மாம்பழம் உடலின் அழகை மெருகேற்றி, உடலை சற்று பருமனாக்கி, உறுதியைத் தருகிறது. இரத்த விருத்தி, வீரிய விருத்தி, உடறுறவில் சக்தியையும் தருகிறது. வாயுத் தொந்தரவுகளை, பித்தத்தைப் போக்கி புத்துணர்ச்சியும் குடலுக்கு வலிமையும் தருகிறது. நன்கு பழுத்தப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டி 4 அவுன்சு எடுத்து சிறிது சுக்கை;ப பொடித்துப் போட்டு பருக, மயக்கம், களைப்பு நீங்கி விடும். பல ஆண்டுகளாக தலைவலியினால் அவதிப்படுபவர்கள், அதனால் பார்வைக் குறைவு ஏற்பட்டு கண் பலவீனம் அடைந்தவர்கள் மாம்பழச் சாறு மூலம் குணம் பெறலாம். மாம்பழச் சாறு 12 அவுன்சு, எலுமிச்சம் பழச் சாறு 2 அவுன்சு, இஞ்சிச் சாறு 1அவுன்சு சுத்தத் தேன் ஒரு அவுன்சு எடுத்து சுத்தமான பாத்திரத்தில் கலந்து பத்திரப்படுத்தி 4 மணி நேரத்திற்கு லு அவுன்சு வீதம் நன்றாக உறிஞ்சி சுவைத்துப் பருகி வந்தால் மூன்றே நாளில் முழுக் குணம் பெறலாம்.மாம்பழத்தை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக்கி, வெயிலில் ஈரம் சுண்ட உலர்த்தி, வாய் அகன்ற சீசாவில் போடவும். துண்டுகள் மூழ்கும் படி சுத்தத் தேன் ஊற்றி சாப்பிடலாம்.
