சின்னச் சின்ன மருத்துவம்

Spread the love

தலைவலி

சைப்ரஸ் ஆயில், 1 துளி, பட்டை ஆயில் 1 துளி, இரண்டையும் கொதிக்கிற தண்ணீரில் விட்டு, ஆவி பிடித்தால் தலைவலி பறந்து போகும்.

கழுத்துவலி

டூவீலர், கார் ஓட்டுவோருக்கு கழுத்து வலி தவிர்க்க முடியாதது. 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில், 2 துளி பிளாக் பெப்பர் ஆயில், 2 துளி கற்பூர ஆயில், 1 துளி சைப்ரஸ் ஆயில் கலந்து மென்மையாக மசாஜ் செய்யலாம்.

முதுகுவலி

வெந்நீரில் 5 துளி பெர்கமாட் ஆயில் 5 துளி ஸ்பை கினார்ட் ஆயில் கலந்து, இடுப்பு மற்றும் முதுகில் வலியுள்ள பகுதிகளில் படும்படி விட்டால் உடனடி நிவாரணம் தெரியும். தேங்காய் எண்ணெயில் இந்த இரண்டு எண்ணெயிலும் 3 சொட்டு கலந்து, மசாஜும் செய்யலாம்.

கால்வலி

முக்கால் பக்கெட் பொறுக்கும் சூடுள்ள தண்ணீரில் 1 கைப்பிடி கல் உப்பு 10 துளிகள் யூகலிப்ட்ஸ் ஆயில், 10 துளிகள் லெமன் ஆயில், 5 துளிகள் ஜின்ஜர் ஆயில் கலந்து கால்களை சிறிது நேரம் ஊற வைத்துத் துடைத்து விட்டுப் படுக்கப் போனால் வலி மாயமாகும்.

ஜலதோஷம்

வெந்நீரில் 3 துளிகள் பைன் ஆயில், 2 துளிகள் மென்த்தால் ஆயில், 2 துளிகள் ஜின்ஜர் ஆயில் கலந்து ஆவி பிடித்தால், அடைபட்ட மூக்கு உடனே சரியாகும். இதே ஆவியை வாய்வழியே உள்வாங்கினால் தொண்டைக் கட்டும் கரகரப்பும் சரியாகும்.
வறட்டு இருமல்.

வெதுவெதுப்பான தண்ணீரில் 3 துளிகள் ரோஸ் ஆயில், 2 துளிகள் லெமன் ஆயில் கலந்து கொப்பளித்து துப்ப வேண்டும். தொண்டைப் புண் சரியாகி, இன்ஃபெக்ஷனும் குணமாகும். இருமல் உடனே நிற்கும்.

வயிற்று வலி

மாதவிலக்குக்கு முன்பு சிலருக்குக் கடும் வயிற்று வலி வரும். மாதவிலக்கு வருவதற்கு 3 நாள்கள் முன்னதாகவே 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 5 துளிகள் சிடர்வுட் ஆயில், 5 துளிகள் ரோஸ்மெரி ஆயில், 5 துளிகள் பிளாக் பெப்பர் ஆயில், 5 துளிகள் சைப்ரஸ் ஆயில் கலந்து, மென்மையாக மசாஜ் செய்தால் வலி வராது.

கண் எரிச்சல்

குளிர்ந்த தண்ணீரில் நனைத்த பஞ்சில், 3 துளிகள் லோட்டஸ் ஆயிலும், 3 துளிகள் ஜாஸ்மின் ஆயிலும் விட்டு, கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். தொடர்ந்து செய்து வந்தால் “மெட்ராஸ் ஐ” வருவதைக் கூடத் தவிர்க்கலாம்.


Spread the love