உயர் ரத்த அழுத்தம் – சமாளிப்பது எப்படி?

Spread the love

உயர் ரத்த அழுத்தம் தற்போது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. அதுவும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இல்லையென்றால் அது ஒரு அதிசயம் தான்! இரத்த அழுத்தத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுமுன், நாம் இதயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதயம்

இதயம் ஓய்வின்றி உழைக்கும் அவயம். கூம்பு வடிவத்தில் 275 லிருந்து 400 கிராம் எடையுடன், கை முட்டி அளவில் அமைந்திருக்கிறது. இதன் முக்கியமான பணிகள் நமது வீட்டு தோட்டத்தில் உள்ள பம்ப் போல் இதயம் எல்லா அவயங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்கிறது. இரத்தம் 91% நீரினாலும், 9% இதர பொருட்களால் ஆனது. ரத்த குழாய்கள் வழியே இரத்தம் உடலின் எல்லா பாகங்களுக்கும் பிராண வாயுவையும் உயிர்ச்சத்துக்களையும் எடுத்து செல்கிறது. ரத்தம் கொண்டு செல்லும் ஆக்சிஜனை (பிராண வாயு) எல்லா உறுப்புகளும் பெற்றுக் கொண்டு, பதிலுக்கு கரியமில வாயுவை தருகின்றன. இதயத்திற்கு அதிக அளவில் ரத்தம் தேவை. இதன் நாளங்களான கரோனரி தமனி எனப்படும் மகாதமனி மூலம், இதயம் உயிர்ச்சத்துக்களையும், பிராண வாயுவையும் பெறுகிறது.

இதயம், உடலில் ரத்த ஒட்டத்தை இயக்க, இரு வித அழுத்தங்களை உண்டாக்குகிறது.

விரிந்து அழுத்தத்தை உண்டாக்குவது. விரிவதால், உடலின் எல்லா பாகங்களிலிருந்து வரும் அசுத்த ரத்தத்தை வாங்கிக் கொள்கிறது. இதை டையஸ்டோல்அழுத்தம் என்பார்கள்.

சுருங்கி அழுத்தத்தை உண்டாக்குவது உள்வாங்கியதை பம்பில் செய்யும் இந்த அழுத்தம் சிஸ்டாலிக் எனப்படுகிறது.

இதயம் 1 நிமிடத்திற்கு சராசரியாக 72 முறை சுருங்கி விரிகிறது. சுருங்குவதற்கு 0.3 வினாடியும் விரிவதற்கு 0.5 வினாடிகளும் எடுத்துக் கொள்கிறது. இதயம் ஒரு முறை துடிப்பதற்கு (சுருங்கி விரிவதற்கு) 0.8 வினாடிகள் ஆகின்றன. ஒரு நிமிடத்தில் இதயம் 5 லிட்டர், ஒரு நாளுக்கு 7200 லிட்டர் என்ற அளவில் உடலில் ரத்தத்தை பம்ப் செய்கிறது. நமது உடலில் உள்ள மொத்த ரத்தம் 5 லிட்டர் ஆகும். இதுவே திரும்ப, திரும்ப பம்ப் செய்யப்படுகிறது. உடலில், ஒரு நிமிடத்தில் 60000 மைல் தூரத்திற்கு இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும்.

ரத்த அழுத்த அளவுகள்

உடலின் எல்லா பாகங்களும் இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும் போது ரத்த அழுத்தம் உண்டாகிறது. ரத்த அழுத்தம் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. காலையில் குறைவாகவும் மாலையில் அதிகமாகவும் இருக்கும். உறங்கும் போது குறைவாக இருக்கும். உடற்பயிற்சி செய்யும் போதும் கோபதாபங்களின் போதும் ரத்த அழுத்தம் தற்காலிகமாக அதிகரிக்கும்.

ரத்த அழுத்தத்தை அளக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய முறைகள்

ஒரு சில முன்னெச்சரிக்கைகளை அனுசரித்தால் உங்கள் இரத்த அழுத்த அளவு சரியாக அமையும்.

நீங்கள் சிகிச்சை பெறும் இடத்திற்கு அவசரமாகச் சென்றால், உங்கள் சுவாசம் சாதாரண நிலையை அடையும் வரை காத்திருந்து, பிறகு, உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடுங்கள்.

உணவு உட்கொண்டவுடன், உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்காதீர்கள்.

சிறுநீர் கழித்தவுடன், உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்காதீர்கள்.

நீங்கள் பதட்டமாக இருக்கும் போது, உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்காதீர்கள்.

மருத்துவரின் சிகிச்சை நிலையத்தில், நீங்கள் ஒரு உயரம் குறைந்த நாற்காலியிலோ, மேஜையிலோ அமர்ந்திருந்தால், உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்கும் போது, முன்பக்கமாகக் குனியாதீர்கள்.

உங்கள் இரத்த அழுத்தத்தை அளக்கும் போது, கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்காராதீர்கள்.

உயர் ரத்த அழுத்தம்

ஒரு நபருக்குத் தொடர்ந்து ஒரே நிலையில், 120/80 எம்.எம்.எச்.ஜிக்கு அதிகமாக இரத்த அழுத்தம் இருந்தால் அவர் உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறார் எனக் கூறலாம். மருத்துவர்கள் இதனை இரத்தக்கொதிப்பு என்று கூறுவார்கள்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதின் அவசியம்

உயர் ரத்த அழுத்தம் குறைக்கப்படாவிட்டால் ஏற்படும் விளைவுகள்

மாரடைப்பு

இதயம் பெரிதாகி, பழுதாகிவிடும்

இரத்தக்குழாய்கள் சிறுத்துப் போதல்

சிறுநீரகம் பழுதாகும்

கண்கள் பாதிக்கப்படும்

ஆயுள் குறையும்

காரணங்கள்

பாரம்பரியம்

மனஅழுத்தம், டென்ஷன்

புகைப்பது, குடிப்பழக்கம்

அதிக உடல் எடை

பொட்டாசியம், கால்சியம் குறைபாடுகள்

உணவில் உப்பை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது

சிறுநீரக பாதிப்புகள்

ஹார்மோன் கோளாறு

ஸ்டீராய்ட் கருத்தடை மாத்திரைகள்

ஹார்மோன் கோளாறுகள்

உடற்பயிற்சி இல்லாமை

அறிகுறிகள்

தலைவலி, தலைசுற்றல், வேகமான இதயத்துடிப்பு, தூக்கமின்மை, உடலுழைப்பின் பின்னர் மூச்சுத்திணறல், களைப்பு போன்றவை.

அபாய அறிவிப்பு

கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு காரணம் உங்களுக்கு இருந்தால் 6 மாதத்திற்கு ஒரு முறை இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளவும்.

நீங்கள் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால்

உங்கள் குடும்ப சரித்திரத்தில் இதய நோய்கள் இருந்தால்

நீங்கள் அதிக எடையுள்ள நபராக இருந்தால்

நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால்

நீங்கள் வழக்கமாக மதுபானம் அருந்துபவராக இருந்தால்

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவராக இருந்தால்

இருதய நோய், நீரிழிவு அல்லது சிறுநீரக பாதிப்பு போன்ற ஏதாவது பெரிய நோய்கள் உங்களுக்கு இருந்தால்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

இரத்த கொதிப்பை குணப்படுத்த முடியாது. ஆனால் மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றால் அதை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இதற்கான டிப்ஸ்

ஒழுங்காக மருந்தை உட்கொள்ளுங்கள்

பரிசோதனைக்காக ஒழுங்காக உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள்

உங்கள் உணவு முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள்

உடல் எடையைக் குறையுங்கள்

ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள்

உப்பு உட்கொள்வதைக் குறையுங்கள்

ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்

உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்

மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்

புகை பிடிப்பதை நிறுத்துங்கள்

மது அருந்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்

அதிக உடல் பருமன் அளவுக்கு அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்பு வரும் சாத்திய கூறுகள் 2 முதல் 6 மடங்கு அதிகமாகிறது. எடையை குறைக்க சில டிப்ஸ்

வறுத்த பொருட்கள், வெண்ணெய் போன்ற கொழுப்புப் பதார்த்தங்களைத் தவிருங்கள்.

நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள்.

ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, காரட், தக்காளி, முட்டைக்கோஸ், பீன்ஸ் முதலானவை நிறைந்த நார்ச்சத்துள்ள பொருட்களாகும்.

பசுமை இலையுள்ள காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை உண்ணுங்கள்.

சாப்பிடாமல் பட்டினியுடன் இருக்காதீர்கள்.

குறித்த நேரத்தில் உணவு உட்கொண்டு, உணவு முறைகளில் ஒரு ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள்.

விரைவாக உண்பதைத் தவிருங்கள்.

ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள்.

சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

கோதுமை, அரிசி, ராகி (கேழ்வரகு), சோளம் போன்ற தானியங்கள், முளைவிட்ட பருப்புகள், மீன், பசுமை இலையுள்ள காய்கறிகள் மற்றும் பழ வகைகள், சூரிய காந்திப் பூ, விதை எண்ணெய், சோயா விதை எண்ணெய் போன்ற தாவர வகை எண்ணெய்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

எண்ணெய் பதார்த்தங்கள், பாலாடைக் கட்டி, வெண்ணெய், நெய், டால்டா, பாமாயில், வறுத்த உணவு வகைகள், வறுவல்கள், கோழி, மாமிச உணவுகள், ஊறுகாய், அப்பளம் மற்றும் சாஸ் வகைகள் மேலும் சாக்லேட் போன்ற இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம், கேக், குளிர்பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி மற்றும் யோகாவின் நன்மைகள்

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு, உடற்பயிற்சி உங்களுக்குப் பலவழிகளிலும் உதவி செய்யும்.

உங்களது அதிகரித்த இரத்த அழுத்தத்தை இது குறைக்க உதவுகிறது.

இது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து உங்களை ஒய்வாக உணரச் செய்கிறது

மாரடைப்பு, செயலிழப்பு போன்ற பெரிய சிக்கல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறது.

உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவது போன்ற அபாயத்தைக் குறைக்கிறது.

யோகாசனங்களும், (கை கால்கள்) விரித்துச் செய்யும் உடற்பயிற்சிகளும், தசைகளைத் தளர்த்துவதற்கு உதவி செய்கின்றன. ஒரு ஆசிரியரின் முன்னிலையில் இவ்வகை உடற்பயிற்சிகளைச் செய்தல் எப்பொழுதும் நல்லது. நடப்பது சிறந்த பயிற்சி. தினம் 1/2 மணியாவது நடக்க வேண்டும்.

உடற்பயிற்சி, யோகா செய்யும் முன்பு உங்கள் டாக்டரை கலந்தாலோசிப்பது நல்லது.

உணவு முறை

முன்பே சொன்னபடி, உணவில் உப்பை குறைப்பது அவசியம். சோடியம் உப்புக்கு பதிலாக பொட்டாசியம் செறிந்த ஆரஞ்சு, வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பட்டாணி இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆன்டி ஆக்சிடன்ட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆன்டி ஆக்சிடன்ட் என்றால் என்ன?

ஆன்டி ஆக்சிடன்ட் என்பது உங்கள் உடலை ஃப்ரீரேடிகல்ஸ் என்பதிலிருந்து காப்பாற்றும் ஒரு பொருளாகும். இவை உங்கள் உணவில் உள்ளன. ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ள உணவை உண்பதால், ஃப்ரிரேடிகல்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்கலாம்.

ஃப்ரீரேடிகல்ஸ் என்பவை என்ன?

ஃப்ரீரேடிகல்ஸ் என்பது, நாம் சாதாரணமாக வேலை செய்யும் போது, நமது உடலில் உற்பத்தியாகும் பொருட்களாகும். இவை, விலை மதிப்பான சாமான்களை எதிர்நோக்கியிருக்கும் கொள்ளைக்காரர்கள் போன்றவை. கொள்ளையர்கள் எப்பொழுதும் பிறரைத் தாக்கி அவர்களிடமிருக்கும் பொருட்களைப் பறித்துச் சென்று தமதாக்கிக் கொள்வார்கள். அது போலவே ஃப்ரீரேடிகல்கள் நமது உடலுக்குள், உயிரணுக்களைத் தாக்கி அவற்றிற்குக் கெடுதி விளைவிக்கின்றன. உயிர்சத்துக்கள் (வைட்டமின்கள்) மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் உபயோகிப்பதன் மூலம், இவற்றை நாம் எதிர் கொள்ளலாம்.

ஆன்டி ஆக்சிடன்ட் உள்ள உணவுகளின் பட்டியல்

ஆன்டி ஆக்சிடன்ட்கள்

வைட்டமின் இ

வைட்டமின் C

துத்தநாகம் (ஸிங்க்)

செலினியம்

ஃபோலிக் ஆஸிட்

வைட்டமின் H 12

வைட்டமின் H 6

உணவு வகைகள்

சோயாபீன்ஸ், சூரியகாந்தி மற்றும் தானிய எண்ணெய்கள், கடலைகள், கோதுமை முளை.

புளிப்புப் பழங்கள் (எலுமிச்சை வகைகள்), பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி.

கடல் உணவுகள், குறிப்பாக கிளிஞ்சல்கள், சிப்பிகள்.

தானியங்கள், சூரியகாந்தி விதைகள், மாமிசம், கடலுணவுகள், நாய்க்குடைகள்.

ஆரஞ்சு, தானிய வகைகள், கீரைகள், பசுமையான இலையுள்ள காய்கறிகள்.

உருளைக்கிழங்கு, வாழைப்பழம், தானியங்கள், மாமிசம்.

தானியங்கள்.

பூண்டு இரத்தக் கொதிப்பை குறைக்கும். பூண்டை சிறிதாக நறுக்கி ஒரு கப் பாலில் காய்ச்சி இரவில் சாப்பிடவும்.

ஆயுர்வேதம்.காம் ஜனவரி 2011

உயர் ரத்த அழுத்தம், சமாளிப்பது, எப்படி, இரத்த அழுத்தம், இதயம்,

ரத்தம், இரத்தம், ரத்த குழாய்கள், ஆக்சிஜன், உறுப்பு, கரோனரி தமனி, மகாதமனி, உடலில் ரத்த ஒட்டம், டையஸ்டோல், சிஸ்டாலிக், ரத்த, அழுத்த, அளவுகள், உடற்பயிற்சி, ரத்த, அழுத்தத்தை, அளக்கும், மேற்கொள்ள, வேண்டிய, முறைகள், இரத்த அழுத்த அளவு, சிகிச்சை, சிறுநீர் கழித்தவுடன், பதட்டம், மருத்துவர், இரத்தக்கொதிப்பு, உயர் ரத்த அழுத்தத்தை, கட்டுப்படுத்துவதின், அவசியம், உயர் ரத்த அழுத்தம், குறைக்கப்படாவிட்டால், ஏற்படும், விளைவுகள், மாரடைப்பு, இதயம் பழுதாகிவிடும், இரத்தக்குழாய்கள், சிறுநீரகம் பழுதாகும், கண்கள் பாதிக்கப்படும், ஆயுள் குறையும், காரணங்கள், பாரம்பரியம், மனஅழுத்தம், டென்ஷன், புகைப்பது, குடிப்பழக்கம், அதிக உடல் எடை, பொட்டாசியம், கால்சிய குறைபாடுகள், சிறுநீரக பாதிப்புகள், ஹார்மோன் ஸ்டீராய்ட், கருத்தடை மாத்திரைகள், ஹார்மோன் கோளாறுகள், உடற்பயிற்சி இல்லாமை, அறிகுறிகள், தலைவலி, தலைசுற்றல், வேகமான இதயத்துடிப்பு, தூக்கமின்மை, மூச்சுத்திணறல், களைப்பு, அபாய, அறிவிப்பு, இதய நோய்கள், அதிக எடை, புகை பிடிப்பவர், மதுபானம் அருந்துபவராக, இருதய நோய், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, நோய்கள், உயர், ரத்த அழுத்தத்தை, கட்டுப்படுத்த, இரத்த கொதிப்பு, மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை, உடற்பயிற்சி, யோகா, மருத்துவரிடம் செல்லுங்கள், உணவு முறை, உடல் எடையை குறையுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்,

ஆயுர்வேதம்.காம் ஜனவரி 2011

உயர் ரத்த அழுத்தம், சமாளிப்பது, எப்படி, மன அழுத்தம், புகை பிடிப்பதை நிறுத்துங்கள், மது அருந்துவது, உடல் பருமன், சேர்த்துக், கொள்ள, வேண்டிய, உணவுகள், கோதுமை, அரிசி, ராகி, கேழ்வரகு, சோளம், தானியங்கள், முளைவிட்ட பருப்புகள், மீன், காய்கறிகள் பழ வகைகள், சூரிய காந்திப் பூ, விதை எண்ணெய், சோயா விதை எண்ணெய், தவிர்க்க, வேண்டிய, உணவுகள், எண்ணெய் பதார்த்தங்கள், பாலாடைக் கட்டி, வெண்ணெய், நெய், டால்டா, பாமாயில், வறுத்த உணவு வகைகள், வறுவல்கள், கோழி, மாமிச உணவுகள், ஊறுகாய், அப்பளம், சாஸ் வகைகள், சாக்லேட், இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம், கேக், குளிர்பானங்கள், உடற்பயிற்சி, மற்றும், யோகாவின், நன்மைகள், ஆரோக்கியமான வாழ்க்கை, மாரடைப்பு, செயலிழப்பு, நீரிழிவு நோய், யோகாசனங்களும், உடற்பயிற்சிகளும், டாக்டர், உணவு முறை,

ஆன்டி ஆக்சிடன்ட், என்றால், என்ன, உடலை, ஃப்ரீரேடிகல்ஸ், உடலுக்குள், உயிரணுக்கள், உயிர்சத்துக்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட், உள்ள, உணவுகளின், பட்டியல், வைட்டமின், , வைட்டமின், சி, துத்தநாகம், செலினியம், ஃபோலிக் ஆஸிட், வைட்டமின், பி, 12, வைட்டமின், பி, 6,

உணவு வகைகள், சோயாபீன்ஸ், சூரியகாந்தி, தானிய எண்ணெய்கள், கடலைகள், கோதுமை முளை, புளிப்புப் பழங்கள், எலுமிச்சை வகைகள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, கடல் உணவுகள், கிளிஞ்சல்கள், சிப்பிகள், தானியங்கள், சூரியகாந்தி விதைகள், மாமிசம், கடலுணவுகள், நாய்க்குடைகள், கீரைகள், உருளைக்கிழங்கு, வாழைப்பழம், இரத்தக் கொதிப்பு,


Spread the love
error: Content is protected !!