ஆரோக்கியமான வாழ்க்கை, சீரான உடல் வளர்ச்சி, நோயில்லா சரீரம், இதற்குநமது உடலில் ஹார்மோன் சமநிலை அவசியம். அப்படி ஒருவரின் உடலில் ஹார்மோன் சமநிலையற்று இருந்தால் என்னென்ன பிரட்சனைகள் வரும் என்று பார்ப்போம். நீரழிவு, தைராய்டு,கட்டிகள், மனஅழுத்தம், பசியின்மை, கேன்சர், குழந்தையின்மை, தாய்பால் பிரட்சனை,இரத்த சோகை, இந்த மாதிரியான அறிகுறி வருவது நிச்சயம்.
பொதுவாக மினரல்ஸ், வைட்டமின் சி மற்றும் பி, இதுதான் ஹார்மோன்குறைபாட்டிற்கு குறிப்பிட்ட ஊட்டசத்தாக இருக்கின்றது. அதனால் இந்த சத்துக்கள் தான் நமக்கு தேவைப்படுகின்றது. உடலில் ஹார்மோன் சமநிலையற்று இருக்கும் போது நாம் செய்யகூடியது என்னவென்றால்? மூலிகை உணவுகளை எடுக்க வேண்டும். தேவையில்லாத உணவுகள்மற்றும் கெமிக்கல் பொருட்களை தவிர்ப்பது நல்லது. சர்க்கரையை குறைத்து உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வரவும்.
எனவே முதலில் அத்தியாவசியமாக இருக்கும் சுத்தமான தேங்காய் எண்ணெயை உணவில் எடுக்க வேண்டும். ஏனென்றால்? இது ஹார்மோனை சமநிலையில் வைக்கின்றது. இதில் இருக்கும் கொழுப்பு அமிலம், ஹார்மோன்களின் சேதத்தில் இருந்து காக்கும். இரண்டாவது அஸ்வகந்தா, இதற்கு இயற்கையாகவே ஹார்மோன் அளவை உருவாக்க கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. இது மனஅழுத்தத்தை நீக்கி தைராய்டு சுரப்பியையும் சீராக்கும். அதனால் தினமும் 3௦௦-ல் இருந்து5௦௦mg வரை அஸ்வகந்தா கூடுதலாக எடுத்து வாருங்கள்.
பின் கெட்டி தயிர், சர்க்கரை சேர்க்கப்படாத தயிரை நாளைக்கு இரண்டுவேலை உணவில் சேர்த்துக்கொண்டால் ஹார்மோன் அளவு சீராகி உடல் செயல்பாட்டிற்கு ஊக்குவிக்கின்ற நல்ல பாக்டீரியாக்களை வழங்கும். அடுத்து வைட்டமின் டி உணவுகள், இது தினமும் தேவைப்பட கூடிய ஊட்டசத்து, இது நமக்கு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும். அது போல் பட்டாணி, முட்டை,காளான், ஈரல், மீன் போன்ற உணவுகளில் இருந்து பெறலாம். இந்த உணவுகள் Anti-Inflammation-னை கொண்டிருக்கின்றது. அது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். அதனால் ஹார்மோன்அளவை உடலில் சீராக வைக்கவும் உதவுகின்றது.
https://www.youtube.com/embed/yzQot9Pa7tQ