மூட்டு வலி நீங்க ஆயுர்வேத மூலிகைகள் jj

Spread the love

குளிர்காலம் என்பது மூட்டுவலியால் அவதிப்படும் வயதானவர்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாகும். ஏனெனில் இப்பருவத்தில் தான் மூட்டு வலி அதிகமாக இருக்கும். பெரும்பாலும், சிறு வயதில் ஓடி, ஆடி, சுமைகளைத் தூக்கி வேலை செய்தவர்களுக்கு வயதான காலத்தில் மூட்டில் இருக்கும் எலும்பு மஜ்ஜைகள் அதிகமாகத் தேய்ந்து மூட்டு வலி வருகிறது. இந்த மூட்டு வலிக்கு மருந்துகள் ஏதும் கிடையாது, ஆனால் நாம் உண்ணும் உணவுகள் மூலமாக மூட்டு வலிகளை சரிசெய்யலாம்.

நம் வீட்டிலேயே சில ஆயுர்வேத மூலிகைகளைப் பயன்படுத்தி மூட்டு வலியைக் கட்டுப்படுத்தலாம். இத்தகைய மூலிகைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

  1. ஓமம் : இதை சுடு தண்ணீரில் சேர்த்து அதனை சிறிது நேரம் வலியுள்ள பகுதியில் வைக்கவும். இவ்வாறு செய்வதால் மூட்டு வலி நீங்கும். ஓமநீரை தினமும் பருகுவது மூலமாவும் மூட்டு வலியை கட்டுப்படுத்தலாம்.
  2. தசமூலம் : இது ஒரு முக்கியமான ஆயுர்வேத மூலிகை. இதற்கு பத்து மூலிகைகள் கலந்த கலவை என்று பொருள். இது பொடியாகவும் எண்ணெயாகவும் கிடைக்கிறது. இதனை பயன்படுத்தினால் மூட்டு வலிகள் உடனடியாக குறையும் என கூறுகின்றனர்.
  3. நொச்சி : நொச்சிச் செடியின் இலைகள் மூட்டு வலியைக் கட்டுப்படுத்த மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மூட்டு வீக்கத்தைக் குறைத்து வலியையும் கட்டுப்படுத்துகிறது. இந்த நொச்சி இலைகளை. விழுதாக்கி உபயோகப்படுத்தலாம். இல்லையெனில் இதன் எண்ணெயை உபயோகப்படுத்தலாம்.
  4. யூக்கலிப்டஸ் எண்ணெய் : இது நம் அனைவருக்கும் தெரிந்ததே! மூட்டுவலிகளை நீக்கவும், வீக்கம் குறையவும் இது உதவுகிறது. மேலும் இது நம் மூளைக்கு ஒரு தனி சுகத்தையும் தருகிறது.

  1. இஞ்சி : இது இரத்த ஓட்டத்தை அதிகமாக்கி மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இஞ்சியைத் தேனீராகவும் அருந்தலாம் அல்லது விழுதாக்கி மூட்டுகளிலும் தடவலாம். இவை நல்ல பலனைக் கொடுக்கும்.

Spread the love