பெண்களின் உயர் இரத்த அழுத்தம்

Spread the love

முன்தினம் சமைத்த உணவுகளை வீணாக்கக் கூடாதே என்று பிரிட்ஜில் வைத்து மறுநாள் உட்கொள்வது பெரும்பாலான பெண்களின் பழக்கமாக உள்ளது. சமைத்து நான்கு மணி நேரத்திற்கு பிறகு சாப்பிடும் உணவு விஷமாகி விடுகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பெண்கள் கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக உட்கொள்வது கூடாது.

இவ்வாறு கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டு வருவது உயர் இரத்த அழுத்த நோயை வரவழைத்து விடும். பொதுவாக மாதவிடாய் நிற்கும் பொழுது அல்லது நின்றபின்பு தான் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். பெரும்பாலான பெண்கள், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடல் பருமனும் ஏற்பட்டு விடும்.

கருவுற்ற சமயங்களிலும் பெண்களில் சிலர் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படச் சந்தர்ப்பம் உண்டு. இதில் இரு வகையினார் உள்ளனர். ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் இருந்து கருவுற்ற பெண்கள் ஒரு பிரிவு கருவுற்றதன் காரணமாகவே உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இரண்டாவது பிரிவினர் ஆகும்.

இரண்டாவது பிரிவினருக்கு ‘பிளசெண்டா’வில் இரத்த ஓட்டம் குறையலாம். இதன் காரணமாக கரு வளர்ச்சி பாதிக்கப்படலாம். ஜன்னி என்ற காய்ச்சல் ஏற்பட சந்தர்ப்பும் உண்டு. எனவே, கருவுற்ற பெண்கள் தங்கள் இரத்த அழுத்த அளவை மருத்துவ ஆலோசனை படி கண்டு, சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

பெண்களின் வாழ்க்கையில் இளமை பருவம், முதுமை பருவத்திற்கு இடையே நடுத்தர வயது பருவம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நாற்பது வயது அடையும் பெரும்பாலான பெண்களுக்கு, அவர்களின் முதுகு, விலா, கரங்களின் பின்பகுதிகளில் சதை அதிகரித்துத் தொங்குவதைக் கவனிக்கலாம். இதற்குக் காரணம் என்ன?

கொழுப்புப் பொருட்களை அவர்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதாலும், அவர்களின் ஒரு நாளுக்கு சாப்பிடும் சாப்பாட்டின் அளவுக்கு ஏற்ற போதுமான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்வதில்லை என்பதுவே காரணம் ஆகும். மேற்கூறிய காரணங்களினால் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணமாகி விடுகிறது. மதிய உணவிற்குப் பின்பு சிறிது நேரம் ஓய்வு அல்லது தூக்கம் போடுவது தவறு அல்ல. ஆனால், அதுவே தினசரி பழக்கமாகி விடக் கூடாது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு பெண்களுக்குரிய உணவுக் குறிப்புகள்

கீரை வகைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை வாழைத் தண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் இருமுறை பாகற்காய் கூட்டு அல்லது குழம்பு உட்கொள்ளலாம். மாதம் இருமுறை பாகற்காய் கூட்டு அல்லது குழம்பு உட்கொள்ளலாம். மாதம் இருமுறை வாழைப் பூவை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நெல்லிக் காயை துண்டுகளாக்கி நிழலில் உலர்த்தி, தேன் விட்டு ஊற வைத்து, தினசரி படுக்கைக்குச் செல்லும் முன்பு ஓரிரு துண்டுகள் சுவைத்துச் சாப்பிட்டு சூடான பால் அருந்தி வர வேண்டும். வாரம் ஒரு நாள் மாலைப் பொழுது காய்கறி சாலட், தயாரித்து சாப்பிட நல்லது. இதற்கு காரட், பீட்ரூட், முட்டைக் கோஸ் நறுக்கிப் போட்டு எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.

பழ வகைகளிலும் சாலட் தயாரித்துக் கொள்ளலாம். வாழைப் பழம், கொய்யாப்பழம், பேரிச்சம் பழம், திராட்சை, ஆரஞ்சுப் பழங்களை துண்டுகளாக நறுக்கி தேன் கலந்து ஏலக்காய்ச் சேர்த்துக் கொள்ளவும். முளைவிட்ட பயறு வகைகள் மிகவும் நல்லது. பயறு வகைகலை காலை ஒரு துணியில் போட்டு, முடிச்சாகக் கட்டி தொங்க விடுங்கள். மறுநாள் காலை அதை அவிழ்த்துப் பார்த்தால் தானியங்களில் முளை விட்டிருக்கும். இரண்டு மூன்று ஸ்பூன் தினசரி காலை இதனைச் சாப்பிட்டு வரலாம். பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். ஆனால், சத்துள்ள உணவாக அமையும். உடல் பருமன் உள்ளவர்களுக்கும் இது மிகச் சிறந்தது.

உணவில் அதிக உப்பு சேர்க்கக் கூடாது. அதிக கொழுப்புச் சத்துள்ள உணவை உட்கொள்வதும் தவிர்க்க வேண்டும். 50 வயது ஆயிற்றா? இரவில் கோதுமை உணவினைச் சாப்பிடுங்கள். அல்லது இரவி உணவை முடிந்தவரைக் குறைத்துக் கொள்ளுங்கள். இரவில் சரியான தூக்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் அதிக நேரம் கண் விழித்தலைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கோபபடுவது, டென்ஷனாக காணப்படுவது குறைத்துக் கொள்ள வேண்டும்.

கோபம், எரிச்சல், கவலையுடன் கூடிய மனநிலையில் இருந்து விட யோகா, தியானம், பிரணாயமப் பயிற்சி மேற்கொள்ளலாம். காலை, மாலை மெது நடைப் பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக பெண்களுக்கு மார்பு வலி ஏற்படலாம். இதனைத் தவிர்க்க அல்லது குணப்படுத்த வெந்தயக் கீரையை நீர் விட்டு நன்றாக அலசி சுத்தம் செய்த பின்பு, 250 மி.லி. நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் ஆற வைத்து, வடிகட்டிய நீருடன் தேன் கலந்து இரண்டு அவுன்ஸ் காலை, மாலை என இரண்டு வேளை தினசரி உட்கொண்டு வரலாம்.

மேலும், எளிதான வைத்தியமாக, பசுவின் பாலில், வெள்ளைப் பூண்டுப் பற்கள் ஓரிரண்டு எடுத்துக் கொண்டு காய்ச்சி வடிகட்டிக் கொண்டு அருந்தி வரலாம். அல்லது சிறிதளவு சீரகத்தை எடுத்து, ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி, அதில் பாதியளவு சுண்டியவுடன் ஆற வைத்து, வடிகட்டிய பின்னர் சிறிது தேன் கலந்து அருந்தி வரலாம்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் புளிப்பில்லாத தயிரை அருந்தி வரலாம். ரத்தக் குழாயில் படிந்திருக்கும் கொலஸ்ட்ரால் கொழுப்புப் படிவத்தை தயிரானது கரைத்து விடும். தயிரை நீர் விட்டு சிறிது உப்புச் சேர்த்து மோராக அருந்தி வரலாம். இதனால், தாகம் கட்டுப்படும். உடல் சூடும் தணியும்.

அரிசி, கோதுமை உணவை ஒரு பங்கு சாப்பிடுகிறீர்கள் என்றால், அதற்கு இரண்டு மடங்கு அளவு காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புகையிலை, சிகரெட், சுருட்டு போதை வஸ்துகள், மது வகைகளை தவிர்க்க வேண்டும். இரத்தக் குழாய்களை இவை சுருங்க வைத்து விடுகிறது. இதனால், இரத்த அழுத்தம் தானாகவே ஏற்பட்டு விடுகிறது.

வைட்டமின் C சத்தானது மனிதனின் உடலுக்கு அவசியமான ஒன்றாகும். வைட்டமின் C சத்து, இரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ராலை சிறிது சிறிதாக கரைக்க உதவி செய்கிறது. கொழுப்புக் கொலஸ்ட்ராலும் இதயத்திற்கு, இதயத்தின் இயக்கம் சீராக செயல்படுவதை தடுக்கிறது. இதனால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

அதிகப்படியான புரதச் சத்து பல வகையான யூரிக் அமில உப்புகளாக மாறி இரத்தத்தோடு கலந்து விடுகிறது. இந்த இரத்தத்தை சுத்தபப்டுத்தும் சிறுநீரகங்களுக்கும் இது மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. யூரிக் அமில உப்புகள் சிறிது சிறிதாக இரத்த நாளங்களில் படிந்து அதிகரிப்பதன் காரணமாக, உயர் இரத்த அழுத்தம் வரை கொண்டு செல்கிறது.

தாவர எண்ணெய்களில் அவ்வளவாக கொழுப்புச் சத்து இருப்பதில்லை. நல்லெண்ணெயில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. ஆனால், கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தாவர எண்ணெய்களில் லெசிடின் என்ற பொருள் அடங்கியிருக்கிறது. இது கொலஸ்ட்ராலை சிறு துண்டுகளாக உடைத்து, அதை நமது உடலுக்கு பயனுள்ளதாக மாறி விடுகிறது.

கடையில் விற்கும் சமையல் எண்ணெய்களில் பலவித கலப்படங்கள் காணப்படுகின்றன. மேற்கூறிய எண்ணெய் வகைகளில், ஹைட்ரஜன் வாயுவை கலந்து நீண்ட நாள் கெடாமலிக்கப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இவை நமக்கு உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து விடுகிறது.


Spread the love