வெள்ளைப்படுதல் தொல்லை நீங்க…

Spread the love

பெண்களின் இனப் பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்றேயாகும். பெண்கள் இயற்கையான இயல்பான சுரப்பிற்கும் வெள்ளை படுதலுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்வது அவசியம். எவ்வாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் உடலில் வியர்வை உண்டாகின்றதோ அதே போல பெண்களின் பெண் உறுப்பில் சுரப்பு ஏற்படும். ஆனால் வெள்ளைபடுதல் என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிக்கும். வெள்ளைபடுதலுடன் பலஹீனம், இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி, மற்றும் உடல் சோர்வு சேர்ந்தே தோன்றும். இவை இருந்தால் மட்டுமே அது வெள்ளைபடுதலாகும்.

பல சமயம் அரிப்புடன் சேர்ந்து இருக்கும். துர்நாற்றம் வீசும் இதனால் திருமணமானவராக இருந்தால் கணவருக்கும் ஆணுறுப்பில் அரிப்பு ஏற்படும். இதற்கு அடிப்படை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் Trichomonas Vaginalis என்ற பூசணம் பெண் உறுப்பில் வளர்வதேயாகும். அரிப்பு இல்லாத வெள்ளைபடுதல், கர்ப்பமாக இருக்கும் பொழுதும் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் பொழுதும் நீரிழிவு நோய் உள்ள போதும் கூட ஏற்படும்.

வீட்டு மருத்துவம்

சிறிது கடுக்காய் நெல்லிக்காய்  தான்ரிக் காயை சம அளவு எடுத்துப்  பொடி செய்து ( திரிபலா சூரணம்) அதனை 2 லிட்டர்  தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான  சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால்  வெள்ளைபடுதல் மறையும்.

மிகவும் குளிர்ந்த நீரில் 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும். சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு  காலை வெறும் வயிற்றில் தினசரி பருகி வர வெள்ளைபடுதல்  மறையும்.

லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும்.

ஆயுர்வேத மருத்துவம்

வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்தால் சிறந்த பலனைத் தரும். ஆயுர்வேத முறையில் மட்டுமே வெள்ளைபடுதலை நிரந்தரமாக போக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெடிக்கல் டிப்ஸ்

பசலைக் கீரையை உணவில் வாரம் மூன்று நாள் சேர்த்தால் ஜலதோஷம் தடுக்கப்படுவதுடன், கீரையில் உள்ள ‘லூட்டின்’ என்ற பொருளால் பார்வைத் திறனும் அதிகரிக்கும்.


Spread the love