மங்குவால் பாதிக்கப்படும் தோலை எவ்வாறு சீர்படுத்துவது?

Spread the love

ரத்தம் கெடுவதால் கன்னங்களில் மங்கு ஏற்படும். கோபம், அபரீதசெக்ஸ், பட்டினி, கவலை, மன அழுத்தம், நெருப்பருகில் வேலை, புளி, உப்பு, காரம், வீரியமான உணவு, எரிச்சலை ஏற்படுத்தும் பண்டங்கள், கடுகு, புண்ணாக்கு, உடும்பு, தயிர், மோர், கொள்ளு, நல்லெண்ணைய், மீன், வெள்ளாட்டு மாமிசம், புளித்துப் போன கஞ்சி, துளசி, மது, முருங்கைக் கீரை, அதிகமான திரவச் சாப்பாடு, வெயிலில் அலைவது, பகலில் தூக்கம்.  அஜீரணமாக உணவு வயிற்றில் இருக்கும்பொழுது மேலும் சாப்பிடுவது. உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை உண்பது போன்றவற்றால் ரத்தம் கெடும்.

குடல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க அடிக்கடி பேதி சாப்பிட வேண்டும்.

மங்கு குறைய வழிகள்: தினசரி மாலையில் கடுகெண்ணையை முகத்தில் தடவி தேய்க்கவும். 1/2 மணி நேரம் ஊறியதும் முகத்தைக் கழுவவும். ஜாதிக்காயை தண்ணீர்விட்டு அரைத்து முகத்தில் பூசவும். மசூரப்பருப்பை பால்விட்டு அரைத்து அதை நெய்யில் சேர்த்து முகத்தில் பூசவும்.

இலந்தை விதையை பொடி செய்து தேன், வெல்லம், எண்ணெய் சேர்த்து குழைக்கவும். பின் முகத்தில் பூசவும்.

ஆலின் வெண்துளிர் அல்லது பருப்பு, லோத்தரைப்பட்டை, மல்லியிலை, வாசனைக் கோஷ்டம், அகில், செஞ்சந்தனம் ஆகியவற்றை தூளாக்கி முகத்தில் பூசவும். பரு, மங்கு மறையும்.

இலந்தை விதை, கவுலா ( ஞாழல் பூ ) நீல அல்லி, மஞ்சள் சந்தனம், வாசனைக் கோஷ்டம் ஆகியவற்றை பொடி செய்து தயிர் தெளிவில் குழைக்கவும். இரவில் முகத்தில் பூசவும். காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். கருமை, சுருக்கம் நீங்கி விடும்.

இவற்றில் ஒன்றை சில நாட்கள் தொடர்ந்து பூசினால் பலன் கிடைக்கும். குங்குமாதி தைலம் இரண்டு சொட்டை காலை, இரவில் பல் தேய்த்ததும் கொப்பளித்ததும் மூக்கில் விடவும்.


Spread the love