வீட்டு வைத்தியம்

Spread the love

தீப்புண்கள்

வீடுகளில் நடக்கும் விபத்துகளில் அதிகம் ஏற்படுவது தீப்புண்கள். நெருப்பு, மின்சாரம், ரசாயனப் பொருட்கள், கொதிக்கும் எண்ணெய், நீர், இவைகளால் தீக்காயங்கள் உண்டாகும். சிறிய, மேலாக ஏற்பட்ட தீக்காயங்களுக்கு வீட்டிலேயே முதலுதவி போதுமானது. இருந்தாலும் தீக்காயங்கள் தொற்று நோய்க்கு ஆளாகும் அபாயம் அதிகமானதால், முதலுதவிக்கு பின் டாக்டரிடம் ஒரு தடவை காண்பிப்பது நல்லது.

சிறிய, ஆழமாக தாக்காத தீப்புண்களுக்கு முதலுதவி

முதலில் தீக்காயத்தை உண்டாக்கிய காரணியை நிறுத்துங்கள். மேலும் காயத்தை உண்டாக்காமல் தடுக்கவும்.

பாதிக்கப்பட்ட பாகத்தை 10 நிமிடமாவது குளிர்ந்த நீரில் வைக்கவும். குழாய் இருந்தால், குழாயை திறந்து 10 நிமிடம் அல்லது வலி நிற்கும் வரை காயத்தின் மீது தண்ணீர் விழும் படி காட்டவும்.

கொப்புளம் ஏற்பட்டிருந்தால் அதை கிளறி எடுக்க கூடாது. டாக்டரிடம் போகும் வரை கொப்பளத்தை அப்படியே விடவும்.

தேனையும் மஞ்சள் பொடியையும் குழைத்து போடலாம்.

வீட்டில் கற்றாழை இருந்தால், அதன் கதுப்பை (கெட்டியான சாறு) எரிந்த இடத்தில் லேசாக தடவவும்.

தீக்காயத்தில் மருத்துவ கடையில் கிடைக்கும் ஆயின்மென்டை போட்டு, ஒட்டாத பான்டேஜால் மூடலாம். இதனால் காயத்தில் தொற்று (Infection) உண்டாவதை தடுக்கலாம்.

வாழைத்தண்டு ஜுஸையும் உபயோகிக்கலாம்.

உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டிய நிலைமைகள்:-

தீப்புண் ஏற்பட்ட இடத்தில் பரப்பு, உள்ளங்கையை விட பெரிதாக இருந்தால்

தீப்பட்ட இடம் கறுத்து, தோலுரிந்து, கொப்புளங்கள் ஏற்பட்டால்

தீப்புண்கள் – முகம், தோல் மடிப்புகள், கை, கால், பிறப்புறுப்புக்கள், போன்ற இடங்களில் ஏற்பட்டிருந்தால்.

தொடர்ந்து வலி இருந்தால்.


Spread the love