வயிற்று வலிக்கு…
புதிய புதினா இலைகளை கசக்கி ஒரு தேக்கரண்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றை ஒரு கப் தண்ணீரில் கலந்து குடிக்கவும் உடனே வயிற்று வலி நீங்கும்.
ஜலதோஷம்…
நான்கு அல்லது ஆறு கருமிளகை பொடி செய்து கொள்ளலாம். இத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து ஒரு கப் பாலில் விட்டு காய்ச்சவும். காய்ச்சிய பின் வடிகட்டவும். இரவில் படுக்கப் போகுமுன் இதைக்குடித்தால் ஜலதோஷத்தின் உபாதைக் குறைவு, இருமலும் நிற்கும்.
வயிற்றெரிச்சலை குளிர்விக்க…
பொதுவான வயிற்று கோளாறுகளான ஏப்பம், வாயுக்கோளாறுகள், வயிறு உப்புசம் இவற்றையெல்லாம் நாம் அஜீரணம் என்று சொல்கிறோம். இதற்கு ஒரு கிராம்பை எடுத்து வாயில் மெதுவாக மென்று அதன் நீரை உறிஞ்சவும். இதனால் அமிலத்தன்மை குறையும். ஒரு கப் வென்னிலா ஐஸ்கீரிம் அல்லது ஒரு டம்ளர் குளிர்ந்த பால் குடித்தாலே விரைவாக வயிற்றெரிச்சல் நீங்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்க…
ஞாபக மறதி வயது ஆக ஆக குறைந்து விடுகிறது. முதியோர்களுக்கு பழைய ஞாபகங்கள் நன்றாக இருந்தாலும், சற்று முன் நடந்த விஷயங்கள் அவர்களின் ஞாபகத்திற்கு வராது. ஞாபக மறதி கோளாறை அம்னீசியா.
பாதாம் பருப்பு மூளையின் பலவீனத்தால் ஏற்படும் ஞாபக மறதியை போக்க வல்லது. 10 லிருந்து 12 பாதாம் பருப்புகளை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் இவற்றின் தோலை நீக்கி விழுது போல் அரைக்கவும். இந்த விழுதை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம். பாதாம் எண்ணெய்யை தினசரி காலை மாலை மூக்கினால் நன்றாக நுகர்ந்து வந்தால் மூளை பலவீனம் குறையும்.