ஆயுர்வேத மூலிகைகள் கொண்டு சருமத்தை பராமரிப்பது எப்படி?

Spread the love

இரசாயனம் கலந்த பொருட்களை உபயோகப்படுத்தும்போது நம் தோலிற்கு ஏற்றதா என்று அறிந்து பயன்படுத்துவது நல்லது. இரசாயனம் கலந்த அனைத்து தயாரிப்புகளும் அனைவருக்கும் உகந்ததா என்பது சந்தேகம் தான். ஆனால் ஆயர்வேத மூலிகைகளைப் பொறுத்த வரைக்கும் நம் சருமத்திற்கு எவ்விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. அனைவரும் இதனை தாராளமாக தினமும் உபயோகப்படுத்தலாம். இது நம் சருமத்தை சுத்தம் செய்து பருக்கள் வரமால் பாதுகாக்கிறது. உலர்ந்த மற்றும் எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்கள் ஆயுர்வேத மூலிகைகளை உபயோகப்படுத்தலாம். அத்தகைய மூலிகைகள் பற்றி இங்கு நாம் பார்க்கலாம்.

  1. மல்லிகைப் பூ இலைகள் : நறுமணம் கொண்ட மல்லிகை பூவின் இலைகள் அநேக மருத்துவ குணங்கள் கொண்டது. மல்லிகை பூவின் இலைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் உள்ளது. இது நமது தோலிற்கு எவ்வித நோய்த்தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் உடலில் உள்ள எண்ணெய் அளவிற்கு அதிகமாக சுரக்காமல் தடுக்கிறது.
  1. சந்தனக்கட்டை : இது நம் சருமத்திற்கு குளிர்ச்சியை அளித்து சருமத்தை இலகுவாக வைக்க உதவுகிறது. பருக்கள்,தோல் சுருக்கம், rashes போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. நம் சருமத்திலுள்ள நீர் வற்றாமல் தூய்மையாக வைக்க உதவுகிறது. மேலும் சூரிய ஒளியில் இருந்து வரும் ultra violet கதிர்களிலிருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது.
  1. வேப்பிலை, இது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள ஒரு அரிய மூலிகை.. நம் சருமத்தின் உட்பகுதியில் ஊடுருவி சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கக்கூடியது. இது இயற்கையாகவே சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசை மற்றும் பாதுகாப்பைத் தருகிறது. இது உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது.
  2. முருங்கைக் கீரை, இதில் anti inflammatory மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் உள்ளது. இது நம் சருமத்தில் காயங்கள் மற்றும் முகப்பருக்கள் வராமல் பாதுகாக்கிறது. மேலும் முகச்சுருக்கம் ஏற்படுவதையும் தடுக்கிறது.
  3. குங்குமப்பூ : இது சருமத்தை மென்மையாக பொலிவுடன் வைக்கும் ஆற்றல் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தி இதில் அதிக அளவிலுள்ளது. தோலிற்கு நிறத்தைக் கொடுக்கக் கூடியது. இது பருக்கள் மற்றும் கருமை படியாமல் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. சிறிதளவு குங்குமப்பூவை பாலில் ஊறவைத்து அதனை முகத்தில் தடவவும்.
  4. சோற்றுக்கற்றாழை : இந்த மூலிகை ஆயுர்வேத மருத்துவத்தில் அநேக நோய்தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு பொருளாகவும், உடல் பாகங்கள் அனைத்திற்கும் சக்தியளிக்கும் காயகல்பமாகப் பயன்படுகிறது. அநேக சரும நோய்களுக்கு சோற்றுக்கற்றாழை நல்ல தீர்வாக அமைகிறது.

Spread the love