சீரக சூப்
தேவை
துவரம் பருப்பு – 1/2 கப்
எலுமிச்சம் சாறு – 1/2 மூடி
மிளகாய் வற்றல் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை
துவரம் பருப்பை நீர்விட்டு நன்கு வேகவைத்து மசிக்க வேண்டும். பிறகு மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். பின்பு சீரகம், மிளகு இரண்டையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்து பொடி செய்து சூப்பில் போட வேண்டும். நுரை நன்கு பொங்கி வந்ததும் எலுமிச்சம் சாறு சேர்க்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சீரகம் ஜீரண மண்டலத்தை வலுப்படுத்த வல்லது. ஜீரண சக்தியை தூண்டக் கூடியது.
மிளகு சூப்
தேவை
துவரம் பருப்பு – 1/4 கப்
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
மிளகு – 11/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
நெய் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் துவரம் பருப்பை நன்கு வேக வைக்கவும். பிறகு தெளிவாக தண்ணீரை இறுத்துக் கொள்ளவும். பிறகு புளியும் உப்பும் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க விடவும். புளி நீர் நன்கு கொதித்ததும் அதில் துவரம் பருப்பு நீரைக் கரைத்து ஊற்றவும். மிளகு, சீரகம், வேக வைத்த துவரம் பருப்பு தனியா ஆகிய எல்லாவற்றையும் நன்கு அரைத்து தண்ணீரில் கலந்து சூப்பில் ஊற்றவும். நுரை பொங்கி வாசனை வரும் போது கால் தேக்கரண்டி நெய்யில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சூப்பில் போட்டு இறக்கி பரிமாறவும்.
மிளகு சுவாச மண்டலத்தை வலுப்படுத்தவல்லது. சளியை வெளியேற்றக் கூடியது.