கீழ்க்கண்ட வீட்டு வைத்திய குறிப்புகள்

Spread the love

தினமும் ‘மோர்’ அருந்தவும் ஜீரணத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் நல்லது.

தினமும் ஒரு நெல்லிக்காய், தனியாகவோ அல்லது தேனுடனோ சாப்பிடவும்.

காய்ந்த நெல்லிக்காயின் பொடி, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கற்கண்டு இவற்றை கலந்து, ஒரு கோலி அளவு தினமும் உட்கொள்ளலாம்.

இரவில் பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊற வைத்து, அதை காலையில் தண்ணீருடன் உட்கொள்ளவும். பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கு பேரீச்சம் பழம் நல்லது.

உணவில் உப்பை குறைக்கவும்.

தினசரி ஒரு அவுன்ஸ் திராட்சை ரசம் அருந்தவும். இல்லாவிட்டால் விளாம்பழச் சதையை உபயோகிக்கலாம்.

உலர்ந்த அத்திப்பழமும் சத்து நிறைந்த உணவு.

முதுமையும், மறதியும்

நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் மூளையின் ஞாபகசக்தியால் செய்கிறோம். கிட்டத்தட்ட அனைவரும் செய்யும் சகஜமான ஞாபக மறதி செயல்கள் வண்டி சாவியை எங்கே வைத்தோம் என்பதை மறப்பது, குடையை ஆபிஸில், பஸ்ஸில் டிரெயினில் மறந்து விட்டு விட்டு வருவது, மூக்குக் கண்ணாடியை எங்கே வைத்தோம் என்பதை மறந்து தேடுவது, மனைவி வாங்கி வரச் சொன்ன சாமான்களை மறந்து வாங்காமல் வந்து, வாங்கிக் கட்டிக் கொள்வது (மனைவியிடம்) முதலியன! இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஞாபக மறதியான செயல்களை செய்பவர்களில் பலர் தங்கள் அலுவலக வேலையில் ‘புலி’யாக இருப்பவர்களாயிருப்பார்கள். பெரிய அக்கவுன்டன்டாக இருந்து கொண்டு சிக்கலான கணக்கு வழக்குகளை ஞாபகம் வைத்துக் கொள்பவர் குடையை மறந்து விடுவார்! பள்ளிக்கூடத்தில் பிரமாதமாக புத்தகத்தை பார்க்காமலேயே சொல்லித்தரும் டீச்சர், மனைவி சொன்ன சாமான்களை வாங்கி வர மறந்து விடுவார்!

உண்மை என்னவென்றால் நாம் தினமும் பல புது விஷயங்களை கிரகித்து அதை பயன்படுத்தி நன்றாகவே சமாளிப்போம். காரணம் நமது மூளையின் திறன் அளவற்றது. நாம் அதை முழுவதும் உபயோகிப்பதில்லை. முக்கியமான அலுவலகம் சம்மந்தமான விஷயங்களுக்கு அதை உபயோகித்து விட்டு சிறிய விஷயங்களுக்கு அதை பயன்படுத்த தவறுகிறோம். மூளையை ‘முடுக்கி விட்டால்’ ஞாபக சக்தி பெருகும். எனவே நினைத்துக் கொண்டிருப்பதை விட நமது ஞாபக சக்தி அதிகம். சரி, இது வயதானவர்களுக்கு பொருந்துமா?

மூளையும் முதுமையும்

முதுமையின் விளைவுகளில் ஒன்று ஞாபக மறதி. வயதாகும் போது உடலில் மற்ற அவயங்கள் தேய்வது போல். மூளையும் தேய்ந்து ‘அறிவுத்திறன் வீழ்ச்சி’ (Dementia) ஆரம்பமாகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு கருத்து. ஆனால் நிபுணர்கள் சொல்வது என்னவென்றால் மூளையின் முதுமை அடைந்த பல் பிரதேசங்கள் மறுபடியும் புத்துயிர் பெறுவதில்லை என்பது உண்மை தான். இருந்தாலும் மூளையின் செயல்பாடுகள் அதில் உள்ள செல்களின் எண்ணிக்கையை விட, செல்களில் இடையே உள்ள லட்சக்கணக்கான இணைப்புகளை சார்ந்தவை. நிபுணர்கள் முன்பிருந்த கருத்தான முதியவர்களை விட இளைஞர்களின் அறிவுத்திறன் அதிகம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கின்றனர். முதியவர்களை அறிவுத்திறன் வீழ்ச்சி நோய்களான அல்சீமர் போன்றவை தாக்குவது உண்மை தான். எல்லா முதியவர்களுக்கும் இது ஏற்படுவதில்லை. புகழ் பெற்ற அறிஞர்கள் பலர் வயதாக, வயதாக இன்னும் சிறப்பாக செயலாற்றுவதும் உண்மை.

எனவே, மூளையின் செல்களின் இணைப்புகளை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால், முதுமையிலும் மூளை இளமையாக இருக்கும்.

ஞாபக சக்தி இரு விதமாக செயல்படுகிறது. ஒன்று – ஒரு விஷயத்தை கிரகித்து வைத்துக் கொள்வது. இரண்டு – அதை தேவைப்பட்ட போது திரும்ப வெளிக் கொணர்வது.


Spread the love