முடி அடர்த்தியாக வளர மூலிகைகள்

Spread the love

தலைமுடி கொட்டுகிற பிரச்சனை இப்போதெல்லாம் அனைத்து தரப்பு மக்களிடமும் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இக்காலத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மாறி வரும் உணவுப்பழக்கம், கலாச்சார சீர்கேடு முதலியவை தான்.  பலருக்கு முடி வளர்ச்சியே அதிகமாக இருப்பதில்லை அதுனால் முடியின் அடர்த்தியும் குறைந்திருக்கும். இதற்கு தீர்வு ஆயுர்வேதத்தில் உள்ளது. வீட்டிலேயே இந்த ஆயுர்வேத மூலிகைகளைப் பயன்படுத்தி எப்படி முடி வளர்ச்சியை அதிகரிப்பதென்றும், முடி கொட்டுவதை குறைப்பதை எப்படி என்பதைப் பற்றியும் தான் இப்பொழுது நாம் இதில் பார்க்கப்போகிறோம்.

கரிசலாங்கண்ணி, எனப்படும் மூலிகை தோல் மற்றும் முடி வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும் ஓர் எளிய மூலிகையாகும். இதைத் தான் ஆயுர்வேதத்தில் “பிரிங்கராஜ்” என்று அழைக்கப்படுகிறது. இந்த “பிரிங்கராஜ்” எண்ணை நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.   நம் வீட்டிலும்  இதை தயார் செய்ய முடியும். இந்த எண்ணையை தலைக்குத் தேய்க்கும் போழுது தலைமுடிக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து முடி அடர்த்தியாக வளர உதவி செய்கிறது இந்த கரிசலாங்கண்ணி எண்ணை.

1.            வெந்தயம், ஆயுர்வேதத்தில் வெந்தயம் பல ஆயிரம் வருடங்களாக நமது தலைமுடிக்காகவும், நம்ம உடல்நலத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில். ஃபோலிக் அமிலம், வைட்டமின் கி, வைட்டமின் ரி, வைட்டமின் சி ஆகியவை மிக அதிகமாக  இருக்கிறது.. அத்துடனின்றி பொட்டாசியம், கால்சியம், இரும்பு எல்லாமே இருக்கிறது.. வெந்தயத்தில் உள்ள  அதிகமான புரோட்டினும் நிகோடினும் முடி கொட்டுவதை தடுக்கவும், பொடுகு தொல்லை வராமல் தடுக்கவும் உதவுகிறது.   இதில் வெந்தயம் முடியை மிருதுவாக்குகிறது, முடி வறட்சியடையாமல் பாதுகாப்பது மட்டுமல்ல வழுக்கை விழாமலும், முடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது.

2.            நெல்லி எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்யும்போது மயிர்க்கால்களும், மண்டையோடும் சேருமிடத்தில் இரத்த ஓட்டம் அதிகமாகும். அதன் காரணமாக முடிவளர்வதும் அதிகமாகும். தலையிலுள்ள அழுக்கும், பொடுகும் நீக்குவதற்கு நெல்லிக்காய் எண்ணை பயன்படும். தலைமுடி நன்ராக வளர்வதற்கு வைட்டமின் சி மிகவும் அவசியம், அது நெல்லிகாயில் அதிகமாகவே உள்ளது.

3.            திரிபலா, உடைபட்ட முடிகளை சரி செய்து முடியை வளர வைக்க திரிபலா உதவுகிறது. திரிபலாவில் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் முடியை வளரவைக்கும் ஊக்கிகளும் உள்ளது. பொடுகு வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் திரிபலா பொடி உதவுகிறது. நம் ஜீரணமண்டலம் சரியாக வேலை செய்யாவிட்டாலும் முடி கொட்டும் பிரச்சனை வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. திரிபலா பொடியை தேங்காய் எண்ணையுடன்  சேர்த்துத் தலையில தேய்த்துக்கொள்வதின்  மூலமாக முடி பிரச்சனைகளும், அஜீரண பிரச்சனைகளும் சரியாகும்.

4.            ப்ரம்மி, என்ற இந்த ஆயுர்வேத மூலிகை மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மனதை உற்சாகமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ப்ரம்மி எண்ணையை உபயோகிக்கும் போது தலை முடி வளர்ச்சியும், பொடுகுத் தொல்லையும் குறைகிறது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love