முகம் பொலிவுடன் தோற்றமளிக்க என்ன செய்யலாம்?

Spread the love

தேவையற்ற முடியை எவ்வாறு அகற்றுவது?

வசம்பு, லோத்திரப்பட்டை, கொத்தமல்லி விதை, மூன்றையும் சேர்த்து முகத்தில் பூசவும். பருக்கள், தேவையற்ற முடிகள் நீங்கும்.

மஞ்சிட்டி, கடுகு, மஞ்சள், பூங்காவி, மரமஞ்சள் ஆகியவற்றை பொடித்து, ஆட்டுப்பாலுடன் கலந்து முகத்தில் பூசவும். நன்கு ஊற வைத்து முகம் கழுவ வேண்டும். முகம் அழகான தோற்றத்துடன் ரோமம் நீங்கி பொலிவுடன் விளங்கும்.

தினசரி கடுகெண்ணைய் முகத்தில் மாலையில் தடவி, தேய்த்துக் குளிக்கவும். முகம் பளிச்சென்று இருக்கும்.

அகில் கட்டையை தூள் செய்து தயிர் மேல் பரவிக் கிடக்கும் தண்ணீரை எடுத்துக் குழைத்து தேவையற்ற முடியிருக்கும் பகுதியில் பூசவும். கொஞ்ச நேரம் ஊர வைக்கவும். கழுவினால் முடி உதிரும். பாசிப் பயறு, சந்தனம், பூலாங்கி கிழங்கு, கார்போக அரிசி, வெட்டிவேர், கோரைக் கிழங்கு, விளாமிச்சை வேர் ஆகியவற்றை ஒரே அளவில் எடுக்கவும். பொடித்து தயிர் தெளிவாக இருக்கும் நீருடன் பூசிக் குளித்தால் முடிகள் உதிரும்.

மஞ்சிட்டி, தினைமாவு, ஆலம் விழுது, மசுரப்பருப்பு, செஞ்சந்தனம், லோத்திரப்பட்டை, வாசனைக் கோஷ்டம் போன்றவற்றை நன்கு பொடிக்கவும்.  தண்ணீர் கலந்து முகத்தில் பூசவும். முடிகள் நீங்கும் முகத்திலுள்ள கருமையும் அகலும்.

கட்டைச் சந்தனத்தை இழைத்து, குங்குமப்பூ, சிறுநாகப்பூ, சேர்த்து இடித்து முகத்தில் பூசி ஊறவும். தேவையற்ற முடி உதிர்ந்து விடும்.

ஆண்கள் முகம் பொலிவுடன் விளங்க மசூரப் பருப்பை, பால் சேர்த்து அரைத்துப் பூசி, ஊறவைத்து கழுவினால் முகம் சோபையுடன் தோன்றும்.

மிளகு, கோரோசனை சேர்த்து அரைத்துப் பூசினால் முகப்பரு மறையும்.

அதிமதுரம், லோத்திரப் பட்டை, ரவை அரிசி சேர்த்துப் பொடிக்கவும். குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் பூசி மூன்று மணிநேரம் ஊறி கழுவ வேண்டும். முகத் தோற்றம் நன்கு இருக்கும்.

அஸ்வகாந்தி லேகியம், சித்த மகரத்து வஜம், அழுக்கரா சூரணம் போன்றவற்றை சாப்பிட்டால் தோள்கள் உருண்டு, திரண்டு இருக்கும். ஆண்கள் இதைச் செய்யலாம்.

பெண்கள் அசோக கிருதம், பலசர்ப்பிஸ், குமார்யாசவம் போன்றவற்றைச் சாப்பிட்டால் நல்ல முக அழகைப் பெற முடியும்.

முகப்பருவை போக்க 5 எளிய வழிகள்

1.தனியா ஒரு தேக்கரண்டி பொடி செய்து, சிறிது மஞ்சள் பொடி கலந்து நீர் சேர்த்துக் குழைத்து இரவில் படுக்குமுன்பு, பருக்களின் மீது தடவி காலை எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

2.சிவப்புச் சந்தனம், மஞ்சள் பொடி தலா 5 கிராம் எடுத்து பாலுடன் சேர்த்துக் குழப்பி, பருக்கள் மீது தடவவும்.

3.கொதிக்கும் நீரில் மஞ்சள் பொடி, துளசி இலைகளைச் சேர்த்து, டவலால் தலையை மூடிக் கொண்டு ஆவி பிடிக்கலாம். இதனால் சருமத்தில் உள்ள மெல்லிய துவாரங்கள் விரிவடைந்து, அழுக்கும். கொழுப்பும் வெளியே வரும். பிறகு முகத்தை சுத்தமாக கழுவி விடவும்.

4.உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் செய்து வரவும்

5.மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளவும்.


Spread the love