வீட்டு வைத்தியம்

Spread the love

தாக விடாய் (அதீத தாகம்)

அதீத தாகம், சாதாரணமாக ஏற்படும் தாகம் அல்ல. தொண்டை வறண்டு போய், தாகமெடுத்து, தண்ணீர் குடிப்பது சாதாரண விஷயம். இதற்காக வழக்கத்தை விட பல மடங்கு தண்ணீர் குடிப்பது வியாதியை குறிப்பிடும். உப்பு, எண்ணை நிறைந்த கார சாரமான உணவுகளுக்கு பின் தண்ணீர் தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த மாதிரி காரணங்களன்றி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது சரியல்ல. நீரிழிவு வியாதியுள்ளவர்களுக்கு ஏற்படும் தண்ணீர் வேட்கை அந்த நோயில்லாதவர்களுக்கு ஏற்பட்டால் அது கவனிக்கப்பட வேண்டும்.

இதற்கு சில வீட்டு வைத்தியம்

·     மஞ்சள் பொடியை கஷாயம் செய்து சர்க்கரை, தேனுடன் பருகலாம்.

·     இளநீர் குடிக்கலாம்.

·     பழுத்த புளியை சர்க்கரை நீரில் பாகு போல் செய்து குடிக்கலாம்.

·     நெல்லிக்காய் பொடியை (2-4 கிராம்) தேனுடன் (5-10 கிராம்) கலந்து தினம் ஒரு வேளை எடுத்துக் கொள்ளலாம்.

·     காய்ச்சாத, புதுப்பாலை குடிக்கலாம்.

ஒவ்வாமை (Allergy)

ஒவ்வாமை உண்டாக பல காரணிகள் உள்ளன. மகரந்ததூள், தூசி, வாசனை திரவியங்கள், ஊதுபத்தி புகை, மருந்துகள், ஆரஞ்சு, முட்டை, சில மீன் வகைகள், தக்காளி, சாக்லேட் என்று பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம். கண்ணிலிருந்து நீர் வடிதல், தலைவலி, தொடர் தும்மல், சர்மத்தில் எரிச்சல், சிறுகட்டிகள், பேதி, மூச்சு விட கஷ்டமாதல் போன்ற பல அறிகுறிகள் அலர்ஜியால் ஏற்படும்.

·     இஞ்சி அலர்ஜியை குறைக்க வல்லது. அரை அல்லது ஒரு கிராம் இஞ்சியை எடுத்து ஒரு கப் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த கஷாயத்தை குடிக்கலாம்.

·     அரை கப் நீர் (அ) பழச்சாறு (அ) காய்கறி ஜுஸ் இவற்றில் ஏதாவது ஒன்றில் 5 துளி விளக்கெண்ணையை சேர்த்து கலக்கி குடிக்கலாம். இதை கண்டுபிடித்தவர் டாக்டர் ஹேமந்த பதக் என்னும் இந்திய மருத்துவர். இந்த கலவையை வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும்.

·     எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் காலையில் குடித்து வரலாம்.


Spread the love