ஆரோக்கியமான கர்ப்பம் தரித்தலுக்கு உங்களது இரத்த அழுத்தத்தின் அளவை கண்காணித்து பராமரித்து வர வேண்டும். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும் கரப்பம் தரித்த ஆரம்ப காலங்களிலும் கர்ப்பச் சிதைவு ஏற்படும் வாய்ப்பானது அதிகரிக்கும், இரத்த அழுத்தம் காரணமாக அதிகரிக்கும் என்று தற்போதைய மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.
இதனை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் உயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் 1228 நபர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களின் ஒட்டுமொத்த சராசரி வயது 28.7 ஆண்டுகள் ஆகும். ஏற்கெனவே கருக்கலைந்து போன அவர்களுக்கு மீண்டும் கரப்பம் தரிக்கச் செய்தனர். கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவர்களது இரத்த அழுத்தம் கணக்கெடுக்கப்பட்டது.
கர்ப்பம் தரித்த ஆரம்ப காலத்திலும் அவர்களின் இரத்த அழுத்தம் கணக்கிடப்பட்டது. கர்ப்பம் தரிக்கும் முன்னர் அவர்களது சராசரி இரத்த அழுத்த அளவு 111.6/72 mmhg என்று இருந்தது. பரிசோதனைக் காலத்தில் ஆறு மாதத்திற்குள் கர்ப்பம் தரித்த 797 பெண்களில் 24 சதவீதம் பேர் மீண்டும் கர்ப்பச் சிதைவு அடைந்தனர்.
டையாஸ்டோலிக் இரத்த அழுத்தத்தின் ஒவ்வொரு 10 பாயிண்டுகள் அதிகரிக்கும் பொழுது 18 சதவீத கர்ப்பச் சிதைவுக்கு வாய்ப்பு காணப்படுகிறது. அது போல தமனி சராசரி இரத்த அழுத்தத்தில் ஒவ்வொரு 10 பாயிண்டுகள் அதிகரிக்கும் பொழுது 17 சதவீத கர்ப்பச் சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மேலும் ஆராய்ச்சி கூறுகிறது.