குடசப்பாலை

Spread the love

சர்ம நோய்களுக்கும், சர்ம பராமரிப்புக்கும் தேவையான பல மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று குடசப்பாலை.

குடசப்பாலையின் இதர பெயர்கள் – வெட்பாலை, குளப்பாலை  குடசப்பாலை ஒரு சிறு மரம் அல்லது பெரிய செடி 12 (அ) 15 அடி உயரம் வளரும். மரத்தில் எந்த பாகத்திலும் சிறிது காயப்படுத்தினாலே, பால் கசியும் மரப்பட்டை பழுப்பு நிறத்தில் இருக்கும். இலைகள் 8 லிருந்து 24 செ.மீ. நீளமாகவும், 4 லிருந்து 10 செ.மீ. அகலமாகவும் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறிதளவு வாசனையுடன் இருக்கும். விதைகள் காற்றில் பரவுவதற்கு ஏற்றதாக பட்டுப்போன்ற முடிகளுடன் இருக்கும். இந்தியா முழுவதும் குடாஜ மரத்தை காணலாம்.

உபயோகமாகும் பாகங்கள் – பட்டை, விதை.

பயன்கள்

தாவரவியலின் பெயருக்கு ஏற்றபடி குடசப்பாலை பேதியை நிறுத்தும். பேதிக்கு நல்ல மருந்தாகும் குடசப்பாலை. மரப்பட்டை கஷாயம் இரு வேளை தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சர்ம நோய்களுக்கு இதன் மரப்பட்டையை களிம்பாக அரைத்து பசுமாட்டு சிறுநீருடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசலாம்.

மரப்பட்டை கஷாயத்தை இஞ்சியுடன் சேர்த்துக் கொடுக்க, இரத்தம் கசியும் மூலநோயை கட்டுப்படுத்தலாம்.

குடசப்பாலையின் பட்டையை பொடியாக்கி, 1 ஸ்பூன் சந்தனப்பொடியை சேர்த்துக் குழைத்து பருக்கள், தழும்புகள் மேல் தடவினால் அவை மறையும்.

வயிற்றுப்பூச்சிகளை ஒழிக்கவும் குடசப்பாலையின் விதைகள் உதவுகின்றன. உலர்ந்த விதைகளின் பொடியை 1/2 ஸ்பூன் தினமும் இரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

பட்டை சாற்றை எண்ணையிலிட்டு காய்ச்சி, கரப்பான், சொறி, சிரங்கு முதலிய சர்ம நோய்களுக்கு தடவ, அவை குணமாகும்.

பட்டையை குடிநீரிலிட்டு வாய் கொப்பளிக்க, பல் வலி நீங்கும்.

உணவு நலம் நவம்பர் 2011

குடசப்பாலை, மூலிகைகள், பயன்கள், குடசப்பாலையின் விதை,


Spread the love