நாம் அதிகமான மரங்களை வெட்டுவதால் நம்மால் தாங்க முடியாத வெப்பம் நிலவுகிறது, இதன் காரணமாக நிறைய நோய் நம்மை தாக்குகிறது, அதில் முக்கியமான நோய் படர்தாமரை ஆகும். மக்கள்தொகை பெருக்கம், சுகாதார குறைவு, உடலில் அதிக வியர்வை ஏற்படுதல் இது போன்ற நோய்கள் எளிதில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது.
படர்தாமரை ஒருவருக்கு வந்து விட்டாலே எந்த இடத்தில் இருகிறோம் என்பதை மறந்து சொறிய தொடங்கிவிடுவோம். படர்தாமரை பூஞ்சைகளால் ஏற்படக் கூடிய நோய் ஆகும். இது பெண்களைவிட ஆண்களை தான் அதிகம் தாக்கும்.
படர்தாமரையின் அறிகுறிகள்
பூஞ்சையினால் ஏற்படும் தோல்நோய் தான் படர்தாமரை ஆகும். முதலில் உடலில் ஆங்காங்கே சிவந்த படைகள் உடலில் ஏற்படுவது தான் படர்தாமரைக்கான அறிகுறி ஆகும்.
படர்தாமரை உடலில் கதகதப்பான மற்றும் ஈரப்பதமான இடங்களில் வருகிறது. தலை, அக்குள், தொடை இடுக்குகள் மற்றும் பாதங்களில் முக்கியமாக வருகிறது.
படர்தாமரையை குணமாக்கும் கடுகு
· பூண்டினை நன்கு அரைத்து அந்த சாற்றை படர்தாமரை உள்ள இடத்தில் போட்டு வந்தால் படர்தாமரை படிப்படியாக குறையும்.
· மஞ்சளினை அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வர வேண்டும்.
· தேங்காய் எண்ணையை தொடர்ந்து படர்தாமரை உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக மறைய தொடங்கும்.
· பச்சை பப்பாளியை அரைத்து பசையாக்கி படர்தாமரை ஏற்பட்டுள்ள இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குறையும்.
· சிறிதளவு உப்பை எடுத்து அதனுடன் தேவையான அளவு வினிகரை எடுத்து கலந்து பூசி வரவும்.
· கடுகு அல்லது கடுகு எண்ணையை எடுத்து, அதை படர்தாமரை உள்ள இடத்தில் தொடர்ந்து பூசி வந்தால் படர்தாமரை குறையும்.
· கற்பூரத்தை பொடி செய்து அதை படர்தாமரை உள்ள இடத்தில் போட்டு வந்தால் படர்தாமரை விரைவில் குணம் அடையும்.
வருமுன் காப்போம்
· அதிகமாக வியர்வை வருகிறது என்றால், தினமும் காலை மாலை இரு வேளையும் குளிக்கலாம்.
· நன்கு காய்ந்த சுத்தமான ஆடையை அணியலாம்.
· கோடை காலத்தில் ஜீன்ஸ், லெகின்ஸ் மற்றும் இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்கலாம்.
· மற்றவருடைய ஆடையை துவைக்காமல் அணிவதை தவிர்க்கலாம்.
· துணிகளை துவைத்த உடனே வெயிலில் நன்கு காயவைக்க வேண்டும்.
· இரவு நேரத்தில் உறங்கும் போது தளர்வான ஆடையை அணிவது நல்லது.
· மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டே கிருமி நாசினிகளை பயன்படுத்தலாம்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
படர்தாமரை என்பது தொற்றின் மூலம் வரும் நோய் ஆகும். அதற்கு ஏற்ற உணவுகளை கீழே காண்போம்.
தினமும் உணவில் வெள்ளை பூண்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தொற்று நோய்கள் நம்மிடம் வராது.
சிறிய வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்வதினால், தொற்று நோய்கள் வருவதை தடுப்பதுடன் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுவதுடன், தொற்று நோய்கள் வருவதை தடுக்கிறது.
தினமும் ஒரு முறையாவது எலுமிச்சை சாறு குடிப்பது மிகவும் நல்லது.
பருப்பு வகைகளில் வைட்டமின் ணி உள்ளதால் இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அதன் மூலம் நோய் தொற்றை தடுக்கிறது.
கீரைகள் மற்றும் முட்டையை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இதன் மூலம் நோய் தொற்றை குறைக்கலாம்.