வீட்டிலேயே பியூட்டி பார்லர்

Spread the love

இல்லத்தில் நாமே தயாரித்துக் கொள்ளலாம் அழகு சாதனப் பொருட்களை:

கடைகளில் விற்பனை செய்யப்படும் அழகு சாதனப் பொருட்கள் க்ளென்சர் (Cleanser), ப்ரெஷ்னர்ஸ் (Freshners),அஸ்டிரின்ஜன்ட்ஸ் (Astringents), மாய்ஸ்சரைசர்ஸ் (Moisturizers), கண்டிஷனர்ஸ் (Conditioners), பீலர்ஸ் (Peelers) அல்லது  Extoliators), பேஷியல்ஸ் Facialcs), மாஸ்க்ஸ் (Masks) என்று பல விதங்களில் விற்பனை செய்து வரப்படுகின்றன. இவை எங்கும் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும்,எளிதில் பயன்படுத்தக் கூடியதாகவும் இருப்பினும் இவைகளின் விலைகள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எளிதில் வாங்க இயலாத அளவுக்கு விலை அதிகமாக இருப்பது ஏக்கப் பெருமூச்சை வரவழைக்கவும் செய்கிறது. தரமான, சிறந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இத்தகைய பொருட்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவை என்பதில் சந்தேகம் இல்லை. இத்தகைய அழகு சாதனப் பொருட்கள் இயற்கை முறையிலேயே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது நாட்டில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்களும், சீனர்களும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதில் சிறந்த வல்லுநர்களாகவும் இருந்தனர். இயற்கை முறையில் தாவரங்களின் மருத்துவ குணங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட பல அழகு சாதனப் பொருட்கள் மேலை நாடுகளிலும் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.

நமக்குத் தேவைப்படும் பல அழகு சாதனப் பொருட்கள் எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு, தேவைப்படும் அளவுக்கும் தயாரித்துக் கொள்ள இயலும். இதன் மூலம் செலவும் குறைகிறது, அழகும் கூடுகிறது. உடலுக்கு தீங்கு செய்யாத ஒன்றாகவும் நமக்கு அமைகிறது. அழகான முகமும், சருமமும் பெறுவதற்கு அவசியமானதாக கருதப்படுபவை க்ளென்சிங்க, ப்ரெஷனிங், மாய்ஸ்சரைசிங் மற்றும் கண்டிஷனிங் என்ற நான்கு செயல்களையும் செய்கின்ற பொருட்கள் தான். இதில் முதல் மூன்று செயல்களையும் வரிசைப்படி பயன்படுத்துவதற்கு தினமும் சில நிமிடங்கள் போதும். கண்டிஷனிங் கிரிம் இரவு முழுவதும் அல்லது பகலில் சில மணி நேரமோ இருத்தல் வேண்டும். என்பது சருமத்திலுள்ள இறந்த செல்களை உரித்து எடுப்பதாகும். இது போல Facial என்பது சருமத்தைத் தூண்டி செயல்பட வைப்பதுடன், சருமத்திற்கு சத்தையும், ஊட்டத்தையும் தரவல்லது. இவ்விரண்டையும் வாரம் ஒருமுறை செய்தால் போதுமானது. அதிகச் செலவின்றி எளிய முறையில் இல்லத்திலேயே செய்து கொள்ளத்தக்க அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பு முறைகளைக் கீழே காணலாம்.

1.க்ளென்சர் (Cleanser) லைட் க்ளென்சிங் க்ரீம்:

தேவையான பொருட்கள்:

வெள்ளை மெழுகு (White wax) -& 15 கிராம்

பாதாம் எண்ணெய் &- 90 மி.லி.

போரிக் ஆசிட் பவுடர் &- 1.5 கிராம்

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் -& 75 மி.லி.

செய்முறை:

ஒரு கண்ணாடி குவளை அல்லது கோப்பையில் மெழுகை வைத்து  குவளையை கொதிக்கும் தண்ணீரில் உள்ள பாத்திரத்தில் வைத்து வாக்ஸை உருக வைக்கவும். உருகும் போது பாதாம் எண்ணெயை மெல்ல மெல்ல ஊற்றி விடவும். ஒரு மேஜைக் கரண்டியில் சிறிதளவு சுத்திகரிக்கப்பட்;ட தண்ணீரை எடுத்து அதைச் சிறிது சூடாக்கிய பின்னர் அதில் போரிக் ஆசிட்டை இட்டுக் கலக்கவும். நன்கு கலக்கியதும் அந்த கலவையை உருகும் மெழுகு, பாதாம் எண்ணெய்க் கலவையுடன் சேர்க்கவும். குவளையை கொதிக்கும் தண்ணீரை விட்டு எடுத்து விசிறிக் குளிர வைக்கவும். ஆறிய பின்பு நல்ல கிரிம் கிடைக்கும்.

2. தயிர்,எலுமிச்சை கிரிம்:

தேவையான பொருட்கள்:

கெட்டித்தயிர் – & 1 மேஜைக் கரண்டி

எலுமிச்சை சாறு -&  1 மேஜைக் கரண்டி

செய்முறை:

கெட்டித்தயிர், எலுமிச்சைச் சாறு இரண்டையும் ஒன்று சேர்த்து நன்கு கிளறிக் கலந்தால் தயிர் எலுமிச்சை க்ளென்சிங் கலவை கிடைக்கும். ஒவ்வொரு முறை தேவைக்கும் புதிதாகத் தயாரிக்க வேண்டும்.

3. வெள்ளரி க்ளென்சிங் மில்க்:

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் ( மீடியமானது ) -& 1

காய்ச்சி ஆற வைத்த பால் -& 100 மி.லி

செய்முறை:

வெள்ளரிக்காயை கேரட் துருவியில் துருவிப் பிழிந்து சாறு எடுத்துப் பாலுடன் கலந்து பிரிட்ஜில் வைத்துக் கொண்டு 2 அல்லது 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

4. ஆப்பிள் க்ளென்சிங்க மில்க்:

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் -& 1

பால் -& 1 மேஜைக்கரண்டி

புல்லர்ஸ் எர்த் (Fullers Earth) &- 1 மேஜைக்கரண்டி

செய்முறை: ஆப்பிளை மிக்ஸியில் இட்டு அடித்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பாலையும், புல்லர்ஸ் எர்த்தையும் சேர்த்து நன்றாக கலந்து உபயோகப்படுத்தலாம்.

பி.கு: புல்லர்ஸ் எர்த் கடைகளில் கிடைக்கும்.

5. ப்ரெஷ்னர் (Freshner):

தேவையான பொருட்கள்:

எலுமிச்சம் பழம் -& 3

ஆரஞ்சு பழம் &- 1

வெள்ளரி காய் -& 1

பன்னீர் -& 25 மி.லி

ஆல்ஹகால் -& 40 மி.லி.

செய்முறை:

எலுமிச்சை, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் மூன்றையும் சாறு எடுத்து ஆல்ஹகாலுடன் கலந்து பன்னீர் சேர்த்து வைத்துக் கொண்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. ஆல்மண்ட் ஆஸ்டின்ஜன்ட் (Almond Astringent):

தேவையான பொருட்கள்:

போரிக் ஆசிட் பவுடர் -& 1 தேக்கரண்டி.

பென்சாயின் டிஞ்சர் (Benzoin Tinture) – ஒன்றரைத் தேக்கரண்டி

பன்னீர் -& ஒரு கப்

அரைத்த பாதாம் விழுது &- 2 தேக்கரண்டி

சுத்திகரிக்கப்பட்ட நீர் (Distilled Water) -& 1 கப்

செய்முறை:

போரிக் ஆசிட் பவுடரை பென்சாயின் டிஞ்சருடன் கலந்து பன்னீருடன் சேர்க்கவும். அரைத்த பாதாம் விழுதை டிஸ்டில்டு வாட்டரில் கலக்கவும். 2 திரவங்களையும் ஒன்றாகச் சேர்த்து குலுக்கிப் பாட்டிலில் வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

7. எலுமிச்சை ஆஸ்ட்ரின்ஜென்ட்:

தேவையான பொருட்கள்:

ஐஸ் வாட்டர் -& ஒரு கோப்பை

எலுமிச்சை பழம் -& 1

செய்முறை:

ஐஸ் வாட்டரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரினால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.

8. பாதாம் மாய்ஸ்சரைசர்:

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு -& 30 கிராம்

டிஸ்டில்டு வாட்டர் -& 150 மி.லி

செய்முறை:

பாதாம் பருப்பை ஊறவைத்துத் தோலுரித்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும். இதில் டிஸ்டில்டு வாட்டரைச் சிறுகச் சிறுகக் கலந்து நன்றாக கிளறி விட்டு வடிகட்டி எடுத்து கொண்டு பயன்படுத்தலாம். இரு ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் ஆகும்.

9. ரோஸ் வாட்டர் மாய்ஸ்சரைசர்:

தேவையான பொருட்கள்:

கிளிசரின் -& 25 மி.லி

பன்னீர் &- 45 மி.லி

செய்முறை:

கிளிசரினுடன் பன்னீர் சேர்த்துக் கலக்கி பாட்டில் ஒன்றில் வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் முன்பு நன்றாக குலுக்கிக் கொள்ள வேண்டும்.

10. கண்டிஷனர் (Conditioner):

தேன் – முகத்தை நன்கு கழுவிய பின்பு முழுவதும் துடைக்காமல் லேசாக ஈரம் இருக்கும் போதே தேனை நன்கு தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் அப்படியே இருக்க விட்ட பின்னர் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி கழுவி விட வேண்டும்.

தேன் மற்றும் பாலாடை -பாலாடை கிரிம் 2 மேஜைக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு அதனுடன் 1 தேக்கரண்டி தேனைக் கலந்து நன்கு குழைத்த பின்னர் முகத்தில் தடவி 20 நிமிடம் கழிந்த பின்னர் தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும்.

11. கண்டிஷனர் க்ரீம்:

தேவையான பொருட்கள்:

முட்டையின் வெள்ளைக் கரு – 1

தேன் – 2 தேக்கரண்டி

பாதாம் எண்ணெய் – 5 சொட்டு

செய்முறை:

முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து நுரை எழச் செய்து அதனுடன் தேனைச் சேர்த்து மீண்டும் கலக்கவும். சொட்டுச் சொட்டாக பாதாம் எண்ணெயைச் சேர்த்துக் கலக்கி பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். இரண்டு மூன்று நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

12. ப்ளீச் லோஷன் (Bleach Lotion) முதல் வகை:

தேவையான பொருட்கள்:

நடுத்தரமான வெள்ளரிக்காய் – 1

கிளிசரின் – 1 தேக்கரண்டி

பன்னீர் – 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி

செய்முறை:

வெள்ளரிக்காயைத் தோல் சீவி விட்டு கேரட் துருவியில் துருவி எடுத்து ஒரு துணியில் எடுத்துப் பிழிந்து சாறு எடுக்கவும். இந்த சாறுடன் மற்ற மூன்று பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். முகத்திலும் கைகளிலும் ஒரு பஞ்சில் தொட்டு நன்கு தடவவும். சிறிது காய்ந்ததும் மேலும் ஒரு முறை தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும். லோஷன் மீது இருப்பின் ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றி பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். இரண்டு மூன்று நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

12. ப்ளீச் லோஷன் (Bleach Lotion) இரண்டாம் வகை:

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் கஞ்சி – ஒரு தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

எலுமிச்சை சாறு மற்றும் ஓட்ஸ் கஞ்சி இரண்டையும் சேர்த்து சிறிதளவு வெந்நீர் சேர்த்துப் பசை போல கரைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும்.

ஃபேசியல் (Facial):

ஆப்பிள் ஃபேசியல்:

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் &- 1

பாலாடை -& 1 தேக்கரண்டி

தேன் -& ஒரு மேஜைக் கரண்டி

ஓட்ஸ் -& ஒரு மேஜைக் கரண்டி

செய்முறை:

ஆப்பிளை நன்கு மசித்து  அதனுடன் பாலாடை, தேன், அரைத்த ஓட்ஸ் ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தலாம்.

தேன் ஃபேசியல்:

தேவையான பொருட்கள்:

தேன் -& 30 மி.லி

எலுமிச்சைச் சாறு -& 1 தேக்கரண்டி

முட்டை &- 2

 பாதாம் எண்ணெய் -& 1 தேக்கரண்டி

ஓட்ஸ் கஞ்சி -& 2 மேஜைக் கரண்டி

செய்முறை:

முட்டையை உடைத்து எடுத்துக் கொண்டு ( அடிக்க வேண்டாம் ) அதனுடன் தேன், பாதாம் எண்ணெய், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும். பின்னர் அரைத்த ஓட்ஸைக் சேர்க்கவும். மற்ற பேஷியல் வகைகள் போல இதையும் முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து நீக்கி விடலாம்.


Spread the love