இன்றைய இளைஞர்கள் அனேகம் செக்ஸ் ஆற்றல் இல்லாமல் அல்லது அதுகுன்றி மணவாழ்க்கையில் அல்லல் படுகின்றனர். மலிவான பத்திரிக்கைகளில் ) வரும் விளம்பரங்களைக் கண்டு மருந்துகளை வாங்கி உட்கொண்டு பணத்தையும், உடல் ஆரோக்யத்தையும் இழந்து தவிக்கின்றனர். தக்க மருத்துவர் ஆலோசனையின் பேரில்தான் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டும். வயாகரா மாத்திரையால் உயிர் இழந்தவர்கள் ஏராளம்.
பலர் ஆண்மைக் குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். சிலருக்கு மலட்டுத் தன்மையால் குழந்தைப் பேறில்லை. உடலுறுப்புகள் உடலுறவின்போது சரிவர செயல்படாமல் குடும்ப வாழ்க்கையை குலைத்து விடுகின்றன. இதற்கு நல்ல தீர்வு ஆயுர்வேதம் சம்பந்தமான மூலிகைகள்தாம். இவற்றால் எந்த பாதிப்போ, பக்க விளைவுகளோ இருக்காது.
ஆங்கில வைத்தியத்தில் செக்ஸ் உணர்வை, ஆற்றலை மேம்படுத்தப் பயன்படும் மருந்துகளை APHRODISIACS என்று குறிப்பிடுகின்றனர். இவ்வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து எடுக்கப்பட்டது. இது கிரேக்க காதல் தேவதையின் பெயராகும். இந்த வகை மருந்துகள் பண்டைய காலத்திலிருந்தோ உபயோகத்திலிருந்துள்ளன. ஆனால், நம் நாட்டில் பிரபலமாகிவரும் ஆயுர்வேதம் சார்ந்த மூலிகைகளைப் பற்றிப் பார்ப்போம். இவைகள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்தும்.
முலாதி (LIQUORICE ) ( MULADI)
முலாதியென்று சொல்லப்படும் மூலிகை அதிகமாக ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் முதுமை தாமதமாகும். உடலில் வலு ஏறும். இதன் இலையை வெந்நீரில் கொதிக்க வைத்து டீ போல அருந்தலாம். மலச்சிக்கலைத் தீர்க்கும். (இருமல்) இருமலை நீக்கும். தொய்வடைந்த செக்ஸ் ஆர்வத்தை அதிகப்படுத்தும்.
அஸ்வகாந்தா (ASHWA GANDHA)
அஸ்வகாந்தாயென்பதின் பொருள் ‘குதிரை மாதிரி’ இதன் வேரை பொடித்து மிதமான சூட்டில் பாலில் கலந்து சாப்பிட்டால்சக்தியைப் பெருக்கி, உடலுறவில் நன்கு செயல்படஉதவும். விந்துவிலுள்ள ஜீவ அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். நரம்பு மண்டலம் வலுவடையும். லவங்கம் (CLOVES) இது ஒரு கிருமி நாசினி. இருமல், சளியை போக்க வல்லது. செக்ஸ் உணர்வைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டது.
பென்னல் (FENNEL – SAUNF)
பென்னல் ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் அதிகம் உபயோகப்படுகிறது.இது மணமுள்ள மஞ்சள் நிற பூச்செடியாகும். இதன் பழம் உணவு நன்கு செரிமானமாக உதவும். இதயத்தைபலப்படுத்துகிறது. செக்ஸ் ஆற்றலை மேம்படுத்தும். பால், தேன், சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ளவும். மைதாலக்டி (LAUREL (MAIDA LAKDI) மைதாலக்டியின் இலைகள், பட்டை செக்ஸ் ஆற்றலை அதிகரிக்க உதவும்.
வானாரி (KAUNCH BEEJ)
வானாரியின் மற்ற பெயர்கள் ஆத்மகுப்தா, கபிகாச்சிசு. இதன் விதைப் பைகள் பீன்ஸ் போல இருக்கும். ஒவ்வொரு பையிலும், 5 அல்லது 6 விதைகள் இருக்கும். விதைகளின் மேலுள்ள கருப்புத் தோலை நீக்கிவிட்டு, விதைகளை பொடி பண்ணி சாப்பிடவும். இதன் செக்ஸ் ஆற்றல் ஆச்சரியப்ட்டத்தக்கதாகும். பிறப்புறுப்புக்கள் பலம் பெறும். ஆண் விந்திலுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை பெருகும். பெண்களின் பால் -சுரக்கும், ஆற்றல் மேம்படும். பெண்களின் மார்பகங்கள் பருமனடையும். அவர்களின் உறுப்பிலுள்ள தசைப் பகுதிகளை இறுகச் செய்யும். இதைப் பொடி செய்து பால், சர்க்கரை கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
கோக்ஷீரு (Gokshuru)
நம் நாட்டில் அதிகம் விளைகின்ற கோக்ஷீரு இருவகைப்படுகின்றது. பெரியது ஒருவகை. சிறியது இரண்டாவது வகை. இதன் இலைகள் சிறுநீரகத்தை, சிறுநீர் குழாயை வலுப்படுத்துகிறது. ஆணின் விரைப்புத் தன்மையைஅதிகரிக்கிறது. பிறப்புறுப்புக்களை புத்துணர்வு பெறச் செய்யும். ஆண்களின் ப்ராஸ்டேட்சுரப்பி நன்கு வேலை செய்யும். பெண்களின் மலட்டுத் தன்மை போகும். அவர்களின் உதிரப் போக்கைகட்டுப்படுத்தும். கருச்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கும்.
இதைச் சாப்பிடும் விதம் என்னவென்று பார்ப்போம். இதைப் பொடித்து, நெல்லிக்காய், GUDICHI போன்றவற்றை சம அளவில் பொடித்து, நன்கு கலந்து சூரணமாகசாப்பிட வேண்டும். ஒரு டீ ஸ்பூன் பொடியுடன் நெய், சர்க்கரை கலந்து சாப்பிடவும்.நல்ல பலன் கிடைக்கும்-.இதன் இலைகளில் நன்கு உலர்த்தி பொடி செய்து ஐந்து கிராம் பொடியை எடுத்து இளஞ்சூடான பாலில் கலந்து தினசரி இரண்டு வேளை சாப்பிட்டால், ஆணின் விரைப்புத் தன்மை குன்றியிருந்தால் அது மேம்படும்.
குடிச்சி (GUDICHI)
இது பசுமையாக இருக்கும். வேப்பமரம்,மாமரத்தில் படர்ந்து வளரும். இதன் பொடி ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். உடல் உறுப்புகள் நன்கு செயல்படும். குடிசியின் தண்டிலிருந்து சாறையெடுத்து கொதிக்க வைக்கவும். பின்புஅரை கப் வீதம் தினசரி இரண்டு வேளை நாற்பது நாட்கள் குடித்தால் பலன் கிடைக்கும். ஒருடீஸ்பூன் தேனுடன் சாப்பிடலாம்.