துளசி

Spread the love

இறைவனுக்கு பெருமாளுக்கு மாலையாக அணிவிக்கப்படும் புனிதமான துளசி மூலிகையானது மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான காய்ச்சல் (ஜூரம்) வகைகளுக்கும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் துளசியின் மருத்துவப்பயன்கள் கணக்கிலடங்காதவை.

 துளசி இலையுடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்த பின்பு அதனை வடிகட்டியபின்பு கிடைக்கும் சாற்றினை நாள் ஒன்றுக்கு மூன்றுவேளை அருந்திவர ஜூரம் குறைந்து விடும். 250 மிலி நீரில், 10 கிராம் துளசி இலையுடன் 10 கிராம் விஷ்ணுகிராந்தி சேர்த்து கொதிக்க வைக்கவும். மேற்கூறிய கலவை 50 மிலி அளவு வரும் வரை கொதிக்க வைத்த பின்பு வடிகட்டிய பின்பு கிடைக்கும் சாற்றினை நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை காலை, மாலை என்று இரண்டு, மூன்று நாட்கள் அருந்தி வர காய்ச்சல் கட்டுக்குள் வரும்.

துளசி இலையுடன் கிராம்பு, இஞ்சி, உப்பு அல்லது தேனுடன் சேர்த்துச் சாப்பிட இருமல் மற்றும் நுரையீரல் கோளாறுகளை குணப்படுத்தும். துளசி இலையை மென்று, வடிகட்டிய வெதுவெதுப்பான துளசிச்சாற்றினை வாய்க்குள் நிரப்பி கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும். நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்றுமுறை இவ்வாறு செய்ய வேண்டும்.

வடிகட்டிய 10 மிலி துளசி இலைச்சாறுடன், இஞ்சிச்சாறு சேர்த்து தேன்கலந்து குடித்துவர வாந்தி மற்றும் வாந்தி உணர்வு நிற்கும்.

துளசிச் செடி விதையினை அரைத்து, இஞ்சிச்சாறு 10 துளிகள் சேர்த்து நாள் ஒன்றுக்கு இருவேளை வீதம் இரண்டு நாட்கள் சாப்பிட அமிலம் கலந்துள்ள உணவினால் ஏற்படும் வயிற்று வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

குழந்தைகளின் வாயுத் தொல்லைக்கு துளசி இலையை வாயில் வைத்து மென்று சாறை விழுங்கச் சொல்லலாம்.

ஓரிரு வயது கைக்குழந்தைகளின் சளி, ஜலதோஷம், வயிற்றுக்கடுப்பு வயிற்றுப்போக்கு குணப்படுத்த துளசிச் சாறு பயன்படுத்துவது எளிய வீட்டு மருத்துவமாகும்.

அது போல குழந்தைகளிடம் காணப்படும் மூச்சுக்குழாய், நுரையீரல், சுவாசக் கோளாறுகளுக்கும் துளசி மிகவும் பயன்படுகிறது.

துளசி இலையுடன் மோர் கலந்து குடிக்க குறிப்பிட்ட அளவு எடை குறைக்கலாம்.

வெளி உபயோகம்

துளசி இலையுடன், கருமிளகு, வேப்பிலை, பூண்டு, அனைத்தும் கலந்து அரைத்த கலவையை தோல் நோயால் பாதிக்கப்பட்ட பகுதியில் பூச தோல் வியாதி குணமாகும்.

சொறி, வட்டப் புழுக்கள் காணப்படும் பகுதிகளில் துளசி இலை மற்றும் உப்புச் சேர்த்து அரைத்த கலவையை பூசி வரலாம்.

துளசி இலையுடன் கிராம்பு சேர்த்து வாயில் இட்டு மெல்ல பல்வலி குணமாகும்

துளசி இலையை அரைத்து நெற்றியில் பூச தலைவலி குணமாகும்.

துளசி இலையை அரைத்து முகம் முழுவதும் பூசி தண்ணீர் விட்டு அலச, பருக்கள், வேர்க்குரு, முகஎரிச்சல், கரும்புள்ளி தழும்பு குணமாகும். தோல்பட்டை பளபளப்பாகும்.

துளசி இலையினைப் பறித்து துணியில் சுற்றி தலையனையாக பயன்படுத்தி இரவு படுத்துவர தலையில் உள்ள பேன், பொடுகு ஓடி விடும்.

துளசி இலைச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்த பின்பு அதனை புண்களில் தடவ எரிச்சல் நீங்கும்.

முருகன்


Spread the love