வீட்டிலேயே பியூட்டி பார்லர்

Spread the love

இல்லத்தில் நாமே தயாரித்துக் கொள்ளலாம் அழகு சாதனப் பொருட்களை:

1. எலுமிச்சை ஆஸ்ட்ரின்ஜென்ட்:

தேவையான பொருட்கள்:

ஐஸ் வாட்டர் -& ஒரு கோப்பை

எலுமிச்சை பழம் -& 1

செய்முறை:

ஐஸ் வாட்டரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரினால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.

2. பாதாம் மாய்ஸ்சரைசர்:

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு -& 30 கிராம்

டிஸ்டில்டு வாட்டர் -& 150 மி.லி

செய்முறை:

பாதாம் பருப்பை ஊறவைத்துத் தோலுரித்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும். இதில் டிஸ்டில்டு வாட்டரைச் சிறுகச் சிறுகக் கலந்து நன்றாக கிளறி விட்டு வடிகட்டி எடுத்து கொண்டு பயன்படுத்தலாம். இரு ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் ஆகும்.

3. ரோஸ் வாட்டர் மாய்ஸ்சரைசர்:

தேவையான பொருட்கள்:

கிளிசரின் -& 25 மி.லி

பன்னீர் &- 45 மி.லி

செய்முறை:

கிளிசரினுடன் பன்னீர் சேர்த்துக் கலக்கி பாட்டில் ஒன்றில் வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் முன்பு நன்றாக குலுக்கிக் கொள்ள வேண்டும்.

4. கண்டிஷனர் (Conditioner):தேன் – முகத்தை நன்கு கழுவிய பின்பு முழுவதும் துடைக்காமல் லேசாக ஈரம் இருக்கும் போதே தேனை நன்கு தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் அப்படியே இருக்க விட்ட பின்னர் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி கழுவி விட வேண்டும்.

தேன் மற்றும் பாலாடை -பாலாடை கிரிம் 2 மேஜைக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு அதனுடன் 1 தேக்கரண்டி தேனைக் கலந்து நன்கு குழைத்த பின்னர் முகத்தில் தடவி 20 நிமிடம் கழிந்த பின்னர் தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும்.

5. கண்டிஷனர் க்ரீம்:

தேவையான பொருட்கள்:

முட்டையின் வெள்ளைக் கரு – 1

தேன் – 2 தேக்கரண்டி

பாதாம் எண்ணெய் – 5 சொட்டு

செய்முறை:

முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து நுரை எழச் செய்து அதனுடன் தேனைச் சேர்த்து மீண்டும் கலக்கவும். சொட்டுச் சொட்டாக பாதாம் எண்ணெயைச் சேர்த்துக் கலக்கி பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். இரண்டு மூன்று நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

6. ப்ளீச் லோஷன் (Bleach Lotion) முதல் வகை:

தேவையான பொருட்கள்:

நடுத்தரமான வெள்ளரிக்காய் – 1

கிளிசரின் – 1 தேக்கரண்டி

பன்னீர் – 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி

செய்முறை:

வெள்ளரிக்காயைத் தோல் சீவி விட்டு கேரட் துருவியில் துருவி எடுத்து ஒரு துணியில் எடுத்துப் பிழிந்து சாறு எடுக்கவும். இந்த சாறுடன் மற்ற மூன்று பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். முகத்திலும் கைகளிலும் ஒரு பஞ்சில் தொட்டு நன்கு தடவவும். சிறிது காய்ந்ததும் மேலும் ஒரு முறை தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும். லோஷன் மீது இருப்பின் ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றி பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். இரண்டு மூன்று நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

7. ப்ளீச் லோஷன் (Bleach Lotion) இரண்டாம் வகை:

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் கஞ்சி – ஒரு தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

எலுமிச்சை சாறு மற்றும் ஓட்ஸ் கஞ்சி இரண்டையும் சேர்த்து சிறிதளவு வெந்நீர் சேர்த்துப் பசை போல கரைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும்.

ஆப்பிள் ஃபேசியல்:

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் &- 1

பாலாடை -& 1 தேக்கரண்டி

தேன் -& ஒரு மேஜைக் கரண்டி

 ஓட்ஸ் -& ஒரு மேஜைக் கரண்டி

செய்முறை:

ஆப்பிளை நன்கு மசித்து  அதனுடன் பாலாடை, தேன், அரைத்த ஓட்ஸ் ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தலாம்.

தேன் ஃபேசியல்:

தேவையான பொருட்கள்:

தேன் -& 30 மி.லி

எலுமிச்சைச் சாறு -& 1 தேக்கரண்டி

முட்டை &- 2

 பாதாம் எண்ணெய் -& 1 தேக்கரண்டி

ஓட்ஸ் கஞ்சி -& 2 மேஜைக் கரண்டி

செய்முறை:

முட்டையை உடைத்து எடுத்துக் கொண்டு ( அடிக்க வேண்டாம் ) அதனுடன் தேன், பாதாம் எண்ணெய், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும். பின்னர் அரைத்த ஓட்ஸைக் சேர்க்கவும். மற்ற பேஷியல் வகைகள் போல இதையும் முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து நீக்கி விடலாம்.


Spread the love