பெண் நோய்களுக்கு வீட்டு வைத்தியம்

Spread the love

  1. இஞ்சித் துண்டை பொடித்து, தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து தினமும் உணவுக்கு பின் 3 வேளை குடித்து வரவும்.
  • வாழைப் பூ– தொன்று தொட்டு, வாழைப் பூ அதிக உதிரப்போக்கு கட்டுப்படுத்த பயன்படுத்தி வரப்பட்டிருக்கிறது. வாழைப்பூவை சமைத்து, தயிருடன் சாப்பிட Progesterone அதிகரித்து ரத்தப்போக்கை குறைக்கும்.
  • எள் விதைகளை அரை டீஸ்பூன் அளவு எடுத்து, வெந்நீருடன் தினம் 2 வேளை குடித்தால் அடிவயிறு வலி குறையும். சுடு தண்ணீரில் எள்ளை சேர்த்து, அதில் இடுப்பு வரை உட்கார்ந்து இந்த எள் தண்ணீரை குடித்தால் நல்லது.
  • கொத்தமல்லி விதைகளும் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஏற்றவை. 6 கிராம் கொத்தமல்லி விதைகளை அரைலிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பாதி தண்ணீர் ஆவியானதும், கற்கண்டு கலந்து, சூடாக குடிக்கவும். இதனால் அதிக உதிரப்போக்கு கட்டுப்படும்.
  • இளசான மாதுளம் இலைகள் 7 இலைகள் எடுத்து, ஏழு அரிசியுடன் தானியத்துடன் சேர்த்து அரைத்து, தினமும் 2 வேளை ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு/ ஏறுமாறான மாதவிடாய் இவற்றுக்கு நல்லது.

பூப்படைதல் – வீட்டு வைத்தியம்

மெல்லிய, இளைத்த பலவீனமான பெண்களுக்கு, வெல்லம் கலந்து செய்யப்பட்ட எள் உருண்டைகள் தினமும் மதிய உணவுடன் கொடுக்கவும். இது பூப்படைவதை உண்டாக்கும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். எள் ‘டிகாக்ஷன்’ குடிப்பதும் பூப்படைய உதவும். இந்த எள்ளுருண்டைகள் இளம் பெண்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கவே கூடாது.

ஒரு மேஜைக்கரண்டி பாலில் குங்குமப்பூ கரைத்து குடித்து வருவது பலவீனமான, வளர்ச்சியில்லா பெண்களுக்கு உதவும்.

கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, வெந்தய இலைகள் இவற்றால் செய்த ‘சட்னி’ சாப்பிட, இளம்பெண்கள் முழு வளர்ச்சியடைய உதவும். புதினா கர்பப்பைக்கு ஒரு டானிக். கீரைகள் சோகைக்கும் நல்லது.

வலியுடன் கூடிய மாதப்போக்கு…

வெண்டைக்காய் 100 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் 20 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டி வைக்கவும். இதில் சர்க்கரை சேர்த்து 60-90 மி.லி. அடிக்கடி குடித்து வருவது நல்லது.

Douches எனப்படும் யோனியை சுத்தப்படுத்தும் முறையில், வெந்தயம், கொய்யா இலைகள் இவற்றை கலந்து உபயோகித்தால் வெள்ளை போதலை குறைக்கும். சுடு தண்ணீரால் சுத்திகரித்தாலே நல்லது.

இந்த முறையை மருத்துவரின் அறிவுரைப்படி செய்யவேண்டும்.

சில ஆயுர்வேத மூலிகைகள்:-

அசோகம், லோத்ரா (Symplocos Racemosa),  நிலத்தட்டி (Sida Cordifolia), நெரிஞ்சி, சீமை சடவாரி  (Asparagus racemosus), கொட்பிணி (Vitis Vinifera),  முகராட்டை கீரை (Boerhavia Repens),  விபூர்ணம் (Viburnam) நெல்லி, ஆடுதின்னாபாலை, கற்றாழை, கருஞ்சீரகம், பிரண்டை, எள், கருவேலம், ஹரீத்ரா (Berberis Aristata), ஆமணக்கு, நன்னாரி.


Spread the love