கிச்சன் கிளினிக்

Spread the love

பச்சைப்பயறு சிற்றுண்டி

தேவையான பொருட்கள்.

பச்சைப்பயறு  -1 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம்  –  50 கிராம்

பச்சைமிளகாய் (நறுக்கியது)  –  1

அதிகம் பழுக்காத தக்காளிப் பழம்  – 1

நறுக்கிய கொத்தமல்லி இலை  – 2 மேசைக்கரண்டி

மிளகாய்ப் பொடி  –  1-/4 தேக்கரண்டி

கரம் மசாலா  – 1/4 தேக்கரண்டி

நறுக்கிய அன்னாச்சிப்பழத் துண்டுகள் – 1/2 கப்

எலுமிச்சஞ்சாறு  –  சில துளிகள்

உப்பு  –  தேவையான அளவு.

செய்முறை

பச்சைப்பயறை ஏறக்குறைய 3 மணி நேரம் ஊறவைத்து, அலசி தண்ணீரை மாற்றி மேலும் 6 மணி நேரம் ஊறவிட வேண்டும்.  இப்போது பயறு முளைவிட ஆரம்பிக்கும்.

தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு ஈரத் துணியினால் சில மணி நேரம் மூடி வைத்தால் நன்கு முளை கட்டிவிடும்.  இதை ஒரு தட்டில் பரப்பிக் கொள்ளுங்கள்.

பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,  வெங்காயம், தக்காளிப் பழம் ஆகியவற்றை பயறின்மேல் தூவ வேண்டும்.  பின்னர், உப்பு, எலுமிச்சஞ்சாறு கரம் மசாலா, மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி மல்லி இலையைத் தூவி, கடைசியாக அன்னாசித் துண்டுகளைப் பரப்பி பரிமாறலாம்.

இது புரதச் சத்து அதிகம் நிறைந்த ஒரு சிற்றுண்டி.

கரம் மசாலாவைக் குறைக்கலாம் அல்லது அறவே தவிர்க்கலாம்.


Spread the love