழுத்தத்தை நீக்கும். ஆண்களின் உடல் Repredet ஆவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஆண்களின் வளர்ச்சிக்கு உதவுகின்ற Testosterone ஊக்குவிக்கப்படும். பச்சை தண்ணீரில் குளிக்கும் போது நுரையீரல் செயல்பாடு சீராகும். அதோடு நோய் எதிர்ப்பு குறையாமல், தொற்று ஏற்படுவதை தடுக்கிறது.

இப்போது சுடு தண்ணீரில் குளிக்கும் போது என்ன ஆகும் என பார்க்கலாம்.  முதலில் சுடு தண்ணீர் குளியல், தோல் பகுதியில் இருக்கும் கிருமிகளை நீக்கும். அதோடு உடல் முழுதும் சுத்தமாக்கப்படும் என கூறப்படுகிறது. அடுத்து நமது தசைக்கு நல்ல உறுதியைக் கொடுக்கின்றது. குறிப்பாக சுடு தண்ணீரில் குளிக்கும் போது, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுபடுத்தபடும் என சொல்லப்படுகிறது. மேலும் சுவாசத்தை சீராக்கும். சளி மற்றும் இருமலுக்கு நாம் கொடுக்கும் சிகிச்சை என சொல்லப்படுகிறது.

ஆனால்  ஆயுர்வேதம் கூறுவது, உடலிற்கு சுடு தண்ணீரும், தலைக்கு பச்சை தண்ணீரும் தான் நல்லதாம். இது, வயதிற்கு ஏற்றமாதிரியாக  மாறுபடுகிறது. இளம் வயதினருக்கு பச்சை தண்ணீர் குளியல், வயதானவர்களுக்கு சுடு தண்ணீர் குளியலும் அவசியமாம். அதுவும் படிப்பவர்களுக்கு எப்பொழுதும் பச்சை தண்ணீர் குளியல்தான் நல்லது. இது காலையில் மட்டும்தான். அதிக வேலை பளு உள்ளவர்கள் இரவில் மட்டும் சுடு தண்ணீரில் குளிக்கலாம். இது அவர்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும்.  


Spread the love