வாய்ப்புண்
மாசிக்காயை தாய்ப்பாலில் உரைத்து வாயில் தடவ குணமாகும்.
அக்கி
பசுந்தயிரை வெள்ளைத் துணியில் கட்டி இறுத்திவிட்டு அதில் திருநீறைக் குழைத்துப் பூசலாம்.
மலச்சிக்கல்
திராட்சை உலர்ந்தது 5 எடுத்து வெந்நீரில் ஊற வைத்து காலையில் திராட்சையை நன்றாக கசக்கி சாறு எடுத்துக் கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.
வயிற்றுக் கோளாறு
ஆப்பிள் சாறு எடுத்து ஒரு சங்கு கொடுக்க குழந்தைகளின் வயிற்றுக் கோளாறு குணமாகும்.
இருமல் தீர
வெள்ளை வெங்காயத்தின் சாறுடன் சர்க்கரை சம அளவு சேர்த்துக் காய்ச்சி 1 ஸ்பூன் அளவு கொடுக்க இருமல் நீங்கும்.