அதிகம் உப்பு சேர்ந்தவற்றையும் இனிப்பு பலகாரங்களையும் நீக்கிவிடுங்கள் Read meat எனப்படும் கொழுப்பு மிகுந்த இறைச்சி, கருவாடு, முட்டை மஞ்சள் ஆகியவற்றை உணவில் இருந்து விலகுதல் அவசியம் ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், சைனீஸ் உணவுகள் போன்றவை வேண்டாம்.
· பொட்டாஷியம் தாராளம் உள்ள வாழைப்பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளை கிழங்கு கீரை வகைகள் அதிகம் சேர்க்கவும்.
· ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகளும்,வைட்டமின் ‘சி’ யும் நிறைய உள்ள காய்கறிகள் பழங்கள் உண்ணுங்கள்.
· ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் வகைகளைத் தெரிந்தெடுத்து உட்கொள்ளுங்கள்.
· நார்ச்சத்துள்ள உணவுகளும், புரோட்டீனும், மக்னீஷியமும் அடங்கிய விதைகள், கொட்டைகள் பயிறு வகைகளைச் சேர்த்துக் கொள்க.
· கொழுப்பு நீக்கிய பாலை உபயோகியுங்கள்.
· டார்க் சோக்லேட் (Dark chocolate) சிறிய அளவில் உட்கொள்ளலாம். இவற்றில் அடங்கிய மக்னீஷியம் உதவியாக இருக்கும்.
· காபி, டீ, கோலா முதலியவற்றை உணவுப் பட்டியலில் இருந்து நீக்குவது நல்லது.